Home
News

இந்த டாப் 5 விஷயம் இல்லாத Smartwatch டோட்டல் வேஸ்ட்.! இது தெரியாம வாட்ச் வாங்குனாலும் வேஸ்ட்!

வெண்டைக்காயை உடைத்து பார்த்து வாங்க வேண்டும்.. முருங்கையை முறுக்கி பார்த்து வாங்க வேண்டும்.. தக்காளியை அமுக்கி பார்த்து வாங்க வேண்டும்.. ஒரு புது ஸ்மார்ட்வாட்சை எப்படி பார்த்து வாங்க வேண்டுமென்று உங்களில் யாருக்காவது தெரியுமா?

கட்டாயம் இந்த 5 விஷயம் தெரிஞ்சு தான் ஒரு புது ஸ்மார்ட் வாட்ச்சை (Smartwatch) வாங்கணும். அப்படி வாங்கினால் தான் நீங்கள் தேர்வு செய்யும் ஸ்மார்ட் வாட்ச் சிறந்த வாட்ச் ஆக இருக்கும். இல்லையென்றால், சந்தையில் கிடைக்கும் பல ஆயிரம் ஸ்மார்ட் வாட்ச் மாடல்களில் இருந்து ஏதோவொரு சுமார் ஸ்மார்ட் வாட்சை உங்களுக்கானதாக ஏமாந்து செலக்ட் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கிறது மக்களே.

இந்த டாப் 5 விஷயம் இல்லாத Smartwatch டோட்டல் வேஸ்ட்.! உடனே படிங்க!

ஒரு பெஸ்ட் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை வாங்க வேண்டும் என்றால், அதில் கட்டாயமாக இந்த 5 விஷயங்கள் இருக்கிறதா என்று நீங்கள் செக் செய்ய வேண்டும். ஒரு வேலை நீங்கள் இதற்கு முன்பே ஒரு Smartwatch-ஐ சொந்தமாக்கி இருந்தால், நீங்கள் வாங்கிய ஸ்மார்ட் வாட்ச் இல் இந்த 5 முக்கியமான விஷயங்கள் இருக்கிறதா என்று செக் செய்து பாருங்கள்.

பெஸ்டான ஸ்மார்ட் வாட்ச் என்றால் அதில் இந்த டாப் 5 அம்சங்கள் இருந்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், நீங்கள் வாங்க போகும் ஸ்மார்ட் வாட்ச் (Smartwatch) உங்கள் ஸ்மார்ட்போனுடன் எப்படி இணக்கமாகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஆம், உங்கள் ஸ்மார்ட்போனுடன் அதன் இணக்கத்தன்மை எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பெரும்பாலான ஸ்மார்ட்வாட்ச்கள் ஆண்ட்ராய்டு அல்லது iOS சாதனங்களில் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே ஸ்மார்ட்வாட்ச் உங்கள் ஃபோனின் இயக்க முறைமையுடன் இணக்கமாக இருப்பதை உறுதிசெய்யவும். சில ஸ்மார்ட் வாட்ச்கள் iOS சாதனங்களில் இயங்காது என்பதனால், இவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது. அடுத்தபடியாக, நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் Smartwatch-ன் டிஸ்பிளேவாகும்.

இந்த டாப் 5 விஷயம் இல்லாத Smartwatch டோட்டல் வேஸ்ட்.! உடனே படிங்க!

உங்கள் Smartwatch-ன் டிஸ்ப்ளே நேரடி சூரிய ஒளியில் கூட தெளிவாகவும், பிரகாசமாகவும், படிக்க எளிதாகவும் இருக்க வேண்டும். LCD டிஸ்ப்ளேக்களை விட OLED அல்லது AMOLED டிஸ்ப்ளேக்கள் கொண்ட ஸ்மார்ட்வாட்ச்கள் சிறந்த தெளிவு மற்றும் துல்லியமான வண்ணங்களை வழங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதேபோல், டிஸ்பிளே சைஸ் முக்கியமானது. உங்கள் மணிக்கட்டில் அணிய வசதியாக இருக்கும் டிஸ்பிளே அளவை தேர்வு செய்யுங்கள்.

அடுத்தபடியாக, கவனிக்க வேண்டிய முக்கிய காரணி உங்கள் Smartwatch-ன் பேட்டரி ஆயுள் ஆகும். நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்வாட்ச்சில் சீக்கிரம் பேட்டரி தீர்ந்துவிட்டால், அது பயனற்றதாகிவிடுகிறது. உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து குறைந்தபட்சம் 2-3 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்கும் ஸ்மார்ட்வாட்சைப் பார்க்கவும். இப்போது 7 முதல் 10 நாட்கள் நீடிக்கும் வாட்ச்களே வாங்க கிடைக்கின்றன. அதேபோல், சார்ஜ் செய்யும் நேரத்தையும் கருத்தில் கொள்ளவும். வயர்லெஸ் சார்ஜிங் இருந்தால் கூடுதல் சிறப்பு.

அடுத்தபடியாக, உங்கள் வாட்ச் உங்கள் உடலில் எதையெல்லாம் கண்காணிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். பலர் தங்கள் உடற்பயிற்சி இலக்குகளைக் கண்காணிக்க ஸ்மார்ட்வாட்ச்களை வாங்குகிறார்கள். இதய துடிப்பு கண்காணிப்பு, ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு போன்ற துல்லியமான கண்காணிப்பு அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்வாட்சைத் தேடுங்கள். அடுத்தபடியாக, மியூசிக் பிளேபேக், NFC, வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சம் உள்ளதா என்று பார்க்கவும்.

சந்தையில் பல Smartwatch விருப்பங்கள் இருப்பதால், சரியான ஸ்மார்ட்வாட்சைத் தேர்ந்தெடுப்பது மிகப் பெரிய விஷயமாக இருக்கும். கட்டாயம் சிலருக்குக் குழப்பமாக இருக்கும். இருப்பினும் இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற ஸ்மார்ட்வாட்சை நீங்கள் தேர்வு செய்தால், கட்டாயம் அந்த மாடல் உங்களுக்கான பெஸ்ட் Smartwatch மாடலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Best Mobiles in India

English summary
Top 5 Main Things To Keep In Mind Before Buying a New Smartwatch Device in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X