அசத்தலான 200 வசதிகளை வழங்கும் ஆப்பிள்!

இந்த புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் வரும் தொழில் நுட்ப வசதிகள் பற்றிய விவரத்தினை கூடிய விரைவில் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெறலாம். அதோடு இந்த புதிய ஐஓஎஸ்-6 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருக்கும் 5 புதிய வசதிகள் பற்றி பார்க்கலாம்.
மேப்ஸ்:
மேப்ஸ் அப்ளிக்கேஷனை இந்த ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் பெறலாம். புதிதாக குரல் வழி சேவையினையும், ட்ரேஃபிக் ஸ்டேட்டஸையும் வழங்குகிறது மேப்ஸ் அப்ளிக்கேஷன் மூலம் வழங்குகிறது ஆப்பிள். இதற்கான பிரத்தியேக அப்ளிக்கேஷனையும் நாம் ஆப்பிள் ஐஓஎஸ்-6 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பெறலாம்.
ஃபேஸ்புக்:
மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிற்காக சில பிரத்தியேக வசதிகளை வழங்குகிறது ஐஓஎஸ்-6. ஆப்பிளின் புதிய இயங்குதளத்தில் ஃபேஸ்புக்கும் மற்றும் ஆப்பிள் ஸ்டோரும் இணைக்கப்படுகிறது. இதனால் ஆப்பிள் ஸ்டோரில் இருக்கும் பிடித்த அப்ளிக்கேஷன்களை, ஃபேஸ்புக் மூலம் எளிதாக 'லைக்' செய்யலாம்.
இது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக் கேலன்டரில் இருக்கும் நண்பர்களது பிறந்த நாள், உங்கள் ஐபோனில் இருக்கும் கேலன்டரிலும் நினைவுபடுத்தப்படும் வகையில் ஒரு புதிய வசதியையும் இந்த ஐஓஎஸ்-6 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் பெறலாம்.
சிரி அப்ளிக்கேஷன்:
சர்வதேச அளவில் சிரி அப்ளிக்கேஷன் அனைத்து வாடிக்கையாளர்களையும் கவர்ந்த ஒன்று. இந்த சிரி அப்ளிக்கேஷன் ஏற்கனவே நிறைய வசதிகளை குரல் வழி பதிவுகள் மூலம் வழங்கியது. இது மட்டும் அல்லாது இப்போது இன்னும் சில மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இந்த சிரி அப்ளிக்கேஷனை பெறலாம். ரெஸ்டாரன்ட் பற்றிய விவரங்களை, விலைப்பட்டியலும் தெரிந்து கொள்ளும் வசதி இதில் கொடுக்கப்படுகிறது.
கால் வசதி:
கால் ரிமைன்டர் சவுகரியத்தினையும் ஆப்பிளின் இந்த புதிய சாஃப்ட்வேர் வழங்கும். உதாரணத்திற்கு யாராவது ஒரு நபர் உங்களுக்கு கால் செய்கின்றார்கள் என்று வைத்து கொள்வோம். ஆனால் அந்த தருணத்தில் அவருக்கு கால் செய்ய முடியவில்லை என்றால் 'கால் வென் யூ லீவ்' என்ற ஆப்ஷனை பயன்படுத்தி அந்த நபரின் மொபைல் எண்ணை ரிமைன்டரில் போட முடியும். இதனால் அலுவலகத்தினை விட்டோ அல்லது குறிப்பிட்ட இடத்தைவிட்டோ செல்லும் தருணத்தில் ஆட்டோமெட்டிக்காக இந்த ரிமைன்டர் வசதியின் மூலம் தகவலை பெறலாம். இதில் சிரி வசதி உள்ளதால் அலுவலகத்தினை விட்டு நகருவதை ஆட்டோமெட்டிக்காக ஐபோன் கண்டறியும்.
பாஸ்புக்:
போர்டிங் பாசஸ், கிஃப்ட் கார்டு, டிக்கெட் போன்றவற்றை வைப்பதற்காகவும் இந்த ஐஓஎஸ்-6 இயங்குதள்ததில் சில வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பணபரிவர்த்தனை செய்யப்படுவது பற்றி முழு விவரமும் கொடுக்கப்பட்டுவிடும்.
இங்கு கூறப்பட்டு இருப்பது வெறும் 5 வசதிகள் பற்றி தான். இது போன்ற ஏராளமான வசதிகளை ஆப்பிளின் புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் பெறலாம்.


Click it and Unblock the Notifications