Home
News

Airtel பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 4 சூப்பர் ரீசார்ஜ் பிளான்கள்: மிஸ் பண்ணிடாதீங்க.!

ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களை விட சிறந்த இணைய வேகத்தை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். கடந்த 6 மாதங்களில் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனத்தில் தான் அதிக பயனர்கள் இணைந்துள்ளனர்.

சிறப்பான பிளான்களுடன்

அதாவது சிறப்பான பிளான்களுடன் அருமையான நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். இதுதவிர சிறந்த இணைய வேகத்தை இந்நிறுவனம்வழஙகுவதால் அதிக பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். அதேபோல் ஏர்டெல் நிறுவனம் அருமையான போஸட்பெய்ட் திட்டங்களையும்வைத்துள்ளது.

4 போஸ்ட்பெய்ட் பிளான்கள்

4 போஸ்ட்பெய்ட் பிளான்கள்

அதாவது ரூ.499 முதல் ரூ.1599 வரையிலான பல போஸட்பெய்ட் திட்டங்களை பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு ஏர்டெல் நிறுவனம் தனது பட்டியலில் வைத்துள்ளது.மேலும் இந்த போஸட்பெய்ட் திட்டங்கள் Disney+ Hotstar, Amazon Prime, Netflix, Airtel Xstream போன்ற பல ஓடிடி
சேவைகளை வழங்குவால் நல்ல வரவேற்பு உள்ளது.

இப்போது ஏர்டெல் பயனர்கள் மிஸ் பண்ணவே கூடாத 4 போஸ்ட்பெய்ட் பிளான்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் பிளான்

ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் பிளான்

ஏர்டெல் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளது இந்த ரூ.499 போஸ்ட்பெய்ட் பிளான். அதேபோல் இந்த திட்டத்தை அதிக பயனர்கள் தேர்வு செய்கின்றனர். இதில் என்னென நன்மைகள் உள்ளன என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட்

ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 75ஜிபி டேட்டா நன்மை உள்ளது. பின்பு ரோலோவர் டேட்டாவாக 200ஜிபியும், தினசரி 100 எஸ்எம்எஸ், ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஆறு மாத அமேசான் பிரைம் வீடியோ, விங்க் மியூசிக் பிரீமியம் அணுகல், ஏர்டெல் எக்ஸ்டிரீம் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

இதுதவிர குடும்ப உறுப்பினர்களை இணைக்க பயனர்கள் நபருக்கு ரூ.299 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் பிளான்

ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் பிளான்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 போஸ்ட்பெய்ட் பிளான் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மாதம் 100 ஜிபி டேட்டாவும், தினசரி 100 எஸ்எம்எஸ், ரோலோவர் டேட்டாவாக 200ஜிபியும், 6 மாதத்திற்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், ஒரு வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, விங்க் பிரீமியம் போன்ற பல நன்மைகள் கிடைக்கிறது.

குறப்பாக இதில் இரண்டு குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள முடியும். அதேபோல் இவர்களுக்கு மாதம் 30ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.1199 போஸ்ட்பெய்ட் பிளான்

ஏர்டெல் ரூ.1199 போஸ்ட்பெய்ட் பிளான்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 போஸ்ட்பெய்ட் பிளான் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மாதம் 150 ஜிபி டேட்டாவும், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ், ரோலோவர் டேட்டாவாக 200ஜிபியும், 6 மாதத்திற்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கிறது.

இதுதவிர ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா, விங்க் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்டிரீம் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது ஏர்டெல் ரூ.1199 போஸ்ட் பெய்டு திட்டம். மேலும் இதில் இரண்டு குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள முடியும். இவர்களுக்கு மாதம் 30ஜிபி டேட்டா நன்மை உள்ளது.

ஏர்டெல் ரூ.1599 போஸ்ட்பெய்ட் பிளான்

ஏர்டெல் ரூ.1599 போஸ்ட்பெய்ட் பிளான்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1599 போஸ்ட்பெய்ட் பிளான் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மாதம் 250 ஜிபி டேட்டாவும், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ், ரோலோவர் டேட்டாவாக 200ஜிபியும், 6 மாதத்திற்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கிறது.

இதுதவிர ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா, விங்க் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்டிரீம் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது ஏர்டெல் ரூ.1599 போஸ்ட்பெய்ட் திட்டம். மேலும் இதில் 3 குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Top 4 Airtel Postpaid Plans Available with Disney + Hotstar Subscription: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X