17 வயதிலேயே எலான் மஸ்க் செய்த "அடேங்கப்பா" காரியம்; தலைவன் அப்போவே மாஸ்!

|

ஏணியை கூரையை நோக்கி போடாதீர்கள், வானத்தை நோக்கி போடுங்கள் என்ற பொன்மொழி கேள்விப்பட்டிருப்போம் அதற்கேற்ப கனவு காண்பவர்களில் ஒருவர் தான் எலான் மஸ்க். அதன்படி அவரின் தற்போதைய இலக்கு செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது. அதற்கான ஏற்பாடுகள் அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. யார் இந்த எலான் மஸ்க்?

மஸ்க் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்

மஸ்க் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்

டெஸ்லா சிஇஓ, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பல அங்கீகாரம் இவருக்கு உண்டு. அவரது ஒரே ஒரு டுவிட் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பையே ஏற்ற இறக்கம் செய்யும். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இருக்கிறார். இதுபோன்ற பல தகவல்களை எலான் மஸ்க் குறித்து நாம் அறிந்திருப்போம். ஆனால் மஸ்க் குறித்து இதுவரை பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவலை விரிவாக பார்க்கலாம்

புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர்

புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர்

1. எலான் மஸ்க் சிறுவயதில் தனது வீட்டுப் பணியாளருடன் தான் பெரும்பாலான நேரத்தை செலவிடுவாராம். அதேபோல் புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார்.

2. மஸ்க், 1984 ஆம் ஆண்டில் கணினி விளையாட்டு ஒன்றை உருவாக்கி விற்பனை செய்திருக்கிறார். 12 வயதில் கணினி விளையாட்டின் மீது தனக்கு இருந்த அதீத ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட மஸ்க், சொந்தமாக பிளாஸ்டர் என்ற கேம்மை உருவாக்கி இருக்கிறார். இந்த கேம்மை தொழில்நுட்பம் தொடர்பான பத்திரிக்கை ஒன்றுக்கு $500-க்கு விற்பனையும் செய்துள்ளார்.

Giving உறுதிமொழியில் கையெழுத்து

Giving உறுதிமொழியில் கையெழுத்து

3. University of Philadelphia-ல் பொருளாதாரம் மற்றும் இயற்பியல் படிப்பு படித்து பட்டம் பெற்றிருக்கிறார். கல்லூரி நாட்களில் ஒரு பெரிய வீட்டில் தங்கியிருந்த மஸ்க், அந்த வீட்டை வார இறுதி நாட்களில் NightClub ஆக நண்பர்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதித்துள்ளார். அப்போது இருந்தே முதலீடு மற்றும் வருமானம் ஈட்டுவதில் மஸ்க்கிற் ஆர்வம் அதிகம்.

4. பில் கேட்ஸ், சர் ரிச்சர்ட் பிரான்சன் போன்ற பணக்காரர்களை தொடர்ந்து எலான் மஸ்க்கும் Giving உறுதிமொழியில் கையெழுத்திட்டுள்ளார். இந்த Giving உறுதிமொழியானது தனது பெரும்பாலான செல்வத்தை நன்கொடையாக வழங்க ஒப்புக் கொள்வது ஆகும்.

மூன்று நாடுகளிலும் குடியுரிமை

5. 1971 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் மஸ்க். பின் 1989-ல் கனடாவுக்கு சென்றிருக்கிறார். கனடாவில் பிறந்த தனது தாயார் மூலமாக கனேடிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருக்கிறார். தொடர்ந்து 1992-ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மஸ்க் தற்போது அங்கு தான் வசித்து வருகிறார். இதையடுத்து எலான் மஸ்க்கிற்கு தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் குடியுரிமை உண்டு.

6. மஸ்க், தனது 17 வயதில் கனடாவுக்கு சென்றிருக்கிறார். கனடாவுக்கு செல்வதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தில் கணினி திறனாய்வு தேர்வு ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த தேர்வை திருத்தம் செய்த தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக தகவல் மேலான்மை இயக்கனர், 17 வயதில் இவ்வளவு அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களை பார்த்ததில்லை. மஸ்க்கை மீண்டும மறுபரீசிலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

வெற்றிகரமான தோல்வி

7. எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார் மஸ்க்.

8. மஸ்க் ஒவ்வொரு தோல்வியும் குறிப்பிடும் வார்த்தை இது "வெற்றிகரமான தோல்வி" என்பதுதான். காரணம் இந்த தோல்வியின் மூலம் எப்படி தோல்வி அடையக் கூடாது என்பதை கற்றுக் கொண்டேன் என மஸ்க் குறிப்பிடுவார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்

9. பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான மஸ்க், வாரத்திற்கு 100 மணிநேரம் பணி புரிகிறார். மஸ்க் தனது பணி நெறிமுறையில் மிகவும் கவனமாக இருப்பாராம்.

10. ஆரம்பக் கட்டத்தில் பல்வேறு மோசான முடிவுகளின் காரணமாக டெஸ்லாவை விற்கும்படி மஸ்க்கிற்கு ஆலோசனை வந்துள்ளது. ஆனால் விடாமுயற்சியால் அதே நிறுவனத்தை முன்னேற்றி தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Top 10 Success Secrets About Elon Musk

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X