இந்த டாப் 5 கிரேசி கேட்ஜெட்ஸை பயன்படுத்திப் பார்க்க ஆசையா? உடனே இதை ட்ரை செய்யுங்கள்..

|

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த சில காலங்களில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப் போவது இந்தியச் சந்தையில் கிடைக்கும் மிகவும் வித்தியாசமான கேட்ஜெட்ஸ்களின் பட்டியலைப் பார்க்கப்போகிறோம். உண்மையில் இவை அனைத்தும் பார்ப்பதற்குச் சாதாரண பொருட்களை போல் இருந்தாலும் இவற்றின் செயல்பாடுகள் மிகவும் வேடிக்கையாகவும் கிரேசியாகவும் இருக்கிறது. சரி, இந்த பதிவில் அப்படி என்னென்ன கிரேசியான கேட்ஜெட்ஸ்களை பார்க்கப்போகிறோம் என்று இப்போது பார்க்கலாம்.

1. UV டார்ச் லைட்

1. UV டார்ச் லைட்

இந்த சாதனம் பார்ப்பதற்கு ஒரு டார்ச் லைட் போல் தோற்றமளிக்கிறது. ஆனால், இது சாதாரண டார்ச் லைட் இல்லை, இது அல்ட்ரா வைலட் கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு பிரத்தியேக டார்ச் லைட் ஆகும். இதை வைத்து நாம் என்ன பண்ண முடியும் என்று நீங்கள் கேட்கலாம்? இது உங்களுக்குப் பாதுகாப்பு சாதனமாகப் பயன்படுத்தலாம்.

UV லைட் எதற்காக பயன்படுகிறது?

UV லைட் எதற்காக பயன்படுகிறது?

நீங்கள் இரவு நேரங்களில் டிரெக்கிங் செய்யும் போது மற்றும் நடக்கும் போது இருட்டில் பூச்சிகள் மற்றும் பாம்புகளை எளிதாக அடையாளம் காண இது உதவுகிறது. UV கதிர்கள் பூச்சி மேல் படும்போது ரிப்லெக்ட் ஆகும் என்று கூறப்படுகிறது. இது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வெளியக வாங்குவதற்கு கிடைகிறது.

மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய நாசாவின் செவ்வாய் கிரக புகைப்படம்.. இது என்ன தெரியுமா?மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய நாசாவின் செவ்வாய் கிரக புகைப்படம்.. இது என்ன தெரியுமா?

2. 4 இன் 1 கேபிள்

2. 4 இன் 1 கேபிள்

இந்த சாதனம் பார்ப்பதற்கு கீசெயின் போல் தோற்றம் அளிக்கிறது. ஆனால், இது கீசெயின் தோற்றத்தில் இருக்கும் சார்ஜிங் கேபிள் என்பதே உண்மை. அதிலும், இதில் 4 விதமான சார்ஜிங் போர்ட்கள் இருப்பது என்பதே நம்ப முடியாத உண்மை. இதில் டைப் சி போர்ட், ஆப்பிள் ஐபோன் சாதனங்களுக்கான லைட்டிங் சார்ஜர் போர்ட், யுஎஸ்பி டைப் போர்ட் மற்றும் டைப் எ கனெக்டர் உடன் இது வருகிறது. இது கண்டிப்பாக இந்த காலத்தில் தேவைப்படும் ஒரு முக்கிய கேட்ஜெட்ஸ் தான். இதுவும் கொஞ்சம் வேடிக்கையான கேட்ஜெட் என்பது தான் உண்மை.

3. பிளாஸ்மா லைட்

3. பிளாஸ்மா லைட்

இந்த சாதனம் பார்ப்பதற்குக் குண்டு பல்பு போல் கட்சி அளிக்கிறது. ஆனால், இது சாதாரண பல்பு இல்லை, இது ஒரு பிளாஸ்மா விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது. பிளாஸ்மா விளக்குகளுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பிளாஸ்மா விளக்கின் செயல்பாடுகளைப் பார்ப்பது மிகவும் அழகான காட்சியாக அமைகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் விரல்களை இதன் மீது வைக்கும் போது, உள்ளே இருக்கும் கதிர் ஒலிகள் உங்கள் விரல்களை நோக்கி நகரத் துவங்கும். இப்போது இந்த பிளாஸ்மா லைட்டின் சக்தியை நீங்கள் உணர முடியும்.

பேட்டரியுடன் மொபைல் போனை விழுங்கிய மனிதன்.! அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்.. அப்புறம் என்ன ஆச்சு?பேட்டரியுடன் மொபைல் போனை விழுங்கிய மனிதன்.! அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்.. அப்புறம் என்ன ஆச்சு?

4. UV ஸ்டெரிலைசர்

4. UV ஸ்டெரிலைசர்

இந்த சாதனம் ஒரு UV ஸ்டெரிலைசர் சாதனமாகவும் செயல்படுகிறது, அதே நேரத்தில் இது ஒரு வயர்லெஸ் சாதனமாகச் செயல்படுகிறது. இந்த கொரோனா தொற்று காலத்தில் இது மிகவும் தேவையான சாதனமாகும். நாம் வெளியில் சென்று வந்த பிறகு நாம் பயன்படுத்திய வாட்ச், மோதிரம், பர்ஸ் போன்ற சாதனங்களை உள்ளே வைத்து ஆன் செய்தால் மட்டும் போதும். இது அனைத்தையும் இந்த UV ஸ்டெரிலைசர் கருவி UV கதிர்களைப் பயன்படுத்திச் சுத்திகரிக்கிறது. இந்த சாதனம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளம் வழியாகக் கிடைக்கிறது. உங்கள் ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருந்தால் அதை நீங்கள் இந்த சாதனத்தைக் கொண்டு சார்ஜ் செய்யலாம்.

5. LED கூலர் கிளாஸ்

5. LED கூலர் கிளாஸ்

இது மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கும் ஒரு ஸ்மார்ட் LED கிளாஸ் ஆகும். இந்த சாதனம் கண்ணாடியின் முன் பகுதியில் ஒரு LED லைட்டிங் பேனல் உடன் வருகிறது. இதில் சில கூலான ஆங்கில வார்த்தைகள் LED பேனல் மூலம் வெளிப்படுத்துகிறது. இந்த LED விளக்கு மூன்று வண்ணங்களில் வருகிறது. இந்த சாதனம் பார்ட்டி கிளாஸ் ஆக செயல்படுகிறது. நீங்கள் உங்களுக்குப் பிடித்த இடங்களில் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சாதனம் தற்பொழுது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Top 5 Crazy Cool Gadgets You Can Try Now : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X