அட்டகாச தள்ளுபடியுடன் டாப் 10 கேமரா ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் பிக் பில்லியன், அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை

|

ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021 மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021 விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற கேஜெட்கள் தள்ளுபடி சலுகைகளோடு இ-காமர்ஸ் தளத்தில் கிடைக்கின்றன. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனையில் கேமரா போன்கள் உட்பட பல ஸ்மார்ட்போன்களுக்கு அதீத விலை குறைப்பு அறிவிக்கப்பட இருக்கிறது.

டாப் 10 கேமரா ஸ்மார்ட்போன்கள்

டாப் 10 கேமரா ஸ்மார்ட்போன்கள்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் தின விற்பனையில் கிடைக்கும் டாப் 10 கேமரா ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம். தற்போது வரை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களும் விற்பனை தேதிகளை அறிவிக்கவில்லை. இந்த நிலையிலும் இரண்டு தளங்களும் சாத்தியமில்லாத வகையிலான பல தள்ளுபடி சலுகைகளை டீஸ் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். இந்த ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடியில் கிடைக்கும் என கருது, பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021- கூகுள் பிக்சல் 4ஏ கேமரா

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021- கூகுள் பிக்சல் 4ஏ கேமரா

தற்போது கூகுள் பிக்சல் 4ஏ சாதனமானது பிளிப்கார்ட்டில் டீஸ் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் தினம் 2021 விற்பனையில் பிக்சல் கேமரா சாதனத்தை சிறந்த சலுகையோடு வாங்கலாம் என கூறப்படுகிறது. கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனானது ரூ.31,999 ஆக இருக்கும் நிலையில் தள்ளுபடிக்கு பிறகு ரூ.20,000 என்ற விலைப்பிரிவில் வரும் என கூறப்படுகிறது. சரியான சலுகை அறிவிப்பு தெரிவிக்கப்படவில்லை.

ஆப்பிள் ஐபோன் 12 சலுகைகள்

ஆப்பிள் ஐபோன் 12 சலுகைகள்

ஐபோன் 12 சீரிஸ்-ல் உயர்நிலை ஸ்மார்ட்போனாக ஐபோன் 12 ப்ரோ இருக்கிறது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின 2021 மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை ஆகிய இரண்டு அறிவிப்பிலும் ஐபோன் 12 இடம்பெறும் எனவும் ஐபோன் 13 வெளியீட்டுக்கு பிறகு அதீத விலைக் குறைப்பை பெறும் எனவும் கூறப்படுகிறது. ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறந்த கேமரா அம்சத்தோடு வருகிறது. இதற்கும் தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளப் 3

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளப் 3

சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஆகியவை சந்தைகளில் மிகவும் மேம்பட்ட கேமரா போன்களில் ஒன்றாகும். இந்த சாதனமானது சந்தையில் உள்ள சிறந்த கேமரா தொலைபேசிகளில் குறிப்பிடதக்க ஒன்றாகும். இது காட்சிக்கு கீழ் கேமரா அம்சத்தோடு வருகின்றன. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 தள்ளுபடி விலையில் மடிக்கக்கூடிய சாதனமான இதற்கும் தள்ளுபடி கிடைக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா விலை குறைப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா விலை குறைப்பு

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின 2021 மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021 அறிவிப்பில் சில புதிய சாம்சங் போன்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா சாதனமும் இந்த விற்பனையில் பெரும் தள்ளுபடியை பெறுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா சாதனத்தின் கேமரா செயல்திறன் என்பது குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும்.

தள்ளுபடி விலையில் ஒன்பிளஸ் சாதனங்கள்

தள்ளுபடி விலையில் ஒன்பிளஸ் சாதனங்கள்

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் சிறந்த டாப் 10 கேமரா சாதனங்களில் ஒன்றாக இருப்பது ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி. இது ஹாசல்பிளாட் கேமராக்களுடன் சிறந்த கேமரா அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் தள்ளுபடியுடன் பெறலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021: ஒன்பிளஸ் 9 ஆர்.

சிறந்த கேமரா அம்சத்தோடு சந்தையில் கிடைக்கும் மற்றொரு சாதனமாக ஒன்பிளஸ் 9 ஆர் இருக்கிறது. இது முதன்மை ரக ஸ்மார்ட்போன் ஆகும். ஒன்பிளஸ் 9 தொடர் சாதனம் ஒழுங்கமைக்கப்பட்ட அம்சங்களோடு வருகிறது. பட்ஜெட் விலையில் சிறந்த கேமரா அம்ச ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021-ல் ஒன்பிளஸ் 9 ஆர் சாதனத்துக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா தள்ளுபடி

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா தள்ளுபடி

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சாதனமானது இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த ரேட்டிங் கொண்ட சாதனங்களில் ஒன்றாகும். பெரும்பாலான சியோமி ஃபிளாக்ஷிப் மாடல்களை போன்ற சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சாதனமும் சிறந்த அம்சங்களோடு தகுந்த விலையில் வழங்குகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2021 மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2021-ல் இதுபோன்ற ப்ரீமியம் சாதனங்களுக்கும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.

 பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை: மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை: மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2021-ல் மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் சாதனத்துக்கு அதிக விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களின் ஒரு பகுதியாக, மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் சாதனம் பல கேமரா மேம்பாடுகளை கொண்டிருக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த சாதனத்தை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

விவோ எக்ஸ் 60 ப்ரோ தள்ளுபடி

விவோ எக்ஸ் 60 ப்ரோ தள்ளுபடி

விவோ ஸ்மார்ட்போன்களில் கேமரா அம்சங்களுக்கு எந்த குறையும் இருக்காது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் விவோ எக்ஸ் 60 ப்ரோ விலைக் குறைப்பு தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. இதுவும் கேமரா மேம்பாடு விரும்பும் பயனர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் விலை குறைப்பு

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் விலை குறைப்பு

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மேம்படுத்தப்பட்ட கேமராவை கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் புதிய வெளியீடுகளில் இதுவும் ஒன்றாகும். ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் சாதனம் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Top 10 Camera Smartphones Available at Discount Price in Flipkart Big Billion Days 2021, Amazon Great Indian Festival Sale 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X