சாம்சங் கேலக்ஸி எஸ்7, இது தானா.? நம்பலாமா..??

By Meganathan
|

சாம்சங் கேலக்ஸி எஸ்6 மற்றும் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் கருவிகள் புதிய வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களை கொண்டிருந்ததால் தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனம் சந்தையில் தனது இடத்தை தக்க வைத்து கொண்டது.

சாம்சங், ஃபேஸ்புக் திடீர் மோதல்.!?

சாம்சங் கேலக்ஸி நோட் 5 கருவியை தொடர்ந்து அந்நிறுவனத்தின் புதிய கருவியான கேலக்ஸி எஸ்7 குறித்து பல்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்த கருவி அதிகாரப்பூர்வமாக வெளியாக இன்னும் சில மாதங்கள் இருந்தாலும் சாம்சங் நிறுவனத்தின் புதிய கருவி சார்ந்த புரளிகள் துவங்கி விட்டன என்று தான் கூற வேண்டும்.

வாட்ஸ்ஆப் ஐஎஸ் குழுவில் இணைக்கப்பெற்ற கேரள வாலிபர்..!!

வழக்கம் மாறாமல் சாம்சங் நிறுவனம் இம்முறையும் பார்சிலோனாவில் நடைபெறும் எம்டபுள்யூசி (MWC) விழாவில் தனது புதிய கருவியை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கு சாம்சங் கேலக்ஸி எஸ்7 கருவியில் இந்த சிறப்பம்சங்கள் தான் இருக்கும் என எங்கோ ஆரம்பமான புரளி இங்கும் தொடர்கின்றது ஸ்லைடர்களில்...

வடிவமைப்பு

வடிவமைப்பு

முன்பு வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்6 அதிகப்படியான வடிவமைப்பு மாற்றங்களை கொண்டிருந்ததால் இம்முறை அதிக மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகின்றது. எனினும் கேலக்ஸி எஸ்7 கருவி சற்று மெலிதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி எஸ்7 கருவியானது 5.2 இன்ச் மற்றும் 5.8 இன்ச் என இரு வித டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் 4கே ரெசல்யூஷன் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

கேமரா

கேமரா

எச்டிசி எம்8 போன்றே சாம்சங் நிறுவனம் இம்முறை டூயல்-கேமரா கொண்டிருக்கலாம், பெரும்பாலும் அவை 16 எம்பி ப்ரைமரி மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கும் என்றே தெரிகின்றது.

பேட்டரி

பேட்டரி

பேட்டரி குறித்து எவ்வித தகவல்களும் இல்லை என்றாலும் கேலக்ஸி எஸ்6 போன்றே கழற்ற முடியாத பேட்டரி கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிராசஸர்

பிராசஸர்

மங்கூஸ் என்ற பெயரில் சாம்சங் நிறுவனம் புதிய எக்சைனோஸ் சிபியு ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகின்றது. பெரும்பாலும் அந்நிறுவனம் புதிய பிராசஸரை கேலக்ஸி எஸ்7 கருவியில் வழங்கலாம் என்றே தெரிகின்றது.

இயங்குதளம்

இயங்குதளம்

சாம்சங் கேலக்ஸி எஸ்7 கருவியில் பெரும்பாலும் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ மற்றும் டச்விஸ் யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இரு வகை மெமரி கொண்ட மாடலும் மெமரியை நீட்டிக்க உதவும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஒன்றை வழங்கும் என்றும் கூறப்படுகின்றது.

வெளியீடு

வெளியீடு

பொதுவாக பார்சிலோனாவில் நடைபெறும் விழாவில் தனது புதிய கருவிகளை சாம்சங் அறிமுகம் செய்வது வழக்கமாகும், ஆனால் அந்நிறுவனம் கேலக்ஸி நோட் 5 போன்றே கேலக்ஸி எஸ்7 கருவியையும் முன்னதாகவோ இல்லையெனில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை

விலை

கேலக்ஸி எஸ்7 விலை குறித்து தெளிவாக எவ்வித தகவல்களும் இல்லாத நிலையிலும் ஏறதாழ ரூ.60,000 முதல் இந்த கருவியின் விலை இருக்கலாம் என கூறப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Top 10 Features To Expect From Samsung Galaxy S7. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X