Home
News

எப்போதுமே தனிவழி.. 4 திட்டங்களில் அள்ளி கொடுக்கும் BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா, 160 நாள் வேலிடிட்டி, 4G வருது!

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்திய நிலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மட்டும் எந்தவொரு திட்டங்களின் விலையையும் உயர்த்தவில்லை. இப்போதும் கூட மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி மாஸ் காட்டி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1000-க்குள் வைத்துள்ள சிறந்த 4 ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Plan) 160 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டம் மொத்தமாக 320ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க. பின்பு வரம்பற்ற அழைப்பு, தினசரி 100எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.997 திட்டம்.

எப்போதுமே தனிவழி.. 4 திட்டங்களில் அள்ளி கொடுக்கும் BSNL..

இதுதவிர ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 769 plan) 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் தேர்வு செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music)உள்ளிட்ட பல சலுகை இதில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL rs 666 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கப்படுகிறது. குறிப்பாக 105 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த திட்டத்தைத் தேர்வ செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும்.

வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் மற்றும் ஆஸ்ட்ரோடெல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

எப்போதுமே தனிவழி.. 4 திட்டங்களில் அள்ளி கொடுக்கும் BSNL..

வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் திட்டம். மேலும் ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்.

அதேபோல் 4ஜி சேவை விரைவில் நாடு முழுவதும் கொண்டுவர உள்ளது பிஎஸ்எனஎல் நிறுவனம். தற்போது சில முக்கிய இடங்களில் இந்நிறுவனம் 4ஜி சேவையை வழங்கி உள்ளது. கூடிய விரைவில் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையைக் கொண்டுவர உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 4 BSNL Prepaid Plans With unlimited calls and 3GB data per day Under Rs.1000: Check full list here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X