Just In
- 9 min ago
உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
- 34 min ago
அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ, லாவா, சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!
- 15 hrs ago
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 17 hrs ago
குறைந்த விலையில் இன்று மட்டும் தான் சலுகை.. உடனே ஆர்டர் செய்யுங்கள்.. அட்டகாச Tecno போன்கள்..
Don't Miss
- Movies
அனிருத்திற்கு விரைவில் டும்டும்டும்...பொண்ணு அவர் இல்லையாம்...அப்போ யாரு?
- News
கடுகடுத்த ஸ்டாலின்.. "அடிமைகள்" + டி.ஆர் பாலுவை கேளுங்க.. சிக்கலில் 2 புள்ளிகள்?.. தடதடக்கும் கோட்டை
- Sports
ராஜஸ்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? எங்கே சொதப்பினார் கேப்டன் சஞ்சு சாம்சன்?
- Finance
எல்.ஐ.சி பங்குகள் வீழ்ந்தாலும் லாபத்தை கொடுக்கும் டெல்லிவரி மற்றும் ஜொமைட்டோ : எப்படி தெரியுமா?
- Automobiles
இந்த பைக் வாங்கும் விலையில் 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது...
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லிஸ்ட் செக் பண்ணிக்கோங்க?- உலகளவில் பயன்படுத்தப்படும் டாப் 10 பாஸ்வேர்ட்கள்: எல்லாமே இப்படிதான்!
2021 ஆம் ஆண்டின் மிகவும் பொதுவான கடவுச் சொற்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பொதுவான டாப் 10 பாஸ்வேர்ட்கள் குறித்து பார்க்கலாம். அனைவராலும் எளிதாக கண்டுபிடிக்கக்கூடிய வகையிலும், மிக எளிதாக ஹேக் செய்யக் கூடிய வகையிலும் இருக்கும் பாஸ்வேர்ட்களான 123456, password, qwerty ஆகியவைகளை பயன்படுத்துபவர்களாக நீங்கள் இருந்தால் இந்த கடவுச்சொல்லை பயன்படுத்தும் நபர் நீங்கள் மட்டுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் அதிக நபர்கள் பயன்படுத்தும் டாப் 10 கடவுச்சொல்கள் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

உலகளவில் பொதுவாக பயன்படுத்தப்படும் டாப் 10 கடவுச்சொற்கள்
உலகளவில் பொதுவாக பயன்படுத்தப்படும் டாப் 10 கடவுச்சொற்கள் அனைத்தும் பொதுவான வார்த்தைகளாகவே இருக்கின்றன. முதலிடத்தில் இருக்கும் பாஸ்வேர்ட் ஆனது 123456 ஆகும் இதை 103,170,552 பேர் பயன்படுத்துகின்றனர். இரண்டாவது இடத்தில் இருப்பது 123456789 ஆகும் இதை 46,027,530 பேர் பயன்படுத்துகின்றனர். மூன்றாவது இடத்தில் 12345 இருக்கிறது இதை 32,955,431 பேர் பயன்படுத்துகின்றனர்.

எளிதாக பயன்படுத்தும் கடவுச்சொற்கள்
அதேபோல் Qwerty என்ற சொல் 22,317,280 பேர் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து password என்ற சொல்லை 20,958,297 பேரும், 12345678 என்ற எண்ணை 14,745,771 பேரும், 111111 என்ற எண்ணை 13354149 பேரும் பயன்படுத்துகின்றனர். அதேபோல் எட்டாவது இடத்தில் 123123 என்ற எண் இருக்கிறது இதை 10244398 பேர் பயன்படுத்துகின்றனர். ஒன்பதாவது இடத்தில் 1234567890 என்ற எண் இருக்கிறது இதை 9646621 பேர் பயன்படுத்துகின்றனர். பத்தாவது இடத்தில் இருக்கும் சொல் 1234567 ஆகும் இதை 9396813 பேர் பயன்படுத்துகின்றனர்.

மில்லியன் கணக்கான கடவுச் சொற்கள்
சுயாதீன ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பாஸ்வேர்ட் மேலாண்மை சேவையான NordPass ஆனது மில்லியன் கணக்கான கடவுச் சொற்களை ஆராய்ந்து 2021-ல் உலகம் முழுவதும் பொதுவாக பயன்படுத்தப்படும் 200 கடவுச்சொற்களை அறிவித்துள்ளது. 50 நாடுகளின் தரவை பகுப்பாய்வு செய்து முடிவுகள் வழங்கப்பட்டுள்ளது.

பிரபலமான விளையாட்டுகளில் இருந்து வார்த்தைகள்
பாஸ்வேர்ட்கள் தேர்வு செய்யும் போது பெரும்பாலும் கலாச்சார குறிப்புகளுடன் இணைக்கப்பட்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு பிரபலமான விளையாட்டுகளில் இருந்து வார்த்தைகளை பயனர்கள் பாஸ்வேர்களாக தேர்ந்தெடுக்கின்றனர். உதாரணமாக கால்பந்து விளையாட்டு பெயர்களை பலரும் தேர்ந்தெடுக்கின்றனர். இங்கிலாந்தை பொறுத்தவரை லிவர்பூல் என்ற வார்த்தையை 224160 பேர் பயன்படுத்துகின்றனர். இது மூன்றாவது கடவுச்சொல்லாக இருக்கிறது. அதேபோல் சில கால்பந்து கிளப் "கொலோகோலோ" என்ற பெயரை சிலியில் 15748 பேர் பயன்படுத்துகின்றனர். இது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

மதம் தொடர்பான கடவுச்சொற்கள்
அதேபோல் சில நாடுகளில் மதம் தொடர்பான கடவுச்சொற்கள் பிரபலமாக இருக்கிறது. உதாரணமாக நைஜீரியாவில் 19-வது பொதுவான கடவுச் சொல்லாக இருப்பது "கிறிஸ்து" என்ற வார்த்தை ஆகும். அதேபோல் "பிஸ்மில்லா" என்ற அல்லாஹ்வின் பெயரில் உல்ள அரபு சொற்றொடர் சவூதி அரேபியாவில் 1599 மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது 30-வது மிகவும் பொதுவான சொல்லாகும்.

ஆண், பெண் போன்ற பாலின வேறுபாடுகள்
அதேபோல் ஆண், பெண் போன்ற பாலின வேறுபாடுகள் அடிப்படையிலும் பாஸ்வேர்கள் பிரிக்கப்படுகிறது. அதாவது பெண்கள் Sunshine, iLoveYou போன்ற அன்பு வார்த்தளைகளை பயன்படுத்துகின்றனர். அதேபோல் ஆண்கள் பெரும்பாலும் விளையாட்டு தொடர்பான கடவுச்சொற்களையே பயன்படுத்துகின்றனர். அதேபோல் "onedirection", "Justinbieber" ஆகிய சொற்களும் பெண்கள் மத்தியில் பிரபலமான வார்த்தைகளாக இருக்கின்றன. அதேபோல் Metallica, Slipknot என்ற சொல் ஆண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

பல பயன்பாடுகளுக்கும் பிரதானமாக இருக்கும் பாஸ்வேர்ட்கள்
கணினிகள் மற்றும் நெட்வொர்க் சார்ந்த பல பயன்பாடுகளுக்கும் பிரதானமாக இருப்பது பாஸ்வேர்கள் தான். இதில் பலரும் பலவீனமான பாஸ்வேர்கள் தேர்வு செய்வது அவைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக மாற்றும் வகையிலேயே இருக்கிறது. இவை அனைத்தும் ஆன்லைன் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்க நேரிடும் வகையிலேயே இருக்கிறது. இதுபோன்ற பலவீனமான கடவுச்சொற்களை யூகிப்பது என்பது எளிதானதாகும். பாஸ்வேர்களை கவனமாக மேற்கொள்வதும் சற்று கடினமான முறையில் பதிவிடுவதும் அவசியமாகும்.

கடவுச்சொற்களில் கவனம் செலுத்த வேண்டும்
வாழ்க்கையை எளிமையாக்க, கடவுச்சொற்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள நாம் சில நேரங்களில் பாஸ்வோர்டு தொடர்பான தகவல்களை ஏதேனும் ஒரு இடத்தில் சேமித்து வைக்கிறோம். மறதியிலிருந்து இது ஒரு புறம் நமக்கு உதவினாலும், மற்றொரு புறம் இது நடைமுறைக்கு நல்லது அல்ல என்றும், இது பாதுகாப்பானது இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் ஒரே கடவுச்சொல்லைப் பல தளங்களில் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கணக்குகளில் ஒன்றை ஹேக் செய்ய யாராவது நிர்வகித்தால், அவர்கள் அதே கடவுச்சொல்லை மற்ற கணக்குகளிலும் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பெயர்களைக் கடவுச்சொற்களாகப் பயன்படுத்த வேண்டாம்
பெயர்களைக் கடவுச்சொற்களாகப் பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக உங்கள் பெற்றோர், உடன்பிறப்புகள், கூட்டாளர் அல்லது செல்லப்பிராணிகளின் பெயர்கள். உங்கள் காரின் பிராண்ட் பெயரையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்களை சுற்றி இருப்பவர்கள் இவைகளை எளிதாக அடையாளம் கண்டு பயன்படுத்த வேண்டும். குறிப்பாக பலரும் செய்யும் தவறுகளில் ஒன்று அவர்களின் 10 இலக்கு மொபைல் எண்ணையே பாஸ்வேர்ட் ஆக பயன்படுத்துவது அதை ஒருபோதும் செய்ய வேண்டும்.

எதிலும் சேமித்து வைக்க வேண்டாம்
அதேபோல் பிறந்த தினம், ஆண்டு போன்றவைகளையும் பாஸ்வேர்ட் ஆக பயன்படுத்த வேண்டாம். ஒரே கடவுச்சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு கடவுச்சொற்களை அனைத்துக்கும் பயன்படுத்த வேண்டாம், அதை குறிப்பாக எதிலும் சேமித்து வைக்க வேண்டாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999