ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகும் நாடுகள்.. எந்த நாட்டுக்கு முதல் ரேங்க்? இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா?
ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனங்களால் பொதுமக்கள் அதிகமாக அடிமையாக்கப்பட் 24 நாடுகளின் பட்டியல்கள் (countries are highly addicted to smartphones) இப்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்த்திடாத வகையில் சிறிய நாடுகள் முதல் பெரிய முன்னேறிய நாடுகள் வரை பல நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதிக மக்கள் ஸ்மார்ட்போனிற்கு அடிமையாக்கி உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நாடு எது? இந்தியவிற்கு இந்த பட்டியலில் எத்தனாவது இடம்? என்பது போன்ற சுவாரசியமான தகவலை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
ஸ்மார்ட்போன்ஸ் (Smartphones) என்பது இப்போது மிக முக்கியமான சாதனமாக மாறிவிட்டது. காலை நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழுவதற்கு அலாரம் (Alarm) வைப்பது முதல், அலுவலக வேலை, மெசேஜ்ஜிங் (Messaging), பொழுதுபோக்கும், தகவல் பரிமாற்றம், வாய்ஸ் கால் பேச (Voice calls), வீடியோ காலில் (Video call) பல மணிநேரம் அரட்டை அடிப்பது, போன் சூடாகும் வரை கேம் (Games) விளையாடுவது என்று பல காரியங்களுக்காக இப்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகும் நாடுகள்.. எந்த நாட்டுக்கு முதல் ரேங்க்?
என்ன தான் இவை கையடக்கமான சிறிய சாதனமாக இருந்தாலும், இது மனித வாழ்க்கையை (Human life) பெரியளவில் மாற்றிவிட்டது. உண்மையை சொல்ல போனால், இப்போது மனித வாழ்கை ஸ்மார்ட்போனை அதிகமாக நம்பி இருக்கிறது. கையில் காசு (Cash) இல்லாமல் கூட, எங்குவேண்டுமானாலும் தைரியமாக பயணம் செய்ய கூடிய அளவிற்கு மக்களுக்கு தைரியம் வந்துள்ளது என்றால், அதற்கு டிஜிட்டல் பேமெண்ட் முறை மற்றும் கையில் உள்ள ஸ்மார்ட்போன் தான் முக்கிய காரணம்.
பயனுள்ள விஷயங்களை தாண்டி, மனிதர்களுக்கே தெரியாமல், இந்த குட்டி சாதனம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் குறுகிய காலத்தில் அதற்கு அடிமையாக்கிவிட்டது (Smartphone addiction) என்றே ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. காரணம், அது தான் உண்மையும் கூட. குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது முதல், முதியவர்கள் யூடியூபில் (YouTube) அவர்களுக்கு பிடித்தமான வீடியோவை நாள் முழுக்க பார்வையிட்டு, அவர்களை ஒரு மயக்க நிலையில் அடிமையாக்கி வைத்துள்ளது என்பதே உண்மையாகும்.
இந்த உண்மையை வைத்து, எந்த நாட்டில் மக்கள் அதிகமாக ஸ்மார்ட்போனிற்கும், மொபைல் சாதனத்திற்கும் அடிமையாகியுள்ளனர் (Smartphones and mobile phone addiction) என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியை மெக்கில் பல்கலைக்கழகம் (McGill University) நடத்தியுள்ளது. இறுதியில், எந்த நாட்டு மக்கள் ஸ்மார்ட்போனிற்கு அதிகமாக அடிமையாகியுள்ளது என்ற பட்டியலை தற்போது எக்ஸ் தளம் வழியாக வெளியிட்டுள்ளது. எந்த நாட்டிற்கு எந்த இடம் என்ற விபரம் இதோ.
ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிய நாடுகள்.. எந்த நாட்டிற்கு எந்த இடம்? இந்தியாவிற்கு என்ன இடம்?
1. சீனா (China)
2. சவூதி அரேபியா (Saudi Arabia)
3. மலேஷியா (Malaysia)
4. பிரேசில் (Brazil)
5. தென் கொரியா (South Korea)
6. ஈரான் (Iran)
7. கனடா (Canada)
8. துருக்கி (Turkey)
9. எகிப்து (Egypt)
10. நேபால் (Nepal)
11. இத்தாலி (Italy)
12. ஆஸ்திரேலியா (Australia)
13. இஸ்ரேல் (Israel)
14. செர்பியா (Serbia)
15. ஜப்பான் (Japan)
16. யுனைடெட் கிங்டம் (United Kingdom)
17. இந்தியா (India)
18. அமெரிக்கா (United States of America)
19. ருமேனியா (Romania)
20. நைஜீரியா (Nigeria)
21. பெல்ஜியம் (Belgium)
22. சுவிட்ஸர்லாந்து (Switzerland)
23. ஃபிரான்ஸ் (France)
24. ஜெர்மனி (Germany)
ஸ்மார்ட்போன்களுக்கு மக்கள் அதிகமாக அடிமையாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 17வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பின்தொடர்ந்து தான் முன்னணி நாடான அமெரிக்காவே பட்டியலில் 18வது இடத்தில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications








