ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ என்ன எதிர்பார்க்கலாம்

By Meganathan
|

அதிக எதிர்பார்ப்பு, தினமும் வதந்திகள் என கூகுள் நிறுவனத்தின் புதிய இயங்குதளம் சார்ந்த அநைத்து எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக அந்நிறுவனம் தனது புதிய இயங்குதளம் மார்ஷ்மல்லோ தான் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

யூட்யூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி..?

அறிவித்த கையோடு கூகுள் புதிய இயங்குதளமான மார்ஷ்மல்லோ பயனாளிகளுக்கு என்னென்ன சிறப்பம்சங்களை வழங்க இருக்கின்றது என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும் நிலையில், ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளத்தில் வழங்கப்பட இருக்கும் புதிய சேவைகள் எவை என்பதை பின் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஸ்மார்ட்போன் வரலாறு : ஒரு பார்வை..!

பேட்டரி

பேட்டரி

ஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தின் டோஸ் எனும் அம்சம் மூலம் போனின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப பேட்டரி சேமிக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை விட இரு மடங்கு அதிகமாக பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நௌ

கூகுள் நௌ

கூகுள் நௌ மூலம் இனி எதையும் குரல் மூலமாகவே அறிந்து கொள்ளவோ, தேடவோ முடியும்.

யுஎஸ்பி

யுஎஸ்பி

ஆண்ட்ராய்டு எம் டைப் சி சார்ஜரையும் சப்போர்ட் செய்யும் என தெரிவித்திருப்பதோடு எந்தெந்த கருவிகளில் சப்போர்ட் செய்யும் என்பது குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

ஆண்ட்ராய்டு பே

ஆண்ட்ராய்டு பே

என்எப்சி சேவை கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ரய்டு பே பயன்படுத்த முடியும், இங்கு விர்ச்சுவல் கார்டு நம்பர் மூலம் ஆண்ட்ராய்டு பே மேலும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

ஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தில் கைரேகை ஸ்கேனர் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஏபிஐ பிங்கர்ப்ரின்ட் தற்சமயம் டெவலப்பர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவை விரைவில் பெரும்பாலான கருவிகளில் வேலை செய்யும் என கூகுள் தெரிவித்துள்ளது.

ஆப்

ஆப்

ஆண்ட்ராய்டு செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது இனி அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டிய அவசியம் இருக்காது, மாறாக வாடிக்கையாளர்கள் தாங்கள் விருப்பப்பட்ட தகவல்களை மட்டும் செயலிகளுக்கு வழங்க முடியும்.

ரேம் மேனேஜர்

ரேம் மேனேஜர்

புதிய ரேம் மேனேஜர் மெமரி பயன்பாடு குறித்து பல தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

ஆப் டிராயர்

ஆப் டிராயர்

மாற்றியமைக்கப்பட்ட ஆப் டிராயர் ஆண்ட்ராய்டு எம் கொண்டிருக்கின்றது. புதிய வடிவமைப்பில் மேல் இருந்து கீழ் பக்கமாக ஆப்ஸ்களை பார்க்க முடிகின்றது.

ஆட்டோ பேக்கப் மற்றும் ரீஸ்டோர்

ஆட்டோ பேக்கப் மற்றும் ரீஸ்டோர்

ஆட்டோ பேக்கப் மற்றும் ரீஸ்டோர் அம்சம் மூலம் கருவியில் இருக்கும் அனைத்து செயலிகளும் தானாக கூகுள் டிரைவ் மூலம் பேக்கப் செய்யப்படும், இந்த அப்டேட் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here the Top 5 features of Google's New Android Marshmallow. This is interesting and you will like this. Read more about Android Marshmallow in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X