Home
News

இந்திய மார்க்கெட்ல இவன் தான் கிங்கு.. Samsung இல்ல.. Xiaomi இல்ல.. டாப் 10 Mobile விற்பனை லிஸ்ட்ல யாரு டாப்?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த 2024 ஆம் ஆண்டு எந்த மொபைல் நிறுவனம் அதிக போன்களை விற்பனை செய்து (top selling smartphone brands in India), ரேங்கிங் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்ற டாப் 10 பிராண்டட் மொபைல் ரேங்கிங் (Top 10 branded mobile ranking) தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது சாம்சங் நிறுவனமும் இல்லை, சியோமி நிறுவனமும் இல்லை, அவ்வளவு ஏன் ஆப்பிள் நிறுவனம் கூட இல்லை. சத்தமே இல்லாமல் சைலெண்டாக வேலையை பார்த்த பிராண்ட் எது என்று பார்க்கலாமா?

இந்திய ஸ்மார்ட்போன் (smartphone) சந்தை மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சந்தையாக திகழ்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் எத்தனை புதிய ஸ்மார்ட்போன் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று உங்களால் கெஸ் செய்ய முடியுமா? சிலர் 2 கோடி புது போன்கள், இன்னும் சிலர் 7 கோடி புது போன்கள் என்று ஒரு யுக கணக்கை மனதில் மார்க் செய்திருப்பீர்கள்.

இந்திய மார்க்கெட்ல இவன் தான் கிங்கு.. Samsung இல்ல.. Xiaomi இல்ல..

இந்திய மார்க்கெட்ல இவன் தான் கிங்கு.. Samsung இல்ல.. Xiaomi இல்ல.. பின்ன யாரு?

ஆனால், நீங்கள் மார்க் செய்த இந்த எண்ணிக்கையை விட அதிகமாக கடந்த வருடம் புதிய ஸ்மார்ட்போன் சாதனங்கள் இந்திய சந்தையில் விற்பனையாகியுள்ளது என்று சர்வதேச டேட்டா நிறுவனமான இன்டர்நேஷனல் டேட்டா கார்பிரேஷன் (International data corporation) நிறுவனம் தெரிவித்துள்ளது. சரி, கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்தியர்கள் எத்தனை கோடி புது ஸ்மார்ட்போன்களை வாங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?

இன்டர்நேஷனல் டேட்டா கார்பிரேஷன் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் மட்டும் கடந்த 2024 ஆம் வருடம் மொத்தம் 15 கோடிக்கும் அதிகமான புதிய ஸ்மார்ட்போன் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் காண்பிக்கிறது. இது 2023 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் எண்ணிக்கையை விட 4% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2024-ல் மொத்தம் எத்தனை போன்கள் விற்பனை செய்யப்பட்டது?

15 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றால், எந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் போன்களை மக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கிருக்கிறார்கள் என்ற விபரம் நமக்கு தெரிய வேண்டும் தானே. இந்தியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த டாப் 10 பிராண்டுகளின் (top 10 mobile brands) விபரங்களும் இத்துடன் வெளியாகியிருக்கிறது. எந்த நிறுவனம் எந்த இடத்தில இருக்கிறதென்ற ரேங்கிங் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் எந்த பிராண்டு டாப் பிளேஸ்? டாப் 10 ரேங்கிங் பட்டியல் இதோ:

10. ஐகியூஓஓ (iQOO)
9. ஒன்பிளஸ் (OnePlus)
8. போக்கோ (Poco)
7. மோட்டோரோலா (Motorola)
6. ஆப்பிள் (Apple)
5. ரியல்மி (realme)
4. சியோமி (Xiaomi)
3. ஒப்போ (OPPO)
2. சாம்சங் (Samsung)
1. விவோ (Vivo)

விவோ (Vivo) நிறுவனம் தான் கடந்த 2024 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. விவோ நிறுவனம் மட்டும் சுமார் 16.6% போன்களை கடந்த வருடம் விற்பனை செய்துள்ளது. இதனை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் 13.2% பங்கையும், ஒப்போ நிறுவனம் 12.04%, சியோமி 12.0%, ரியல்மீ 11.0%, ஆப்பிள் 8.2%, மோட்டோரோலா 6.0%, போகோ 5.6%, ஒன்பிளஸ் 3.9%, ஐகியூ 3.3% பங்குகளை விற்பனை செய்துள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 10 Mobile Brands Ranking With Highest Selling Unit In Indian Smartphone Market in 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X