சும்மா தெறிக்க விடலாம்.. ரூ. 80,000 பட்ஜெட்டில் டாப் 5 Gaming Laptops
கேமிங்காகவே லேப்டாப் வாங்குவோருக்கு ரூ.80,000 பட்ஜெட்டில் அசத்தலான அம்சங்கள் கொண்ட டாப் 5 கேமிங் லேப்டாப் (Gaming Laptops) லிஸ்டை கொண்டு வந்துள்ளோம். பக்காவான கிராபிக்ஸ் கார்டு முதல் கண்களை கவரும் 4K டிஸ்பிளே வரை அனைத்தும் கொண்ட லேப்டாப்கள் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மில் பலருக்கு லேப்டாப் என்றாலே, கேமிங் மட்டுமே நினைவுக்கு வரும். புதிதாக லேப்டாப் வாங்க நினைப்பவர்களும் கேமிங் விளையாட ஏதுவாக அதில் என்விடியா கிராபிக்ஸ் கார்ட் (NVIDIA Graphics Card), 4K டிஸ்பிளே (4K Display), இன்டெல் (Intel) அல்லது ஏஎம்டி (AMD) பிராசஸர் இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். இவை அனைத்தும் இந்த 5 லேப்டாப்களில் உள்ளது.

லெனோவா ஐடியாபேட் கேமிங் 3 ஜென் 5 (Lenovo IdeaPad Gaming 3 Gen 5): இந்த லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல்எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்படுள்ளது. விண்டோஸ் 11 புரோ (Windows 11 Pro) உடன் ஏஎம்டி ரைசன் 7 5800எச் (AMD Ryzen 7 5800H) பிராசஸர் இருக்கிறது. 6.7 மணிநேரம் பேட்டரி பேக்அப் கிடைக்கும்.
16 ஜிபி ரேம் - 512 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. என்விடியா ஜிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1650 டிஐ 4ஜிபி (NVIDIA GeForce GTX 1650 Ti 4GB) கிராபிக்ஸ் கார்ட் உள்ளது. 720 எச்டி வெப் கேமரா இருக்கிறது. 2.2 கிலோ எடை கொண்டிருக்கிறது. சாமிலியோன் ப்ளூ (Chameleon Blue), ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 135W சார்ஜிங் அடாப்டர் வருகிறது. விலையை பொறுத்தவரையில் ரூ.74,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹெச்பி பெவிலியன் ஏஎம்டி ரைசன் 7 (HP Pavilion AMD Ryzen 7): இந்த லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல்எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. விண்டோஸ் 11 Home (Windows 11 ஹோம் ) உடன் ஏஎம்டி ரைசன் 7 5800எச் (AMD Ryzen 7 5800H) பிராசஸர் இருக்கிறது. 16 ஜிபி ரேம் - 512 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
என்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் ஜிடிடிஆர் 6 4ஜிபி (NVIDIA GeForce RTX 1650 GDDR6 4GB) கிராபிக்ஸ் கார்ட் உள்ளது. 720 எச்டி வெப் கேமரா இருக்கிறது. 1.98 கிலோ எடை கொண்டிருக்கிறது. ஷேடோ பிளாக் ( Shadow Black ) மற்றும் அல்ட்ரா வைலட் (Ultra Violet) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரையில் ரூ.73,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல் நியூ ஜி15-5515 (Dell New G15-5515): இந்த லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல்எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. விண்டோஸ் 11 (Windows 11 ) உடன் ஏஎம்டி ரைசன் 5 5800எச் ( AMD Ryzen5-5600H) பிராசஸர் இருக்கிறது. 8 ஜிபி ரேம் - 512 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
என்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050 6 4ஜிபி (Nvidia RTX 3050 4GB) கிராபிக்ஸ் கார்ட் உள்ளது. 720 எச்டி வெப் கேமரா இருக்கிறது. 2.57 கிலோ எடை கொண்டிருக்கிறது. பாண்டம் கிரே (Phantom Grey ) கலரில் கிடைக்கிறது. இந்த லேப்டாப்பின் விலையை பொறுத்தவரையில் ரூ.72,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அசுஸ் டப் டேஸ் எஃப்14 (ASUS TUF Dash F15): இந்த லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல்எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. விண்டோஸ் 11 ஹோம் மற்றும் புரோ (Windows 11 Home and Pro ) உடன் இன்டெல் கோர் ஐ5-12450எச் 12 ஜென் (Intel Core i5-12450H 12th Gen) பிராசஸர் இருக்கிறது. 8 ஜிபி ரேம் - 512 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
என்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3070 4ஜிபி (Nvidia RTX 3070 4GB) கிராபிக்ஸ் கார்ட் உள்ளது. 720 எச்டி வெப் கேமரா இருக்கிறது. 2 கிலோ எடை கொண்டிருக்கிறது. பிளாக் (Black) மற்றும் மூன்லைட் ஒயிட் (Moonlight White) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த லேப்டாப்பின் விலையை பொறுத்தவரையில் ரூ.77,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏசர் லேப்டாப் நைட்ரோ 5 (Acer Nitro 5): இந்த நைட்ரோ லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல்எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) உடன் இன்டெல் கோர் ஐ7 11 ஜென் (Intel Core i7-11th Gen) பிராசஸர் இருக்கிறது. 8 ஜிபி ரேம் - 512 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
என்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 1650 4ஜிபி (NVIDIA GeForce GTX 1650 4GB) கிராபிக்ஸ் கார்ட் உள்ளது. 720 எச்டி வெப் கேமரா இருக்கிறது. 2.2 கிலோ எடை கொண்டிருக்கிறது. பிளாக் (Black) கலரில் கிடைக்கிறது. இந்த லேப்டாப்பின் விலையை பொறுத்தவரையில் ரூ.80,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








