Home
News

இலவசமாக Disney+ Hotstar மற்றும் Amazon Prime வேண்டுமா? இந்த 5 Airtel பிளான் தான் பெஸ்ட்!

தியேட்டர் சென்று திரைப்படம் பார்ப்பதற்கு பதிலாக, இப்போது இந்தியர்கள் பல OTT தளங்கள் வழியாக படங்களை பார்க்க பழகிவிட்டனர். அதிலும், குறிப்பாக அமேசான் பிரைம் வீடியோஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இவற்றை ஏர்டெல் இலவசமாக வழங்குகிறது.

பல ஏர்டெல் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டின் OTT (ஓவர்-தி-டாப்) நன்மையை வழங்கினாலும், Disney+ Hotstar மற்றும் Amazon Prime மெம்பர்ஷிப்பை வழங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் என்று ஒரு சில திட்டங்கள் மட்டுமே பயன்ப்டுத்த கிடைக்கின்றன. ஏர்டெல் இப்போது இதுபோன்ற ஐந்து திட்டங்களை மட்டுமே வழங்குகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை, Disney+ Hotstar சந்தாவுடன் பல திட்டங்கள் இருந்தன.

இலவசமாக Disney+ Hotstar மற்றும் Amazon Prime வேண்டுமா?

ஆனால், ஏர்டெல் இப்போது மூன்று திட்டங்களை மட்டுமே அதன் போர்ட்போலியோவில் வைத்துள்ளது. ஏர்டெல் சமீபத்தில் பல டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்களை நிறுத்தியது. ஏர்டெல்லின் போட்டியாளரான ஜியோவும் இதே காரியத்தை செய்தது என்பது கவனிக்கத்தக்கது. அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT நன்மையுடன் கிடைக்கும் திட்டங்களைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

பார்தி ஏர்டெல் தற்போது மூன்று திட்டங்களை வழங்குகிறது. இது பயனர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு இலவச சந்தாவை வழங்குகிறது. இந்தத் திட்டங்களின் விலை ரூ.499, ரூ.839 மற்றும் ரூ.3359 போன்ற விலையில் வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மைகளை வழங்குகின்றது. இதில் ரூ.3359 திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

மறுபுறம், ரூ.839 திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவையும்; ரூ.499 திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. ரூ.499 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே. ஆனால், ரூ.839 மற்றும் ரூ.3359 திட்டங்கள் முறையே 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளன. ரூ.3359 உடன், பயனர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலின் ஒரு வருட சந்தாவை பெறுகிறார்கள். அதே போல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பெறுகிறார்கள்.

இலவசமாக Disney+ Hotstar மற்றும் Amazon Prime வேண்டுமா?

இத்துடன் அப்பல்லோ 24|7 சர்க்கிள், ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற நன்மைகளும் கிடைக்கிறது. ரூ.839 மற்றும் ரூ.499 திட்டங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் 3 மாதங்களுக்கு வருகின்றன. இந்த இரண்டு திட்டங்களும் வரம்பற்ற 5G டேட்டா மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் பலன்கள் போன்ற கூடுதல் பலன்களை வழங்குகிறது.

இப்போது நாம் பார்த்த அனைத்தும் ஹாட்ஸ்டார் நன்மையை வழங்கும் திட்டங்களாகும். இப்போது நாம் பார்க்கவிருப்பது அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களாகும். பார்தி ஏர்டெல் இந்த நன்மையுடன் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களின் விலை ரூ.699 மற்றும் ரூ.999 ஆகும். இவை முறையே 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

இரண்டு திட்டங்களும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள். ரூ.699 திட்டத்தில், பயனர்கள் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்புடன் தினசரி 3ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். ரூ.999 திட்டத்தில், பயனர்கள் 84 நாட்கள் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் உடன் தினசரி 2.5ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த இரண்டு திட்டங்களும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸ், இலவச வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் பல கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 5 Airtel Prepaid Plans With Free Dinsey Plus Hotstar and Amazon Prime OTT Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X