Home
News

கல்வியில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவமும்-10 காரணங்களும்.!

இன்றைய மனித வாழ்வின் அன்றாட செயல்கள் உட்பட அத்தியாவசிய செயல்கள் வரை அனைத்துமே கணினி மற்றும் இணையத்தினை மையப்படுத்தி அமைந்துவிட்ட சூழலில்,கல்வியில் தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்த பதிவு.

By Ilamparidi

இன்றைய உலகம் என்பதானது முழுக்க முழுக்க கணினி மற்றும் இணையம் ஆகியவற்றினைச் சார்ந்து தனது இருப்பினை தக்கவைத்துக்கொள்கிற,தனது தேவைகளை பூர்த்திச் செய்துகொள்கிற,புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்கின்ற மனிதர்களைக் கொண்ட ஒன்றேயாகும்.

இணையத்தினை தவிர்த்து நமது வாழ்வின் அத்தியாவசிய தேவைகளினைப் பூர்த்தி செய்துகொள்ள இயலாது என்கிற அளவினுக்கு நமது வாழ்வினூடே இணையம் இரண்டறக் கலந்துவிட்ட இச்சூழலில்,எதிர்காலச் சமுதாயத்தினை உருவாக்குகிற கல்வியில் அதனைக் கற்பிக்கும் முறைகள் தமிழ் தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த பதிவு.

அனைவருக்குமான பொதுத்தளம்:

அனைவருக்குமான பொதுத்தளம்:

சமூகக் கட்டமைப்பில் எல்லாத்தரப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்கு தேவையான கல்விசார் தகவல்கள்,புத்தகங்கள்,ஆய்வக செய்முறை புத்தகங்கள் மற்றும் இன்ன பிறவற்றினை எளிதாக பெற்றிட இயலுவதில்லை.அத்தைகய நேரங்களில் மாணவர்களும்,ஆசிரியர்களும் தங்களுக்கு தேவையான தகவல்களை இணையத்தின் வழியாக எளிதாக சேகரித்துக்கொள்ளலாம்.மேலும் தங்களுக்கு தேவையான புத்தகங்கள் உள்ளிட்டவற்றினை மின்நூல்களாக தரவிறக்கி சேகரித்துக்கொள்ளலாம்.தேவையான போது பயன்படுத்திக்கொள்ளலாம்.இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்விசார் தேடுதல்களை விரிவாக்க உதவிடும்.

மேம்படுத்திக்கொள்ள:

மேம்படுத்திக்கொள்ள:

மாணவர்கள் தங்களது கல்விசார் தகவல்களைத் தவிர்த்து இந்தச் சமூகம் குறித்தான அவர்கள் தம் பார்வையானது விரிவடைவதால் மாணவர்கள் கல்வி மற்றும் சமூகம் சார்ந்து அதிகப்படியான தகவல்கள்களினை தெரிந்துகொள்ளவும்,ஆளுமைப்பண்பு உள்ளிட்டு அனைத்து வகைகளிலும் மேம்படுத்திக்கொள்ள தொழில்நுட்பம் உதவும்.

மொபைல்:

மொபைல்:

மாணவர்கள் மொபைல் பயன்படுத்திடுவதனால் தங்களுக்கு தேவையான தகவல்களை புத்தகங்ளில் அதிகப்படியான நேரம் செலவழித்து தேடுவதனை விடவும் மொபைல் போன்களின் மூலம் இணையத்தினைப் பயன்படுத்தி எளிதாகப் பெற்றிடவும்,அதன் வாயிலாக கல்வி சார்ந்து தங்களது சந்தேகங்களினை தீர்த்துக்கொள்ள இயலும்

தன்னம்பிக்கை எழுச்சி பெற:

தன்னம்பிக்கை எழுச்சி பெற:

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இணையத்தினைப் பயன்படுத்தி தமது வாழ்வினில் வென்றவர்கள்,தாங்கள் முன்னேறிட இணையம் மற்றும் தொழில் நுட்பத்தினை ஓர் கருவியாக பயன்படுத்திக்கொண்டவர்கள் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாறு,அவர்கள் வெற்றிபெற கையாண்ட விதங்கள் ஆகியவற்றினை கூறுவதனைவிடவும்,குறும்படங்களாக திரையிட்டுக்காட்டுதல் உள்ளிட்டவை அவர்களிடத்தே ஓர் தன்னம்பிக்கை எழுச்சியினை உருவாக்கிடும்.

ஆர்வமூட்டும் வகையில்:

ஆர்வமூட்டும் வகையில்:

மாணவர்களிடத்தே கல்வியினை திணிப்பதனை விடவும் அவர்களாக கற்றிட வேண்டும் என்ற ஆர்வத்தினை உண்டாக்குதல் சிறந்தது.இதற்கு தொழில்நுட்பம் பெருமளவில் உதவும்.டிஜிட்டல் வகுப்பறைகள் வழியாக கற்பிப்பதின் வழியாக மாணவர்களிடையே கல்வி மற்றும் கற்றல் குறித்த ஆர்வத்தினை உண்டாக்கலாம்.

தகவல்களை சேகரிக்க:

தகவல்களை சேகரிக்க:

கற்பதற்கான மூலப்பொருட்கள் எல்லா மாணவர்களுக்கும் எளிதாக கிடைப்பதில்லை.அப்படியே கிடைத்திட்டாலும் போதிய பணமில்லாமை உள்ளிட்ட காரணங்களால் வாங்கிட இயலுவதில்லை.ஆனால்,இணையத்தினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான புத்தகங்களை மின் நூல்கள் வடிவிலும்,ஆய்வக குறிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் எல்லாவற்றினையும் எளிதாக பெறுவதோடு மட்டுமன்றி தரவிறக்கி கொண்டு பயன்படுத்திடவும் இயலும்.

இணைய வழி கற்றல்:

இணைய வழி கற்றல்:

பள்ளி கல்லூரிக்கு செல்ல இயலாத மாணவர்கள் தங்களது வகுப்புகளை இணையம் வழியாக காணலாம்.அதன் வழியாகவே தாங்கள் கற்கலாம்.இப்போது பல பல்கலைக்கழகங்கள் பல்வேறு விதமான படிப்புகளை இணைய வழி கற்றலின் வாயிலாக வழங்குகின்றன.இது கல்லூரிக்கு செல்ல இயலாதவர்கள் மற்றும் வேலை நிமித்தமாக மேற்படிப்பு படிக்க விரும்புவோர் இம்முறைகளினை பின்பற்றலாம்.

ஆன்லைன் தேர்வுகள்:

ஆன்லைன் தேர்வுகள்:

அரசுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றினுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்பவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்கள்,பாடத்திட்டங்கள் உள்ளியிட்டவற்றினை இணையத்தின் வழியாக,செயலிகள் மூலம் அறிவதோடு மட்டுமின்றி அவர்களுக்காக நடத்தப்பெறும் ஆன்லைன் தேர்வுகளில் பங்கேற்பதின் மூலம் அவர்கள் தமது தயாரிப்பு நிலையினை அறிந்துகொள்வதோடு மட்டுமன்றி மேலும் அறிந்திடவும் இவைகள் உதவும்.

சேகரிப்பானாக:

சேகரிப்பானாக:

போதுமான புத்தகங்களுக்கு மேல் வீடு,கல்லூரிகளில் சேமித்துவைக்க இயலாதபோது அதிகப்படியான தகவல்களை சேமித்து வைக்க இணையமும்,கணினியும் உதவும்.இதன் மூலம் தங்களுக்கு அத்தியாவசியமானவற்றினை போதிய பாதுகாப்புடன் சேமிக்கவும்,பள்ளி கல்லூரிகளுக்கு அதிகப்படியான பொருட்களை சுமந்து செல்வத்தினை குறைத்திடவும் உதவும்.

துல்லியமானதாக:

துல்லியமானதாக:

எவ்வித எழுத்துப்பிழை உள்ளிட ஏதுமின்றி விடைத்தாட்கள் உள்ளிட்டவற்றினை திருத்தம் செய்திட கணினி உதவிடும்.ஓஎம்ஆர் விடைத்தாட்களை எவ்வித பிழையுமின்றி திருத்தம் செய்திடவும்,நேரத்தினை மீதமாக்கிடவும் கணினியும் தொழில் நுட்பமும் பெரிதும் உதவிடும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பழைய ஸ்மார்ட்போன்களை பயனுள்ள கருவிகளாக மாற்றுவது எப்படி?

Best Mobiles in India

English summary
top-10-reasons-technology-is-important-for-education.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X