Subscribe to Gizbot

ப்ரீடம் 251 : 2016-ல் ஆடிய ஆட்டமென்ன.? பேசிய வார்த்தைகள் என்ன என்ன.?

Written By:

"கேக்குறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில நெய் வடியுமாம்" - பாட்டி தாத்தாக்களுடன் வாழும் தோழமைகளுக்கு இந்த வாக்கியம் ரொம்ப அத்துப்படி, அடிக்கடி கேட்டிருப்பார்கள்.

முக்கியமாக நாம் ஏதவாது "பேய்க்கதை" (அதாவது பொய்கள் நிறைந்த கதை) சொல்லும்போது நிச்சயமாக நாம் சொல்லுவது அனைத்துமே பொய் தான் என்பதை முன்னரே கண்டுபிடித்து, காத்திருந்து ஆப்பு வைக்கும் நோக்கத்தில் இந்த பிரபல பழமொழியை பெரியவர்கள் கையாள்வார்கள். சரி, இப்போ எதற்கு இந்த பழமொழி..? காரணம் இருக்கு மக்களே.!

இந்த 2016-ஆம் ஆண்டு நமக்கெல்லாம் மிகப்பெரிய 'பல்ப்'கொடுத்து, இல்லாத பொல்லாத பேய் கதைகளை அள்ளிவிட்டு கிட்டத்தட்ட நம் அனைவரையுமே கேப்பையில் நெய் வடிகிறது என்று கூறி கேனைகளாக்கிய ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் பற்றிய தொகுப்பே இது.!

"அடப்பாவி பயபுள்ள நம்மள இப்புடி ஏமாத்திப்போட்டானே..!?" என்று நீங்கள் மட்டும் புலம்ப வேண்டாம். சாமானிய மக்கள் முதல் தலைப்பு செய்திகளாய் வாரிவாரி வழங்கிய உலக மீடியாக்கள் வரை அனைத்தையுமே ஏமாற்றம் காணவைத்த பெருமை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்கு உண்டு. அப்படியாக அந்நிறுவனம் வெளியிட்ட டாப் 5 பேய் கதைகள் என்னென்ன.? இதோ உங்களுக்காக.! (நம்பி ஏமாந்து போனது மட்டுமின்றி, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்)

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேய்க்கதை #05 : ஒரே போன், வெவ்வேறு மாடல்.!?

பேய்க்கதை #05 : ஒரே போன், வெவ்வேறு மாடல்.!?

ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் பல வகையான மாடல்களில் பல வகையான அளவுகளில் இண்டர்நெட் முழுவதும் பரவியது. அதெப்படி ஒரே கருவி பல வகையான வடிவமைப்பில் இருக்கும் என்று சற்று நிதானமாய் யோசித்தவர்கள் தப்பித்தார்கள். ஏனையோர்கள் ஆர்டர் செய்வது எப்படி என்பதை தேடினார்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பேய்க்கதை #04 : அட்கான் கருவி.?!

பேய்க்கதை #04 : அட்கான் கருவி.?!

சந்தையில் புதிய கருவி அறிமுகமானால், அதை பற்றி விமர்சனம் செய்ய எதுவாக தொழில்நுட்ப செய்திகளை அளிக்கும் நிறுவனங்களுக்கு வெளியான புதிய கருவி ஒன்று ரீவியூ செய்ய அனுப்பி வைக்கப்படும். அப்படியாக பத்திரிகையாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட ப்ரீடம் 251 கருவியில் சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன அட்கான் முத்திரை 'வைட்னர்' கொண்டு மறைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதாவது, பழைய செல்லாத கருவியை புதிய பெயரில் விற்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

பேய்க்கதை #03 : தயாரிப்புக்கு முன்பே ஆர்டர்.!

பேய்க்கதை #03 : தயாரிப்புக்கு முன்பே ஆர்டர்.!

ஹோட்டலுக்கு சென்றால் "என்ன வேணும்" என்று கேட்டபின் அதை சமைத்து கொடுப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஸ்மார்ட்போனுக்கும் அதே நிலை தான் என்றால் இதில் என்ன நியாயம் இருக்கிறது..? முதலில் ஆர்டர் செய்யுங்கள் அதன் பின்னர் கருவிகள் தயாரிக்கப்பட்டு டெலிவரி செய்யப்படும் என்று ரிங்கிங் பெல்ஸ் கூறியதும் "இதில் ஏமாற்று வேலை எதோ இருக்கிறது" என்று பெரும்பாலானோர்கள் பின்வாங்கினர்.

பேய்க்கதை #02 : டெலிவரிக்கு 4 மாதங்கள்.!?

பேய்க்கதை #02 : டெலிவரிக்கு 4 மாதங்கள்.!?

"அப்போ.. இவனுங்க கையில ஒன்னுமே இல்லை" என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியது இந்த அறிவிப்பு தான். 21-ஆம் நூற்றாண்டில் டெலிவரிக்கு 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறியதின் மூலம் பிராண்டை உருவாக்கி விட்டு இவர்கள் வாடிக்கையாளர்களை அணுகவில்லை, வாடிக்கையாளர்களின் பணத்தில் இருந்து தான் கம்பெனியே உருவாகப்போகிறது என்பது தெளிவானது.

பேய்க்கதை #01 : போனை விடுங்க சார்ஜர், யூஎஸ்பி , இயர்போன்ஸ் ரூ.251/-க்கு கிடைக்குமா.?

பேய்க்கதை #01 : போனை விடுங்க சார்ஜர், யூஎஸ்பி , இயர்போன்ஸ் ரூ.251/-க்கு கிடைக்குமா.?

"திருப்பதியில் லட்டுக்கு பதிலாக ஜில்லேபி தருகிறார்கள்" என்பது போல இருப்பதிலேயே பெரிய ரிங்கிங் பெல்ஸ் பேய்க்கதை இது தான். ரூ.251/-க்கு ஸ்மார்ட்போன் என்றதுமே பரபரப்பாகிப்போன அனைவரும், முதலில் ஒரு சார்ஜர் உடன் ஒரு யூஎஸ்பி உடன் ஒரு ஹெட்செட் ஆகியவைகளை ரூ.251/-க்கு வாங்க முடியுமா என்று யோசிக்கவில்லை. நல்லா பழுத்த நாலு வாழைப்பழங்கள் கூட ரூ.20/-க்கு விற்கப்படுகிறது என்பது தான் நிதர்சனம்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

புதிய பெயரில், புதிய நிறுவனம் தொடங்கியது - ப்ரீடம் 251.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Top 5 fake promises given by Ringing Bells in 2016. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot