ஏர்டெல் நிறுவனம் ரூ.100-க்குள் வழங்கும் டாப் 5 ரீசார்ஜ் திட்டங்கள்.!
ஏர்டெல் வழங்கும் ரூ.23 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை 200எம்பி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ் போன்றவற்றை இரண்டு நாட்கள் பயன்படுத்த முடியும்
ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் மற்றம் சலுகைகளையும் அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் இன்று ரூ.399-திட்டத்தில் கூடுதலாக 20ஜிபி டேட்டாவை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த
திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

ஏர்டெல் நிறுவனம் இந்த மாதம் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்ததுமேலும் அந்நிறுவனம் ரூ.100-க்குள் அறிவித்துள்ள டாப் 5 ரீசார்ஜ் திட்டங்களை பார்ப்போம்.

ரூ.9:
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.9 ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை 100எஸ்எம்எஸ் மற்றும் 100எம்பி டேட்டா போன்றவற்றை ஒருநாள் பயன்படுத்த முடியும். குறிப்பாக இலவச கால் அழைப்புகளை இந்த திட்டத்தில் பயன்படுத்த முடியும்.

ரூ.23, ரூ.28 மற்றும் ரூ.29:
ஏர்டெல் வழங்கும் ரூ.23 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை 200எம்பி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ் போன்றவற்றை இரண்டு நாட்கள்
பயன்படுத்த முடியும் குறிப்பாக இலவச கால் அழைப்புகளை இந்த திட்டத்தில் பயன்படுத்த முடியும். ஏர்டெல்-ன் ரூ.28 மற்றும் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டங்கள் முறையே 500எம்பி மற்றும் 520எம்பி டேட்டாவை 28நாட்கள் பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டங்களில் இலவச கால் அழைப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.

ரூ.47, ரூ.49 மற்றும் ரூ.59:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.47 ப்ரீபெய்ட் திட்டத்தில் 500எம்பி டேட்டா சலுகையை 28 நாட்கள் பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படவில்லை, ஆனால் இலவச கால் அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.49 ரீசார்ஜ் திட்டதில் 3ஜிபி டேட்டா சலுகையை 28 நாட்கள் பயன்படுத்த முடியும், ஆனால் இலவச எஸ்எம்எஸ் மற்றம் கால் அழைப்புகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் வழங்கும் ரூ.59 ரீசார்ஜ் திட்டத்தில் 500எம்பி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற சலுகையை 7நாட்கள் பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.97 மற்றும் ரூ.99 திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.97 திட்டத்தில் 1.5ஜிபி டேட்டா மற்றும் 200எம்எஸ்எம் போன்ற சலுகைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டதில் இலவச கால் அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று ரூ.99 திட்டதில் 1ஜிபி டேட்டா மற்றம் இலவச கால் அழைப்புகள் போன்றவை 10நாட்களுக்கு பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் வழங்கப்பட்டவில்லை.


Click it and Unblock the Notifications