Home
News

இந்த 3 போனும் வேற லெவல் அம்சத்துடன் வருகிறது! ஜூன் மாத டாப் பெஸ்ட் போன் இது தானா?

இந்த ஜூன் மாதத்தின் இறுதிக்குள் 3 சூப்பரான ஸ்மார்ட்போன் (smartphone) மாடல்கள் அறிமுகமாகவுள்ளன. இந்த 3 மாடல்களும் எந்த பிராண்டில் இருந்து வெளிவருகிறது? என்னென்ன அம்சங்களுடன் இந்த மொபைல்கள் (Mobile) வெளியாகின்றன என்று பார்க்கலாம் வாங்க.

இந்த மாதத்தில் ஒரு புது ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால், இந்தியாவிற்குள் லேட்டஸ்ட் மாடலாக அறிமுகமாகவிருக்கும் இந்த 3 ஸ்மார்ட்போன்களில் இருந்து ஏதேனும் ஒன்றை தாராளமாக வாங்கலாம். ஒன்பிளஸ் (OnePlus), iQOO மற்றும் மோட்டோரோலா (Motorola) நிறுவனத்திடமிருந்து இந்த மாத இறுதிக்குள், அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களை பற்றி உடனே அறிந்துகொள்ளுங்கள். இந்த 3 மாடல்களின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை பற்றி தெரிந்துகொள்ளலாமா?

இந்த 3 போனும் வேற லெவல் அம்சத்துடன் வருகிறது! ஜூன் மாத டாப் போன்ஸ்!

OnePlus Nord 3 சாதனம் வரும் ஜூன் 21-ம் தேதி அறிமுகமாகிறது. இது 1.5K குவாலிட்டி உடன் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது Dimensity 9000 சிப்செட் உடன் வருகிறது. Oxygen OS 13 உடன் இந்த சாதனம் வருகிறது. இந்த OnePlus Nord 3 பட்ஜெட் விலையில் பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் செக்மென்ட்டில் புது போன் வாங்க விரும்புவோர் இந்த மாடலை தேர்வு செய்யலாம். அடுத்தபடியாக, மிட் ரேஞ் போன் மாடலில், iQOO Neo 7 Pro ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் அறிமுகமவிருக்கிறது. இந்த சாதனம் ரூ.35,000 விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தரமான டிஸ்பிளே, அட்டகாசமான கேமரா அம்சம் மற்றும் மிகவும் வேகமான பெர்பார்மன்ஸ் அம்சத்துடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இறுதியாக, இந்த மாதத்தின் இறுதியில் அறிமுகமாகவிருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலாக Motorola Razr 40 சீரிஸ் சாதனம் அறிமுகமாகிறது. இது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் உடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும். இது டூயல் டிஸ்பிளேவுடன் வரும் பிலிப் மாடல் ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். Motorola Razr 40 Ultra மாடல் 3.6' இன்ச் கொண்ட LTPO தொழில்நுட்பத்துடன் 144 Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது.

இந்த 3 போனும் வேற லெவல் அம்சத்துடன் வருகிறது! ஜூன் மாத டாப் போன்ஸ்!

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.65,000 விலை முதல் துவங்கி ரூ.95,000 விலைக்குள் பல வெவ்வேறு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் பிரீமியம் அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதன் பெர்பார்மன்ஸ் மற்றும் தயாரிப்பு குறித்து உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.

இந்த 3 ஸ்மார்ட்போன் மாடல்களும் இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படுகின்றது. உங்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஸ்மார்ட்போன் சாதனம் ஏதேனும் ஒன்று இதில் இருந்தால், தயக்கம் காட்டாமல், அறிமுகத்தின் போது உடனே முதல் விற்பனையில் எடுத்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Top 3 Upcoming Smartphone From OnePlus iQOO and Motorola In June 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X