Airtel சிம் இருக்கா? சூப்பரான 5 ரீசார்ஜ் திட்டம்.. 90 நாள் வேலிடிட்டி.. தினமும் 3GB டேட்டா.. மிஸ் பண்ணாதீங்க!
ஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் துவக்கத்தில் முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதாவது குறைந்த விலையில் கிடைத்த ப்ரீபெய்ட் திட்டங்கள் எல்லாம் இப்போது சற்று உயர்வான விலையில் தான் கிடைக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.1000-க்குள் கிடைக்கும் சிறந்த ஐந்து ப்ரீபெயட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 649 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என நிறுவனம் கூறியுள்ளது.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 799 plan) தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 77 நாட்கள் ஆகும். எனவே இந்த ஏர்டெல் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 115.5ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 838 plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். நீங்கள் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். இதுதவிர அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) மற்றும் Vர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 929 plan) தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 135ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle, விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 979 plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். பின்பு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








