Home
News

1 மாதம் முழுக்க டெய்லி டேட்டா வேணும்! ஆனா ரூ.200-க்கு மேல போகக்கூடாது! இதோ டாப் 5 Jio பிளான்ஸ்!

ஜியோ பயனர்களே.! கம்மி காசில் 1 மாதம் முழுக்க தடையில்லாத டெய்லி டேட்டா வேண்டுமா? அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை வேண்டுமா? இவை அணைத்தும், உங்களுக்கு வெறும் ரூ.200 விலைக்குள் கிடைக்க வேண்டுமா? அப்படினால், உடனே இந்த பட்ஜெட்-பிரெண்ட்லி திட்டங்களை பாருங்கள்.

பட்ஜெட் பிரெண்ட்லி (Budget Friendly) என்ற வார்த்தை உண்மையிலேயே இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு வார்த்தையாகும். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெஸ்ட் பட்ஜெட் (Budget) சந்தையாக இந்தியா திகழ்கிறது. காரணம், மக்கள் பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளை எதிர்பார்க்கிறார்கள். இவர்களின் தேவையை அறிந்து, நீண்ட காலமாக பட்ஜெட்டில் அதிக நன்மையை வழங்கி வரும் ஒரே நிறுவனமாக ஜியோ (Jio) திகழ்கிறது.

1 மாதம் முழுக்க டெய்லி டேட்டா வேணும்! ஆனா ரூ.200-க்கு மேல போகக்கூடாது!

ஜியோ என்றாலே.. "கம்மி காசுக்கு அதிக மாஸ்ஸு" என்று கூட நாம் கூறலாம். மாஸ் ஆக குறைந்த விலையில் அதன் பயனர்களுக்கு அதிக நன்மையை வழங்குவதற்கு நிகர் வேறெந்த நிறுவனமும் இருக்க முடியாது என்றே கூறலாம். அத்தகைய நிறுவனம் வழங்கும் டாப் 5 பட்ஜெட் பிரெண்ட்லி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Top 5 Budget Friendly Prepaid Recharge Plans) திட்டங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

இந்த 5 திட்டங்களும் வெறும் ரூ.200 விலைக்குள் வருகிறது என்பதே இதன் முதல் சிறப்பாகும். சரி, உங்கள் எதிர்பார்ப்பை இந்த 5 திட்டங்களில் எந்த திட்டம் நிறைவேற்றுகிறது என்று பார்க்கலாம் வாங்க. ஜியோவின் முதல் திட்டமானது ரூ.119 விலையில் (Jio Rs 119 Plan) வருகிறது. இது தினசரி 1.5ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் 14 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக உள்ள ஜியோ திட்டம் ரூ.149 (Jio Rs 149 Plan) விலையில் வருகிறது. இந்த திட்டம் தினமும் 1ஜிபி டேட்டாவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் தினமும் 100 SMS நன்மையோடு வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 20 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. 150 ரூபாய்க்குள் இந்த திட்டம் நல்ல நன்மைகளை பேக் செய்துள்ளது.

1 மாதம் முழுக்க டெய்லி டேட்டா வேணும்! ஆனா ரூ.200-க்கு மேல போகக்கூடாது!

நாம் பார்க்கவிருக்கும் அடுத்த ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Prepaid Recharge Plans) ரூ.179 (Jio Rs 179 Plan) விலையில் வருகிறது. இந்த திட்டமும் தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மைகளை வழங்குகிறது. ஆனால், இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் மட்டும் 24 நாட்களை கொண்டுள்ளது.

அடுத்தபடியாக நமது பட்டியலில் இருக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் (Jio Prepaid Plans) ரூ.199 (Jio Rs 199) விலையில் வருகிறது. இது தினசரி 1.5ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் 23 நாட்களாகும்.

இறுதியாக, இந்த டாப் 5 ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலில் உள்ள திட்டம் ரூ.209 (Jio Rs 209) விலையில் வருகிறது. 200 ரூபாயில் இருந்து வெறும் 9 ரூபாய் மட்டுமே அதிகம் என்பதனால் இதை இந்த பட்டியலுடன் சேர்த்துள்ளோம். இந்த திட்டம் தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.

இந்த திட்டங்கள் அணைத்தும் ஜியோ ஆப்ஸ் வழியாகவும், ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் வழியாகவும் கிடைக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டத்தில் எந்த திட்டம் உங்களுக்கு பிடித்துள்ளது என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 5 Jio Prepaid Recharge Plans Under Rs 200
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X