நமக்கு நாமே எமன்..!!

By Meganathan
|

வரலாற்றை சற்றே உற்று நோக்கினால் போர்களங்களில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை புரிந்து கொள்ள முடியும். அன்று வீரர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் நின்று சண்டையிட்டு கொண்டனர். ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் வேறாக இருக்கின்றது.

உலகின் ஓர் பகுதியில் இருந்து மூளையில் இருக்கும் சிறிய இலக்குகளையும் மிகவும் துல்லியமாக தாக்க முடியும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நவீன தொழில்நுட்பங்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகளவில் பல்வேறு நாடுகளும் அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களை தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் உலகின் மிகவும் அதிநவீன தலைசிறந்த ஏவுகணைகளின் பட்டியலை தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றீர்கள்..

பிஜிஎம்-17 தோர்

பிஜிஎம்-17 தோர்

கண்டம் விட்டு கண்டம் பாயும் உளகின் முதல் ஏவுகணை என்ற பெருமை பிஜிஎம்-17 தோர் (PGM-17 Thor) கொண்டிருக்கின்றது.

வெப்பம்

வெப்பம்

இந்த ஏவுகணையானது சுமார் 2400 கிமீட்டர் வரை வெப்ப அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

வி-2 ராக்கெட்

வி-2 ராக்கெட்

இன்றை ஏவுகணை மற்றும் ராக்கெட் தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக வி-2 ராக்கெட் திகழ்கின்றது. மனிதன் தயாரித்து விண்வெளியில் நுழைந்த ஏவுகணை என்ற பொருமையும் கொண்டிருக்கின்றது வி-2 ராக்கெட்.

வி-2 தொழில்நுட்பம்

வி-2 தொழில்நுட்பம்

வி-2 ராக்கெட் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டால் பாதியில் நிறுத்த முடியாது, செங்குத்தாக வானில் சீறி பாய்ந்து இலக்கினை மணிக்கு சுமார் 4,000 மீட்டர் வேகத்தில் தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

டோமஹாக்

டோமஹாக்

அமெரிக்க கடற்படை பயன்படுத்தும் ஒலியியல் சார்ந்த ஏவுகணை தான் டோமஹாக். இந்த ஏவுகணையினை கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் ஏவ முடியும்.

இலக்கு

இலக்கு

இதில் வழங்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பமானது பல் விதங்களில் பயன்படுத்தவும் இலக்குகளை துல்லியமாகவும் தாக்க வழி செய்யும்.

பிரம்மோஸ்

பிரம்மோஸ்

இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையினை நீர்மூழ்கி கப்பல், போர் கப்பல், விமானம் மற்றும் தரையில் இருந்தும் தாக்க முடியும்.

வேகம்

வேகம்

உலகின் அதிவேக ஏவுகணையான பிரம்மோஸ் 200 கிலோ எடையை சுமந்து கொண்டு 290 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்குகளையும் துல்லியமாக தாக்க முடியும்.

ஜெரிகோ lll

ஜெரிகோ lll

இஸ்ரேல் நாட்டின் ஆயுதங்கள் சார்ந்த தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும் நிலையில் இந்த ஏவுகணை குறித்த சில தகவல்கள் மட்டும் கசிந்துள்ளன.

இலக்கு

இலக்கு

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக ஜெரிகோ lll இருக்கும் என்பதோடு சுமார் 1000 கிலோ எடையை அதிகபட்சம் 2000 கிமீட்டர் முதல் 11,500 கிமீட்டர் வரை பயணித்து தாக்கும் என்றும் கூறப்படுகின்றது.

யுஜிஎம்-133 ட்ரைடென்ட் ll

யுஜிஎம்-133 ட்ரைடென்ட் ll

மார்டின் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ் தயாரித்த இந்த ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து தாக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதம்

அணு ஆயுதம்

இந்த ஏவுகணை மூலம் பல்வேறு அணு ஆயுதங்களை செலுத்த முடியும் என்பதோடு இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்51

எம்51

நீர்மூழ்கி கப்பல் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்ட எம்51 ப்ரென்ச் கடற்படையின் தயாரிப்பாகும்.

அணு ஆயுதம்

அணு ஆயுதம்

வெப்பஅணு ஆயுதங்களை சுமந்து கொண்டு இலக்குகளை துல்லியமாக தாக்கும் படி எம்51 வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஎஃப்-41

டிஎஃப்-41

இஸ்ரேல் போன்றே சீனாவின் ஆயதங்கள் சார்ந்த ரகசியங்களும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. டிஎஃஎப்-41 ஏவுகணை கண்டங்களுக்கு இடையே தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

இலக்கு

இலக்கு

டிஎஃப்-41 ஏவுகணை அதிகபட்சம் சுமார் 14,000 கிமீட்டர் தொலைவில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும். மேலும் உலகின் எந்த பகுதியையும் இதை கொண்டு தாக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்-36

ஆர்-36

பணி போர் நடைபெற்ற காலத்தில் தயாரிக்கப்பட்ட ஆர்-36 ஏவுகணை அதிக எடையை சுமக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

ஆர்-36

ஆர்-36

10 வித வார் ஹெட்களை கொண்டிருக்கும் இன்த ஏவுகணை உலகின் அதி பயங்கர ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.

எல்ஜிஎம்-30 மின்யூட்மேன்

எல்ஜிஎம்-30 மின்யூட்மேன்

13,000 கிலோமீட்டர் வரை இலக்குகளை தாக்கும் திறந் கொண்ட எல்ஜிஎம்-30 ஏவுகணை அமெரிக்க தயாரிப்பு என்பதோடு தற்சமயம் அமெரிக்கா மட்டுமே வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுதம்

அணு ஆயுதம்

ஆணு ஆயுதம், ட்ரைடென்ட் மிசைல் சிஸ்டம்ஸ் மற்றும் ஸ்டெல்த் பாம்பர் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Top 10 Deadliest Missiles in the world. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X