ஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..!

|

சைபர் குற்றம், ஹாக்கிங் போன்ற வார்த்தைகளுக்கு விளக்கமே தேவையில்லை, என்னடா இப்பிடி பண்றீங்களேடா என்று ஒரு வாரத்திற்க்கோ அல்லது மாசத்திற்க்கு ஒரு முறையாச்சும் நம்மை புலம்பவிட்டு விடுகின்றனர் இந்த ஹாக்கர்கள்..!

ஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..!

இ-மெயில், தகவல் பரிமாற்றத்தின் மிக முக்கியமான, மிகவும் பிரபலாமான பயன்பாடாக இருக்கும் அதே நேரத்தில், இ-மெயில்களில்தான் ஹாக்கர்கள் புகுந்து விளையாடி கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்து செயல்படவேண்டும், இ-மெயில்களில் நாம் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்று ஒரு பட்டியலே இருக்கிறது. அதையெல்லாம் நாம் சரி வர தெரிந்து பின்பற்றினால், நாம் ஹாக்கர்களை புலம்ப விடலாம்.

யார் வேண்டுமானாலும் உளவு பார்க்கலாம் - உஷார் !

உங்கள் வரி விவரங்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள்தான் பெரும்பாலான ஹாக்கர்கள் தேடும் பொக்கிஷங்கள். ஆக, அதுபோன்ற தகவல்களை இ-மெயில் செய்வதை தவிர்க்கவும். வரி மட்டுமல்ல, நிதி சம்பந்தப்பட்ட தகவல்களையும் தவிர்க்கலாம். முக்கியமாக உங்கள் முழு பெயர், விலாசம், அக்கவுண்ட் நம்பர்கள், சொத்து விவரங்கள் போன்றவைகள்.

ஸ்கேன் செய்யப்பட்ட டாக்குமெண்டுகள், ஹாக்கர்களுக்கு லட்டு சாப்பிடவது போல. மிக சுலபமாக அட்டாச்மெண்ட் செய்யப்பட்ட எதையும் சுருட்டி விடுவார்கள். அதில் உங்கள் ஐடி கார்டோ, வங்கி கணக்குப்புத்தக பக்கமோ மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். ஆக, இது போன்ற அட்டாச்மெண்ட்களை தவிர்க்கலாம்.

ஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..!

உங்கள் பயணங்கள் சம்பந்தபட்ட தகவல்களில், நீங்கள் எப்போது உங்கள் வீடுகளில் இருக்கமாட்டீர்கள் என்ற தகவலை சுலபமாக ஹாக்கர்களுக்கு சொல்லிவிட முடியும். ஆக, அதையும் தவிர்க்கலாம். நம்பினால் நம்புங்க, இன்னும் நம்மில் பலர் தத்தம் பாஸ்வோர்டுகளை இ-மெயில் மூலம் பரிமாறிக்கொண்டுதான் இருக்கிறோம். இதைவிட ஒரு பெரிய விருந்து ஹாக்கர்களுக்கு கிடைக்க முடியாது.

மின்சாரம் வேண்டாம், சூரியஒளியும் வேண்டாம், விளக்கேற்றலாம் வாங்க..!

உங்கள் அலுவலக சம்பந்தப்பட்ட தகவல்களை, உங்க சக அலுவலக நண்பருக்கு அனுப்புகையில் ப்ரைவேட் இ-மெயில் அக்கவுண்டுகளை பயன்படுத்த வேண்டாம். பயன்படுத்தி, ஒருவேளை அது ஹாக் செய்யப்பட்டால், உங்கள் வேலைக்கு உத்திரவாதம் கிடையாது. மருத்துவ தகவல்கள் பாதுகாப்பாக இல்லாத பட்சத்தில், அதை கொண்டு பிளாக் மெயில் அல்லது இன்சுரன்ஸ் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது. ஆக, அவைகளையும் இ-மெயில்களில் தவிர்க்கலாம்.

ஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..!

இவைகள் மட்டுமின்றி ப்ரைவேட் புகைப்படங்கள், குடும்பத்தார் விவரங்கள், தொலைபேசி நம்பர்கள் போன்றவைகளையும் இ-மெயில்களில் தவிர்த்தால், ஹாக்கர்களுக்கு தெரிந்தே நாம் உதவுவதையும் தவிர்க்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Check out here some ideas to avoid hacking in your Emails. They are interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X