BSNL-க்கு பெரிய கும்பிடு.. கம்மி பட்ஜெட்ல 160 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக சலுகைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனம் சில பட்ஜெட் விலை திட்டங்களில் அதிக நாள் வேலிடிட்டி உடன் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் பிளான் (BSNL Rs 249 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக 45 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது
பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் பிளான் (BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க.
பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் பிளான் (BSNL Rs 997 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 160 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். எனவே பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 320ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதேபோல் இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி வெளியிடும் பணிகளில் உள்ளது. கூடிய விரைவில் 5ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் பல்வேறு மக்கள் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








