Top 10 ஃப்ரீ வெப்சைட் 2022: லாகின் தேவையில்லை காசு தேவையில்லை.! திரைப்படம், வெப் சீரிஸ் பார்க்கலாம்.!

|

Top 10 Free Movie Streaming Sites 2022: இந்திய மக்கள் இப்போது OTT சேவைகளை அதிகமாகப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். ஒவ்வொரு திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் வெவ்வேறு OTT தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. இதனால், பல OTT சேவைக்கான சந்தாவை நாம் வாங்க வேண்டியதுள்ளது.

இது உங்கள் பாக்கெட் பணத்தை அதிகமாகச் செலவு செய்யச் செய்கிறது. இப்படி செலவே இல்லாமல், இலவசமாக நீங்கள் விரும்பிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை பார்க்க வேண்டுமா? அப்போ இந்த 10 டாப் சைட்களை தெரிந்துகொள்ளுங்கள்.

லாகின் மற்றும் சைன்-அப் செய்யாமல் இலவசமாக படம் பார்க்கலாமா? மொத்தம் 10 சைட் இருக்கிறதா?

லாகின் மற்றும் சைன்-அப் செய்யாமல் இலவசமாக படம் பார்க்கலாமா? மொத்தம் 10 சைட் இருக்கிறதா?

நாங்கள் இங்கு கூறப்போகும் இந்த 10 வெப்சைட்கள் உங்களுக்குத் தெரிந்தால், இனி செலவே இல்லாமல் இலவசமாகத் திரைப்படங்கள் (Free movies streaming) மற்றும் வெப் சீரிஸ்களை (Free web series online streaming ) ஆன்லைனில் நீங்கள் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.

இந்த 2022 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டு, இலவசமாக ஆன்லைனில் மூவி ஸ்ட்ரீமிங் செய்யும் டாப் 10 ப்ரீ மூவி சைட்களை (Top 10 free movie streaming site) தான் இந்த பதிவின் மூலம் பார்க்கப்போகிறோம். இதன் முக்கியமான சிறப்பு என்னவென்றால், நீங்கள் லாகின் (login) அல்லது சைன்-அப் (sign up) செய்ய வேண்டியதில்லை. சரி வாருங்கள் லிஸ்டை பார்க்கலாம்.

1. ரோகு (Roku)

1. ரோகு (Roku)

யூட்யூபைப் போலவே இந்த ரோகு தளத்திற்கும் லாக் இன் (Log in) செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ரோகு செயலியை (Roku Apps) உங்கள் டிவைசில் பதிவிறக்கம் செய்து விட்டால் போது.

நெட்ஃப்லிக்ஸ்ஸில் இருக்கும் டாப் ரேட்டட் திரைப்படங்கள் (Top rated movies) முதல் அனைத்தையும் நல்ல தரமான குவாலிட்டியில் இந்தச் செயலியில் பார்க்க முடியும். இந்தத் தளத்தில் இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது அடிக்கடி வரும் விளம்பரங்கள் (Ad) மட்டும் தான்.

இது தெரியாம WhatsApp-ல் இனி சாட் செஞ்சா சிரிப்பாங்க.! கெத்தா உங்க அவதார்-அ உடனே உருவாக்குங்க.!இது தெரியாம WhatsApp-ல் இனி சாட் செஞ்சா சிரிப்பாங்க.! கெத்தா உங்க அவதார்-அ உடனே உருவாக்குங்க.!

2. வுடு (Vudu)

2. வுடு (Vudu)

பல வகையான திரைப்படங்கள் இந்தத் தளத்தில் கிடைக்கும். இதில் திரையிடப்படும் வீடியோகளின் தரமும், ரெசொல்யூசனும் (Resolution) சந்தா வைத்திருப்போர் மற்றும் இலவசமாகப் பார்ப்போர் (Free users) என அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தத் தளத்தில் இருக்கும் ஒரு குறை என்னவென்றால், அடிக்கடி சந்தா வாங்குமாறு ஒரு நோட்டிபிகேஷன் குறுக்கீடு செய்தவாறு இருக்கும். அதை மட்டும் நீங்கள் பொறுமையாகத் தவிர்க்க வேண்டும்.

3. க்ரன்ச்சி ரோல் (Crunchy roll)

3. க்ரன்ச்சி ரோல் (Crunchy roll)

க்ரன்ச்சி ரோல் என்பது அனிமீ (Anime) சார்ந்த திரைப்படங்கள், ஸீரிஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரு தளமாகும்.

இந்தியாவில் இப்போது அனிமீ பியர்கள் பெருகிவிட்டார்கள் - நெட்பிலிக்ஸ் (Netflix) போன்ற தளங்களில் கூட, இப்போது புதிதாக அனிமீ பிரிவு (Anime Category) சேர்க்கப்பட்டுள்ளது.

சந்தா வாங்காமல் பார்க்கும் பட்சத்தில் அடிக்கடி விளம்பரங்கள் வந்து உங்கள் பொறுமையைச் சோதிக்கும். மற்றபடி முழு உள்ளடக்கமும் இலவசம் தான்.!

தடை செய்யப்பட்ட படத்தை பார்த்த 2 பள்ளி மாணவருக்கு தூக்கு.! என்ன படம்? எந்த நாட்டின் கோரமான சட்டம் இது?தடை செய்யப்பட்ட படத்தை பார்த்த 2 பள்ளி மாணவருக்கு தூக்கு.! என்ன படம்? எந்த நாட்டின் கோரமான சட்டம் இது?

4. கிராக்கில் (Crackle)

4. கிராக்கில் (Crackle)

கிராக்கில் இல் திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை மட்டுமின்றித் திரைப்படங்கள் தொடர்பான செய்திகளையும் (Movie News) வெளியிடும் ஒரு தளமாகும்.

எதிர்காலத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் தொடர்பான அப்டேட்களும் (Upcoming Movie Updates) இதில் கிடைக்கும் என்பதே இதற்காகப் பொருள்.

இது சோனி பிக்சர்ஸின் இலவச தளம் (Free Sony Picture Site) என்பது கூடுதல் சிறப்பு. சோனியின் கீழ் வரும் படங்கள் அனைத்தும் இலவசமாக பார்க்கலாம்.

5. கான்டிவி அனிமீ (ConTV Anime)

5. கான்டிவி அனிமீ (ConTV Anime)

முன்னர் வ்யூஸ்டர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்தக் கான்டிவி அனிமீ திரைப்படங்கள் மற்றும் வெப்ஸீரிஸிற்குப் (webseries) பிரத்தியேகமான ஒரு தளமாகும். மேலும், இதில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களையும் பார்க்க முடியும்.

ஆக்ஸன் (action), Sci-Fi, காமெடி (comedy), ட்ராமா (drama) என அனைத்து வகையான திரைப்படங்களும் இந்தத் தளத்தில் பார்க்கலாம்.

திறந்த விண்வெளியில் 256 முறை மரண விளிம்பில் ஸ்பேஸ்வாக் செய்த NASA வீரர்கள்.! ISS இல் கோளாறா? என்னாச்சு?திறந்த விண்வெளியில் 256 முறை மரண விளிம்பில் ஸ்பேஸ்வாக் செய்த NASA வீரர்கள்.! ISS இல் கோளாறா? என்னாச்சு?

6. டுபி டிவி (Tubi TV)

6. டுபி டிவி (Tubi TV)

உங்களுக்கு பிடித்தமான அனைத்து வகையான திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் எல்லாவற்றிற்குமான ஒரு சிறந்த தளமாக டுபி டிவி திகழ்கிறது.

இந்த டுபி டிவி இணையதளம், செயலி என்று அனைத்து டிவைஸ்களிலும் சிங்க் (Sync) செய்து பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதிலும் சில விளம்பர குறுக்கீடுகள் இருக்கிறது. ஆனால், திரைப்படங்கள் பார்ப்பதற்கு தரமான தளமாகத் (Best Online Streaming Movie Site) திகழ்கிறது.

7. ப்ளூட்டோ டிவி (Pluto TV)

7. ப்ளூட்டோ டிவி (Pluto TV)

இந்த ப்ளூட்டோ டிவி மற்ற தளங்களைப் போல் திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை வெளியிடாமல், டிவியில் இருக்கும் சேனல்களில் (TV channels) வரும் நிகழ்ச்சிகளை அப்படியே லைவில் வெளியிடும் ஒரு இணையதளமாகும்.

இது 250-க்கும் மேற்பட்ட சேனல்களில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சி எபிஸோட்களை (Free Tv show episodes) அப்படியே உங்களுக்கு லைவில் காண்பிக்கிறது.

48,500 ஆண்டு பழமையான ஸோம்பி வைரஸ் கண்டுபிடிப்பு.! பதட்டத்தில் மக்கள்.! இது ஆபத்தானதா?48,500 ஆண்டு பழமையான ஸோம்பி வைரஸ் கண்டுபிடிப்பு.! பதட்டத்தில் மக்கள்.! இது ஆபத்தானதா?

8. ஷேர் டிவி (Share TV)

8. ஷேர் டிவி (Share TV)

ப்ளூட்டோ டிவியைப் போலவே ஷேர் டிவியும் (Share TV) தளமும் டிவி சேனல்களில் வரும் நிகழ்ச்சிகளைத் திரையிடும் ஒரு தளமாகும்.

மேலும், இந்தத் தளத்தில் இருக்கும் தரமான ஃபீச்சர் (feature) என்னவென்றால், ஒருவேலை ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் ஏதாவது ஒரு எபிசோட் வெளியிட முடியாத பட்சத்தில் அதை எங்கு இலவசமாகப் பார்க்கலாம் என்பதற்கான லிங்க் (Free tv episode links) அந்தத் தளத்தில் கொடுக்கப்படும்.

இதனால், உங்களுக்கு தடையின்றி எபிஸோட்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

9. சுமோ (XUMO)

9. சுமோ (XUMO)

இந்தத் தளத்தில் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க ஒருவர் சைன் அப் (Sign up) செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சைன் அப் செய்யாமலே சுமார் 190 சேனல்களில் வரும் நிகழ்ச்சிகளை இந்தத் தளத்தில் பார்க்க முடியும்.

மற்ற தளங்களைவிட இந்தத் தளத்தில் இருக்கும் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இதில் விளம்பரங்கள் வந்து உங்களைத் தொல்லை (No Ad Movie Streaming Site) செய்யாது.!

ஏலியன் உயிர்களுக்கும் பூமியின் ப்ரோக்கோலிக்கும் தொடர்பா? பிரபஞ்சத்தையே உலுக்கிய உண்மை.!ஏலியன் உயிர்களுக்கும் பூமியின் ப்ரோக்கோலிக்கும் தொடர்பா? பிரபஞ்சத்தையே உலுக்கிய உண்மை.!

10. யூட்யூப் (Youtube)

10. யூட்யூப் (Youtube)

இறுதி இடத்தில் இருப்பது வேற யாரு, நம்ம யூட்யூப் தான்.

யூட்யூப் மூலம் தனிநபர்கள், தனியார் சேனல்கள் வெளியிடும் வீடியோக்களைத் தாண்டி ஏராளமான திரைப்படங்களையும் பார்க்க முடியும்.

இது உலகளாவிய தளம் என்பதால் அனைத்து மொழிகளின் திரைப்படங்கள், வெப்சீரிஸ் ஆகியவையும் இங்குக் கிடைக்கும்.

யூட்யூபில் பணம் செலுத்தாமல் பார்ப்பதில் இருக்கும் ஒரே பிரச்சனை அதில் அடிக்கடி வரும் விளம்பரங்கள் தான்.

இந்த 10 சைட்களை மிஸ் செய்யாதீர்கள்.!

இந்த 10 சைட்களை மிஸ் செய்யாதீர்கள்.!

இந்த வெப்சைட்களை உங்கள் வெப் பிரௌசரில் ஆட் ஆன் அல்லது புக் மார்க் செய்து கொண்டால், உங்களுக்கு தேவையான நேரங்களில் நீங்கள் விரும்பும் படங்களை தாராளமாக இலவசமாகக் கண்டு களிக்கலாம். இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதில் உள்ள சில வெப்சைட்கள் உங்கள் போன் அல்லது லேப்டாப் வெப் பிரௌசர் இல் இயங்கவில்லை என்றால், VPN பயன்படுத்தி மீண்டும் இணைக்க ட்ரை செய்து பாருங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
Top 10 Free Movie Streaming Sites 2022 With No Sign Up Requirements

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X