2015 ஆம் ஆண்டில் வெளியாகுமா இந்த ஆப்பிள் கருவிகள்

By Meganathan
|

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6ப்ளஸ் வெற்றியை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் 6 மாடல்களை தவிற ஐபேட் ஏர் 2, ஐபேட் மினி 3, ஒஎஸ் எக்ஸ் யோசிமேட் மற்றும் ஐஒஎஸ் 8 கருவிகளையும் 2014 ஆம் ஆண்டில் வெளியிட்டது இந்த நிறுவனம்.

2015 ஆம் ஆண்டில் வெளியாகுமா இந்த ஆப்பிள் கருவிகள்

ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் போட்டியாக விளங்கும் சாம்சங் நிறுவனம் சிறிய பின்னடைவை சந்தித்தது, அந்த வகையில் 2015 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட காத்திருக்கும் டாப் 5 கருவிகளை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.

ஆப்பிள் வாட்ச்

2015 ஆம் ஆண்டில் வெளியாகுமா இந்த ஆப்பிள் கருவிகள்
2015 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச்களின் மீது செலுத்த இருக்கின்றது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் 38 எம்எம் மற்றும் 42 எம்எம் அளவுகளில் ஆப்பிள் வாட்ச்கள் இருக்கின்றது. இந்தாண்டின் துவக்கத்தில் ஆப்பிள் ஸ்மார்டவாட்ச்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆப்பிள் ஐபேட் ப்ரோ

2015 ஆம் ஆண்டில் வெளியாகுமா இந்த ஆப்பிள் கருவிகள்

ஐபேட் டேப்ளெட்களின் வடிவமைப்பை ஆப்பிள் நிறுவனம் மாற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது. இந்தாண்டு 12.2வில் இருந்து 12.9 இன்ச்சாக மாற்றப்படுகின்றது. ஐபேட் ப்ரோ சிறப்பம்சங்களை பொருத்த வரை 7 எம்எம் மெலிதாகவும் 2 ஜிபி ராம், டச் ஐடி கைரேகை சென்சார் மற்றும் 802.11ac வைபை வசதி. இவைகளோடு அல்ட்ரா எஹ்டி டிஸ்ப்ளே, ஸ்பீக்கர்/மைக்ரோபோன் ஆப்ஷன்கள் இருப்பதோடு இந்தாண்டு ஏப்ரல் அல்லது ஜீண் மாதம் வெளியாகலாம் என்ரு எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்பிள் ஐபேட் ஏர்3 மற்றும் ஐபேட் மினி4

2015 ஆம் ஆண்டில் வெளியாகுமா இந்த ஆப்பிள் கருவிகள்

ஐபேட் ப்ரோ 2015 ஆம் ஆண்டில் வெளியாகின்றதோடு இவை ஐபேட் ஏர் மற்றும் ஆபேட் மினி மாடல்களின் அடுத்த தலைமுறை கருவிகளாக இருக்கும்.

2014 ஆம் ஆண்டில் ஆப்பிள் ஐபேட் ஏர் 2 மாடலின் சிறய பிராசஸர் அப்டேட் மட்டுமே வழங்கப்பட்டது. ஐபேட் மினி 3 புதிதாக டச் ஐடி கைரேகை சென்சார் பெறுகின்றது.

ஆப்பிள் ஐபோன் 7 அல்லது ஐபோன் 6எஸ்

2015 ஆம் ஆண்டில் வெளியாகுமா இந்த ஆப்பிள் கருவிகள்

ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் வெற்றிகளை தொடர்ந்து அந்த மாடலின் அடுத்த வகை வெளியாகலாம், புதிய ஐபோன் 7 செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகின்றது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஐபோன் 7 அல்லது ஐபோன் 6எஸ் ஆகவும் இருக்க கூடும் என்று கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Top 5 Devices From Apple In 2015. Here are Top 5 Products From Apple which are rumoured to be Released in 2015.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X