Top 10 Tech Billionaires: டாப் 10 டெக் பணக்காரர்கள் சொத்து மதிப்பு தெரியுமா?

|

பொதுவாக பணக்காரர்கள் சொத்து மதிப்பு குறித்து அனைவருக்கும் தெரியும், டெக்னாலஜி அதாவது தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்டவைகள் வாரியாக சொத்து மதிப்பை பார்க்கலாம். அதோடு கீழே வழங்கப்பட்டதில் டெக், அதாவது தொலைத்தொடர்பு, தகவல் தொலைத்தொடர்பு மூலம் பொருள் ஈட்டியதன் சொத்து மதிப்பும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.

டாலர் பில்லியன் கணக்கில் சொத்து மதிப்பு

டாலர் பில்லியன் கணக்கில் சொத்து மதிப்பு

ஒரு பில்லியன் என்பது 10 ஆயிரம் லட்சம் அதாவது 100 கோடி என்பது அனைவருக்கும் தெரிந்தது. நாம் கீழே வழங்கப்பட்டவர்களின் சொத்து மதிப்பை பில்லியன் கணக்கில் பார்ப்போம். அதேபோல் குறிப்பாக மற்றொன்றை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். கீழே வழங்கப்பட்டுள்ள அனைத்தும் அமெரிக்க டாலர் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 71 ரூபாய் 80 பைசா ஆகும். 1 பில்லியன் டாலர் என்பது 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஆகும்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி (19 ஆம் தேதி,ஏப்ரல் மாதம் 1957 ஆம் ஆண்டு பிறந்தவர்) ஒரு இந்திய தொழில் அதிபர் ஆவார். இவர் பார்ச்சூன் குளோபல் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிக பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி (நிர்வாக இயக்குநர்) பதவிகளை வகிப்பவரும் ஆவார்.

உலகளவு பில்லியனர்களில் ஒருவர்

உலகளவு பில்லியனர்களில் ஒருவர்

உலகளவில் பில்லியனர்களில் ஒருவரான இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, ஆசிய அளவிலும் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரரான இவர் 2019-ம் ஆண்டில் மட்டும் (டிசம்பர் 23 வரை) மொத்தம் 17 பில்லியன் டாலர் சொத்து சேர்த்துள்ளாராம். இந்த விகிதத்தின் மூலம் முகேஷ் அம்பானியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 61 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக புளூம்பெர்க் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியாகியுள்ளது.

Ambani Antilia House: அம்பானியின் ஆடம்பர வீடு பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்.!Ambani Antilia House: அம்பானியின் ஆடம்பர வீடு பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்.!

 டெக் சொத்து மதிப்பு

டெக் சொத்து மதிப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியைத் தொடர்ந்து ஆசியாவிலேயே அதிக சொத்து சேர்த்த பணக்காரர்கள் பட்டியலில் சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனர் ஜாக் மா, 2019ஆம் ஆண்டில் 11.3 பில்லியன் டாலரைத் தனது சொத்து மதிப்பில் சேர்த்துள்ளாராம். அதேநேரம், உலகின் மிகப் பெரிய பணக்காரரான அமேசானில் தலைவர் ஜெஃப் பெசோஸ் இந்த ஆண்டில் 13.2 பில்லியன் டாலரை இழந்துள்ளார். தற்போதைய இவரின் டெக் வேர்ல்ட் சம்பந்தமான சொத்து மதிப்பு $51.4 பில்லியன் ஆகும்.

சிவ சுப்பிரமணியம்

சிவ சுப்பிரமணியம்

சிவ சுப்பிரமணியம் என்ற சிவ நாடார் தமிழகத் தொழிலதிபரும், கல்வியாளரும் ஆவார். ஹச்.சி.எல் கணினி குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக ஆளுநராகவும் இருக்கிறார். சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய இவர் மதுரை, நெல்லை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தமது நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிக்கொடுக்கும் என்று தெரிவித்தார்

நன்கொடை வழங்குதலில் பெற்ற இடம்

நன்கொடை வழங்குதலில் பெற்ற இடம்

இந்திய தொழிலதிபர்களில் நன்கொடை வழங்குவதில் 2018-ம் ஆண்டு ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் ஹெச்.சி.எல் நிறுவனம் ரூ.826 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர். 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. சுமார் 1,43,000 பேர் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

கம்பெனி சட்டம்

கம்பெனி சட்டம்

கம்பெனிகள் சட்டத்தின்படி, நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 2 சதவிகிதத்தை சமூக மேம்பாட்டுக்காகச் செலவிட வேண்டுமென்பது விதி. அதனடிப்படையில், ஒவ்வொரு நிறுவனங்களும் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு ஹெச்.சி.எல் நிறுவனம் ரூ.826 கோடி தொகைக்கு சமூகப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டும் நன்கொடை வழங்குவதில் ஷிவ் நாடார் முதலிடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரின் டெக் வேர்ல்ட் சம்பந்தமான சொத்து மட்டும் $14.4 பில்லியன் ஆகும்.

Jio vs Airtel vs Vodafone: ரூ.200-க்கு கீழ் போட்டிப்போட்டு திட்டங்கள் அறிமுகம்Jio vs Airtel vs Vodafone: ரூ.200-க்கு கீழ் போட்டிப்போட்டு திட்டங்கள் அறிமுகம்

சுனில் மிட்டல்

சுனில் மிட்டல்

சுனில் மிட்டல், இந்தியப் பெருவணிகரும், கொடையாளியும் பாரதி நிறுவனத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார். இவரது பாரதி நிறுவனம் தொலைதொடர்பு, காப்பீடு, வீடு,நில ஆளுகை, தங்குவிடுதிகள், வேளாண் மற்றும் உணவு போன்ற பல துறைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்தக் குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஏர்டெல் உலகின் மூன்றாவது பெரிய மற்றும் இந்தியாவின் முதலாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்குகின்றது. இந்நிறுவனம் ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் 20 நாடுகளில் செயற்பட்டு 300 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இவரின் டெக் வேர்ல்ட் சம்பந்தமான சொத்து மட்டும் $7.6 பில்லியன் ஆகும்.

ஆஷிம் பிரேம்ஜி

ஆஷிம் பிரேம்ஜி

மென்பொருள் நிறுவனம், மின்சாதன பொருள்கள் விற்பனை உள்ளிட்டவற்றில் பிரபலமான விப்ரோ நிறுவனத்தின் சேர்மனாக இருக்கும் அஆஷிம் பிரேம்ஜி 1.17 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு ஆகும்.

விப்ரோ தலைவர்

விப்ரோ தலைவர்

விப்ரோ தலைவர் ஆஷிம் பிரேம்ஜி பெற்றுள்ளார். இவர், ரூ.453 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். நாட்டின் முதல் பணக்காரரான அம்பானி ரூ.402 கோடி நன்கொடை வழங்கி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். இன்போஸிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலகேனி தன் மனைவி ரோகிணியுடன் இணைந்து ரூ.346 கோடி மதிப்புக்கு அறப்பணிகள் மேற்கொண்டுள்ளார். இவரின் டெக் வேர்ல்ட் சம்பந்தமான சொத்து மட்டும் $7.2 பில்லியன் ஆகும்.

இன்போசிஸ் நாராயண மூர்த்தி

இன்போசிஸ் நாராயண மூர்த்தி

இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். நாராயண மூர்த்தி 2002ஆம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின் தனது நேரத்தை சமூகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.

பத்ம விபூசன் விருது

பத்ம விபூசன் விருது

இந்திய அரசு, அவரது தொண்டினைப் பாராட்டி தேசத்தின் உயரிய விருதாகிய பத்ம விபூசன் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இவரின் டெக் வேர்ல்ட் சம்பந்தமான சொத்து மட்டும் $2.47 பில்லியன் ஆகும்.

சேனாதிபதி கோபாலகிருஷ்ணன்

சேனாதிபதி கோபாலகிருஷ்ணன்

சேனாதிபதி கோபாலகிருஷ்ணன், இவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் என்று பலராலும் அறியப்பட்டவர். இவர் ஆக்ஸிலர் வென்ச்சர் என்ற நிறுவனத்தின் சேர்மன் ஆவார். இந்த நிறுவனம் தொடக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் மற்றும் நிதியளிக்கும் நிறுவனமான ஆகும். இந்தியாவை தளமாகக் கொண்ட உலகளாவிய ஆலோசனை மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸின் முன்னாள் நிர்வாக துணைத் தலைவராக (முன்னாள் இணைத் தலைவராக) இருந்தார். அதன் ஏழு நிறுவனர்களில் இவரும் ஒருவர். அவர் 2013-14 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உச்ச தொழில் அறை கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு இவரது டெக்னாலஜி சம்பந்தமான சொத்து மதிப்பு 2.36 பில்லியன் டாலர் ஆகும்.

ஸ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்பு, 24 ஆண்டுகளாக உலகின் மிகப் பிரபலமான மென்பொருள் மற்று சி.ஆர்.எம் நிறுவனமான ஜோஹோ கார்ப் (Zoho Corp) நிறுவனத்தை நடத்தி வருகிறார். சுயமாக நிதித் திரட்டிக்கொண்டது மற்றும் லாபம் ஈட்டும் நிறுவனமாக இது விளங்குகிறது. இதன் வருவாய் தொடர்பாக பல்வேறு யூகங்கள் இருந்தாலும், 2010 ல் ஜோஹோ 100 மில்லியன் டாலரை கடந்தது என்று சொல்லி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். சந்தை வளர்ச்சிக்கு ஏற்ப தற்போதைய வருவாயை கணக்கிட்டுக்கொள்ளலாம் என்கிறார். இவரின் டெக் சொத்து மதிப்பு 1.83 பில்லியன் டாலர் ஆகும்.

Motorola One Vision ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!Motorola One Vision ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!

நந்தன் நிலெக்கணி

நந்தன் நிலெக்கணி

நந்தன் நிலெக்கணி, இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உடன்தலைவராகப் பணிபுரிந்த மென்பொருள் தொழில்முனைவர் ஆவார். இந்திய அரசால் இந்திய வேறிலித்தனி அடையாளவெண் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து ஜூலை 9, 2009 ஆம் ஆண்டு இன்போசிஸ் பதவியைத் துறந்தார். அதன்பின் இந்த பதவியை விடுத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரின் மொத்த டெக் சொத்து மதிப்பு 1.81 பில்லியன் டாலர் ஆகும்.

கே. தினேஷ்

கே. தினேஷ்

கே. தினேஷ், இந்திய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸின் கோஃபவுண்டர் ஆவார். 2011 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் குழுவிலிருந்து விலகியதிலிருந்து, அவரும் அவரது மனைவி ஆஷாவும் பரோபகாரத்தில் தங்களை அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் நாராயண சுகாதார மருத்துவமனையில் ஒரு புற்றுநோய் மையம் மற்றும் மைசூர் நகரில் உள்ள அவர்களின் மூதாதையர் நிலத்தில் ஒரு கிளினிக்கிற்கு நிதியளித்துள்ளனர். இவரின் மொத்த சொத்து மதிப்பு $1.4 பில்லியன். உலக தரவரிசை- 1650 இடத்தை பிடித்துள்ளார். இவரது மொத்த டெக் சொத்து மதிப்பு 1.61 பில்லியன் டாலர் ஆகும்.

அடடா., விண்வெளி வீரர்களோடு விண்ணுக்கு செல்லும் இட்லி, பிரியாணி, அல்வா என 30 வகை உணவுகள்: இஸ்ரோஅடடா., விண்வெளி வீரர்களோடு விண்ணுக்கு செல்லும் இட்லி, பிரியாணி, அல்வா என 30 வகை உணவுகள்: இஸ்ரோ

எஸ். டி. ஷிபுலால்

எஸ். டி. ஷிபுலால்

எஸ். டி. ஷிபுலால், ஒரு இந்திய வணிக நிர்வாகி. அவர் இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார், மற்றும் அதன் ஏழு நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். அவர் ஜூலை 31, 2014 அன்று தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி பதவியில் இருந்து விலகினார், அவருக்குப் பிறகு இன்போசிஸின் முதல் நிறுவனர் அல்லாத தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் விஷால் சிக்கா ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டிற்கான இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இவரது மொத்த டெக் சம்பந்தமான சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர் ஆகும்.

Best Mobiles in India

English summary
Top 10 Richest People In India In Tech World!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X