இந்த டாப் 10 மொபைல் பிராண்ட் தான் இந்தியாவில் ரொம்ப ஃபேமஸ்.. உங்க போன் எந்த பிராண்ட்?
இந்தியாவில் எந்த மொபைல் அல்லது ஸ்மார்ட்போன் பிராண்ட் மிகவும் பிரபலமாக உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா? அதவாது, இந்தியாவில் அதிக பேமஸ் ஆனா ஸ்மார்ட்போன் பிராண்ட் எது என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்கள் கையில் இருக்கும் போன் எந்த ரேங்கிங்கை பெற்றுள்ளதாக என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா? அப்படியானால் இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும். இந்தியாவில் டாப் பிரபலமாக இருக்கும் 10 முன்னணி பிராண்டிங் ஸ்மார்ட்போன் பட்டியலில், 10வது இடத்தில் இருக்கும் நிறுவனமாக இன்பினிக்ஸ் (Infinix) ஸ்மார்ட்போன் பிராண்ட் 2.6% மதிப்பை பெற்று முன்னணி பிராண்டுகளுடன் நெருக்கமான இடத்தை பிடித்துள்ளது.

அடுத்தபடியாக 9வது இடத்தில், மோட்டோரோலா (Motorola) நிறுவனம் 3.4% மதிப்பை பெற்று இந்தியாவில் மிகவும் பிரபலமான பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அடுத்தபடியாக, இந்த பட்டியலில் போக்கோ (POCO) பிராண்ட் 5.0% மதிப்புடன் 8வது இடத்தை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டிங் பட்டியலில் 7வது இடத்தில் ஒப்போ (Oppo) நிறுவனம் 5.1% மதிப்பை பெற்றுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக iQOO பிராண்ட் 5.7% மதிப்பை பெற்று 6வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட் பட்டியலில் 5வது இடத்தில் விவோ (Vivo) நிறுவனம் 10.8% மதிப்பை பெற்றுள்ளது. 4வது இடத்தில் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் 11.4% மதிப்பை பெற்று சியோமி (Xiaomi) பிராண்ட் தனக்கென்ற இடத்தை பிடித்துள்ளது.
அடுத்தபடியாக, 3வது மிகவும் பிரபலமான நிறுவனமாக ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் 13.5% மதிப்பை இந்தியாவில் பெற்று முன்னிலையில் உள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் சாம்சங் (Samsung) நிறுவனம் 15.4% மதிப்பை பெற்று முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆக 17.2% மதிப்பை பெற்று ரியல்மி (Realme) நிறுவனம் 1வது இடத்தில் தனக்கென்ற தனி இடத்தை பிடித்துள்ளது.
ரியல்மி நிறுவனம் குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் அம்சத்தை வழங்கும் காரணத்தினால் ரியல்மி நிறுவனம் மிகவும் பிரபலமான நிறுவனமாகவும், பிராண்டாகவும் இந்திய மக்கள் இடையே திகழ்கிறது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான 10 ஸ்மார்ட்போன் பிராண்ட் பட்டியல் (Top 10 Smartphone Brands In India 2023):
10. இன்பினிக்ஸ் (Infinix)
09. மோட்டோரோலா (Motorola)
08. போக்கோ (POCO)
07. ஒப்போ (Oppo)
06. iQOO
05. விவோ (Vivo)
04. சியோமி (Xiaomi)
03. ஒன்பிளஸ் (OnePlus)
02. சாம்சங் (Samsung)
01. ரியல்மி (Realme)
முதல் இடத்தை பிடித்த ரியல்மி நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலாக
ரியல்மி 10 ப்ரோ பிளஸ் (Realme 10 Pro+)
ரியல்மி நர்ஸோ 30 (Realme Narzo 30)
ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro)
ரியல்மி 11 ப்ரோ பிளஸ் (Realme 11 Pro+)
ரியல்மி சி33 (Realme C33) இருக்கிறது.
இரண்டாவது இடத்தை பிடித்த சாம்சங் (Samsung) நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலாக
சாம்சங் கேலக்சி எஸ்23 (Samsung Galaxy S23 series)
சாம்சங் கேலக்சி ஏ14 (Samsung Galaxy A14)
சாம்சங் கேலக்சி எம்34 (Samsung Galaxy M34)
சாம்சங் கேலக்சி எப்54 (Samsung Galaxy F54)
மூன்றாவது இடத்தை பிடித்த ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலாக
ஒன்பிளஸ் 11 (OnePlus 11)
ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3)
ஒன்பிளஸ் சிஇ 3 லைட் (OnePlus CE 3 Lite)
ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) இருக்கிறது.


Click it and Unblock the Notifications








