Home
News

ரூ.30,000 பட்ஜெட்டில் பக்கா கேமரா.. இந்த 5 போன்கள விட்ட வேற கிடையாது!

நம்மில் பலருக்கு ஸ்மார்ட்போன்கள் (Smartphones) என்றாலே கேமரா மட்டுமே நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு கேமரா மீது மோகம் கொண்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இவர்களுக்கு பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன் லிஸ்டை கொண்டுவந்துள்ளோம். உங்களுக்கு ரூ.30,000 பட்ஜெட் என்றால், இந்த 5 போன்களே உங்களுக்கு கேமராவில் பெஸ்ட் சாய்ஸ்.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. டிரிபிள் கேமரா செட்டப் கொண்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்766 (Sony IMX766) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2 எம்பி செகண்டரி சென்சார் உள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது.

ரூ.30,000 பட்ஜெட்டில் பக்கா கேமரா போன் வாங்கனுமா? இதான் டாப் 5 லிஸ்ட்

மீடியாடெக் டைமன்சிட்டி 1300 சிப்செட் (MediaTek Dimensity 1300) வருகிறது. மெயின் கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) அம்சம் கொண்டுள்ளது. விலையை பொறுத்தவரையில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.28,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள்: இந்த போன் 6.67 இன்ச் ஓஎல்டி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட் (Mediatek Dimensity 1080) உள்ளது. 12 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

200 எம்பி மெயின் கேமராவானது, சாம்சங் எச்பிஎக்ஸ் சென்சாருடன் (Samsung HPX sensor) வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைட் (Ultrawide Sensor) + 2 எம்பி மேக்ரோ சூட்டர் (Macro Shooter) என டிரிபிள் செட்டப் உள்ளது. 16 எம்பி செல்பி கேமரா வருகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில், ரூ.29,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 6ஏ: இந்த போன் 6.14 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் ஓஎல்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் டென்சார் சிப்செட் (Google Tensor Chipset) வருகிறது. 6 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. 12 எம்பி மெயின் கேமரா 12 எம்பி அல்ட்ரா வைட் சென்சாருடன் வருகிறது. 8 எம்பி செல்பி கேமரா வருகிறது. ஆப்பிள் போன்களுக்கு இணையாக போட்டோக்களை எடுத்துக்கொள்ள முடியும். இந்த போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.28,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நத்திங் போன் 1 அம்சங்கள்: இந்த போன் 6.55 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் ஓஎல்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் (Snapdragon 778G+) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இரண்டு 50 எம்பி சென்சாருடன் மெயின் கேமரா வருகிறது.

இதற்கு சோனி ஐஎம்எக்ஸ்766 (Sony IMX766) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. நைட மோட் மற்றும் சீன் டிடெக்ஷன் அம்சங்கள் கொண்டிருக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதன்மூலம் லைட் கம்மியான இடங்களிலும் அசத்தலான போட்டோக்களை எடுக்க முடியும். இந்த போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.28,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 40: இந்த போன் 6.55 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் 3டி கர்வ்ட் pOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமராவானது 13 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் உடன் டூயல் ரியர் செட்டப் கொண்டுள்ளது. 32 எம்பி கேமரா செல்பீ கேமரா உள்ளது.

இந்த போனின் விலையை பொறுத்தவரையில் 8 ஜிபி ரேம் - 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 5 camera smartphones to buy under rs 30000 in May 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X