பிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.27 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் 300எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, இந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம். குறிப்பாக ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்களை விட மலிவான
விலையில் பிஎஸ்என்எல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

அன்மையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.9 மற்றும் ரூ.29 திட்டம்;
பிஎஸ்என்எல் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.9 மற்றும் ரூ.29 திட்டத்தை அறிமுகம் செய்தது, குறிப்பாக ரூ.29 திட்டத்தை 7நாட்கள் பயன்படுத்த முடியும், பின்பு ரூ.9 திட்டத்தை ஒருநாள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த இரண்டு திட்டங்களிலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக
2ஜிபி டேட்டா இந்த திட்டங்களில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.27 திட்டம்:
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.27 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் 300எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 7நாட்கள் பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.19 திட்டம்:
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.19 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை பயனர்கள், அதே நெட்வொர்க்கில் நிமிடத்திற்கு 15 பைசாவும்இ பிற நெட்வொர்க்குகளில் ஒரு நிமிடத்திற்கு 35 பைசாவும் திட்டத்தை செயல்படுத்துவதிலிருந்து 54 நாட்களுக்கு குரல் அழைப்புகளை செய்ய அனுமதிக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பயன்படும்.

பிஎஸ்என்எல் ரூ.171-திட்டம்;
பிஎஸ்என்எல் ரூ.171 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் மொத்தமாக 60ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 30நாட்கள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.444 திட்டம்:
பிஎஸ்என்எல் ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை 60நாட்களுக்கு பயன்படுத்த முடியும். தினசரி 1.5ஜிபி டேட்டா மற்றம் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது பிஎஸ்என்எல் திட்டம்.


Click it and Unblock the Notifications