ஒரே அசிங்கமா போச்சு! இந்த டாப் 10 லிஸ்ட்ல Google கம்பெனி பெயரே இல்ல.. ஆனா TCS, Accenture இருக்கு! என்ன லிஸ்ட்?
இதென்னடா சுந்தர் பிச்சைக்கு வந்த சத்திய சோதனை? என்று கேட்க வைக்கும்படியான டாப் 10 பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகின் தலைசிறந்த டெக் நிறுவனம் எது என்று கேட்டதுமே.. டக்கென்று நினைவிற்குள் குதிக்கும் கூகுள் (Google) நிறுவனம் அந்த பட்டியலில் இல்லை!
அப்படி என்ன பட்டியல் அது? உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்ட டாப் 10 நிறுவனங்கள் என்கிற பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் கூகுள் நிறுவனம் இல்லை. ஆனால் டிசிஎஸ், காக்னிசென்ட், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இதோ அந்த பட்டியல்!

01. முதல் இடத்தில அமேசான் (Amazon) நிறுவனம் உள்ளது: பிரபலன இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் சுமார் 1,461,000 ஊழியர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அமேசான் பிரிவுகளில் உள்ள அதன் கிளவுட் செக்ஷன் (Cloud Section), அமேசான் வெப் சர்வீஸ் (Amazon Web Services) உட்பட அனைத்தயும் உள்ளடக்கியது.
02. இரண்டாவது இடத்தில் ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் உள்ளது: ஐபோன் (iPhone) தயாரிப்பாளரான ஃபாக்ஸ்கான் நிறுவனமானது ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் மிகப்பெரிய ஒரிஜினல் எக்யுப்மென்ட் மேனுஃபேக்சரர் (Original equipment manufacturer), அதாவது அசல் உபகரண உற்பத்தியாளர் ஆகும். இந்நிறுவனம் உலகளவில் 826,608 பணியாளர்களை கொண்டுள்ளது.
03. மூன்றாவது இடத்தில் மிகவும் அறியப்பட்ட ஐடி நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சர் (Accenture) உள்ளது: உலகளவில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்ட டெக் நிறுவனங்கள் என்கிற பட்டியலின் மூன்றாவது இடத்தில் உள்ள அக்சென்ச்சர் நிறுவனத்தின் கீழ் மொத்தம் 738,000 பணியாளர்கள் உள்ளனர்.
04. நான்காவது இடத்தில் டிசிஎஸ் (TCS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளது: இந்த பட்டியலில் உள்ள முதல் இந்திய நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தான். இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இதன்கீழ் உலகளவில் 6 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளனர்.
05. ஐந்தாவது இடத்தில டெலிபர்ஃபார்மன்ஸ் (Teleperformance) நிறுவனம் உள்ளது: பிரான்ஸை தளமாக கொண்ட டெலிபெர்ஃபார்மன்ஸ் நிறுவனத்தின் கீழ் உலகம் முழுவதும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை செய்கிறரர்கள். அறியாதோர்களுக்கு இது ஒரு உலகளாவிய டிஜிட்டல் வணிக சேவை (Global digital business services) நிறுவனமாகும்.
06. ஆறாவது இடத்தில் காக்னிசென்ட் (Cognizant) நிறுவனம் உள்ளது: உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்ட டெக் நிறுவனங்கள் என்கிற பட்டியலின் ஆறாவது இடத்தில் உள்ள, அமெரிக்காவை தளமாக கொண்ட காக்னிசன்ட் நிறுவனத்தில் சுமார் 351,500 பேர் வேலை செய்கிறார்கள்.
07. ஏழாவது இடத்தில் Infosys (இன்ஃபோசிஸ்) நிறுவனம் உள்ளது: இந்த பட்டியலில் உள்ள இரண்டாவது இந்திய ஐடி நிறுவனம் இன்ஃபோசிஸ் ஆகும். உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய 'லீடர்களில்' இவும் ஒன்றாகும். ஆலோசனை மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமானது உலகளவில் 3 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளது.
08. எட்டாவது இடத்தில் சீமென்ஸ் (Siemens) நிறுவனம் உள்ளது: உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்ட டாப் 10 டெக் நிறுவனங்கள் என்கிற பட்டியலில் உள்ள ஒரே ஜெர்மன் நிறுவனம் இதுதான். சீமென்ஸ் நிறுவனத்தின் கீழ் உலகம் முழுவதும் 190 இடங்களில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்.
09. ஒன்பதாவது இடத்தில் ஐபிஎம் (IBM) நிறுவனம் உள்ளது: கடந்த 2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 88 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தியது. இப்படியாகத்தான் இந்நிறுவனம் இந்த பட்டியலின் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
10. பத்தாவது இடத்தில் கூகுள் (Google) நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் உள்ளது: மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் உலகம் முழுவதும் முழுநேர பதவிகளில் சுமார் 221,000 பணியாளர்களை கொண்டுள்ளது. மைக்ரோசாப்டின் ஊழியர்களில் 60 சதவீதம் பேர் அதன் சொந்த நாடான அமெரிக்காவில் உள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








