ஓ மை காட்! இந்த 10 விஷயமும் ஒரே படத்திலயா? அதான் KALKI 2898 AD படத்துக்கு இவ்வளவு அலப்பறையா? சரி தான்..
கல்கி 2898 ஏடி (KALKI 2898 AD) திரைப்படத்தை பற்றி தான் இப்போது இந்தியா முழுக்க பேச்சு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்து காத்திருந்த திரைப்படம் இப்போது திரையரங்குகளை எட்டியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில், ஒரே திரைப்படத்தில் இத்தனை வியக்கத்தகு அற்புதங்களை இதுவரை யாரும் பார்த்திருக்கவே முடியாது. அதிபயங்கரமான அதிநவீன தொழில்நுட்பத்துடன், அல்டிமேட்டாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் 'ஓ மை காட்' (Oh My God) என்று வியக்கும் வகையில் யாருக்கும் தெரியாத 10 சுவாரசியமான தகவல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
1. இந்தியாவில் முதல் முறையாக ஒரு அதிபயங்கரமான கேமரா:
IMAX டிஜிட்டல் கேமரா, ARRI ALEXA 65 மற்றும் ARRI DNA லென்ஸ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி 6.5K தெளிவுத்திறனுடன் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. இது IMAX உயர்நிலைக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்திய திரைப்படத்தில் முதல் முறையாக இந்த அதிநவீனமான கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. ஒரே திரைப்படம் ஆனால் பல ஃபார்மெட்ஸ்:
கல்கி 2898 ஏடி திரைப்படம், 2D, 3D, IMAX மற்றும் 4DX உள்ளிட்ட பல்வேறு ஃபார்மெட்களில் வெளியிடப்பட்டுள்ளது.
3. உங்கள் கண்களை ஏமாற்றும் விசுவல் எபெக்ட்ஸ்:
இந்த திரைப்படம் அதிநவீன காட்சி அனுபவத்தை உருவாக்க நம்பமுடியாத அளவிற்கு VFX மற்றும் புதுமையான ஒளிப்பதிவை கொண்டுள்ளது. இது உண்மையில் பார்ப்பவர் கண்களை ஏமாற்றும் விதத்தில் மிகவும் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
4. மூன்று உலகங்களை கண்முன்னே கொண்டு வரும் 3D கிராபிக்ஸ்:
இந்த திரைப்படம் மூன்று தனித்துவமான உலகங்கழில் நடைபெறுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காசி, காம்ப்ளெக்ஸ் மற்றும் ஷம்பலா ஆகிய மூன்று உலகங்கள் காண்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உலகமும் 700 VFX காட்சிகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்திய சினிமாவில் இது அதிக எண்ணிக்கை கொண்ட VFX ஆகும்.
5. புஜ்ஜி காரை உருவாக்கியது யார் தெரியுமா?
இப்படத்தில் உள்ள கல்கி கார் அல்லது புஜ்ஜி என்ற காரை மஹிந்திரா ரிசர்ச் வேலி டீம் மற்றும் ஜெயம் ஆட்டோ இன்ஜினியரிங் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த காரை உருவாக்க சுமார் நான்கு கோடி ரூபாய் செலவாகியுள்ளது. ஓ மை காட் ஒரு காருக்கு 4 கோடி செலவா?
6. மறைமுகமாக கடவுள் கிருஷ்ணனின் அவதாரம்:
KALKI 2898 AD திரைப்பட டிரெய்லரில், '6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சக்தி மீண்டும் வந்ததாக' ஒரு வரி குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்பு, கிருஷ்ணரின் அவதாரத்தின் முடிவைக் குறிக்கும் ஆண்டான கிமு 3102 ஆண்டை குறிக்கிறது என்பது பலரும் அறிந்திடாத உண்மை.
7. லெஜெண்டரி நடிகர்களின் கூட்டு:
கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான ஜிராப்தார் படத்தில் இணைந்து நடித்த கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர் என்பது வாவ் மேட்டராக அமைந்துள்ளது.
8. 81 வயதிலும் பின்னி பெடல் எடுக்கும் ஸ்டண்ட்:
81 வயதான அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய சண்டை காட்சிகள் மிரட்டல் மாஸாக அமைக்கப்பட்டுள்ளது.
9. வியப்பில் ரசிகர்கள்:
மிகவும் வயதான தோற்றத்தில், மெலிந்த தோலுடன் இப்படத்தில் கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் (Supreme Yaskin) கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தான் கமல்ஹாசன் என்று கண்டுபிடிக்க குரல் மட்டுமே சாட்சிபடுத்துகிறது. அந்த அளவில் இவரது மேக்கப் பிரமாதமாக அமைக்கப்பட்டுள்ளது.
10. 18 வருட இடைவேளைக்கு பின் சினிமாவில்:
18 வருட இடைவெளிக்குப் பிறகு நடிகை சோபனா இந்தப் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications