Home
News

Vodafone டாப் 10 சிறந்த திட்டம் இதுதான்! தெரியாதவங்க உடனே தெரிஞ்சுக்கோங்க!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டியில் சரிக்குச் சமமாகப் போராடி வரும் நிறுவனம் தான் வோடாபோன் நிறுவனம். இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் மிகச் சிறந்த டாப் 10 திட்டங்களை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இந்த திட்டங்களில் உங்களுக்கு ஏற்ற திட்டத்தை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள்.

வோடபோன் ரூ.249 திட்டம்

வோடபோன் ரூ.249 திட்டம்

வோடபோனின் இந்த ரூ.249 திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையுடன் கூடிய கூடுதலா 1.5 ஜிபி டேட்டா என ஒட்டுமொத்தமாக 3 ஜிபி நன்மையை வழங்குகிறது. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இத்துடன் வோடபோன் ப்ளே சந்தா + ZEE5 சந்தாவையும் வழங்குகிறது. கூடுதல் 1.5 ஜிபி டேட்டா டபுள் டேட்டா சலுகையின் ஒரு பகுதியாகும், இது வரையறுக்கப்பட்டுள்ள ஒரு சலுகை என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.299 திட்டம்

வோடபோன் ரூ.299 திட்டம்

வோடபோனின் இந்த திட்டம் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகள் என 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன், ரூ.499 மதிப்புள்ள வோடபோன் ப்ளே சந்தா மற்றும் ZEE5 சந்தாவை வழங்குகிறது.

வோடபோன் ரூ.399 திட்டம்

வோடபோன் ரூ.399 திட்டம்

வோடபோனின் ரூ.249 திட்டத்தைப் போலவே இந்த திட்டத்தின் கீழும் கூடுதல் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1.5 ஜிபி + 1.5 ஜிபி என மொத்தமாக 3 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்படுகிறது. இத்துடன் 100 எஸ்எம்எஸ் வரம்பற்ற குரல் அழைப்புடன் சேர்த்து, ரூ.499 மதிப்புள்ள வோடபோன் ப்ளே சந்தா + ZEE5 சந்தா ஆகியவற்றை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

வோடபோன் ரூ.499 திட்டம்

வோடபோன் ரூ.499 திட்டம்

வோடபோனின் இந்த திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளுடன் சேர்த்து, ரூ.499 மதிப்புள்ள வோடபோன் ப்ளே சந்தா + ZEE5 சந்தா ஆகியவற்றை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

வோடபோன் ரூ.558 திட்டம்

வோடபோன் ரூ.558 திட்டம்

வோடபோனின் இந்த ரூ.558 திட்டம் வரம்பற்ற அழைப்புகள், தினமும் 3 ஜிபி டேட்டா நன்மை மற்றும் 100 எஸ்எம்எஸ் என, கூடுதல் இலவச நன்மையான வோடபோன் ப்ளே சந்தா மற்றும் ZEE5 சந்தா ஆகியவற்றுடன் சேர்த்து 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் கிடைக்கிறது.

வோடபோன் ரூ.599 திட்டம்

வோடபோன் ரூ.599 திட்டம்

வோடபோனின் இந்த ரூ.599 திட்டம் தினமும் 1.5 ஜிபி + 1.5 ஜிபி என மொத்தமாகத் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மையுடன், 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புடன், ரூ. 499 மதிப்புள்ள வோடபோன் ப்ளே சந்தா மற்றும் ZEE5 சந்தா ஆகியவற்றை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.இதில் வழங்கப்படும் கூடுதல் 1.5 ஜிபி டேட்டாவானது டபுள் டேட்டா சலுகையின் ஒரு பகுதியாகும், இது வரையறுக்கப்பட்டுள்ள ஒரு சலுகை என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.2399 திட்டம்

வோடபோன் ரூ.2399 திட்டம்

வோடபோனின் இந்த ரூ.2399 திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மை, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் சேர்த்து, ரூ.499 மதிப்புள்ள வோடபோன் ப்ளே சந்தா + ZEE5 சந்தா ஆகியவற்றை ஒரு வருட காலத்திற்கு வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும்.

வோடபோன் ரூ.16 திட்டம்

வோடபோன் ரூ.16 திட்டம்

வோடபோனில் கிடைக்கப்பெறும் மிக குறைந்த விலை சிறந்த திட்டம் இந்த ரூ.16 திட்டம் மட்டும் தான், இத்திட்டத்தின் கீழ் 1 ஜிபி அளவிலான டேட்டா நன்மையை 1 நாள் என்கிற செல்லுபடியுடன் வோடபோன் வழங்குகிறது. இந்த குறைந்த விலை திட்டம் ஒரு டேட்டா டாப் அப் திட்டமாகும்.

வோடபோன் ரூ.48 திட்டம்

வோடபோன் ரூ.48 திட்டம்

வோடபோனின் இந்த ரூ.48 திட்டம் பயனர்களுக்கு 3 ஜிபி அளவிலான டேட்டா நன்மையை 28 நாட்கள் என்னும் செல்லுபடி காலத்துடன் வழங்குகிறது. இதில் பயனர்கள் டேட்டா நன்மையை மட்டுமே அனுபவிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.98 திட்டம்

வோடபோன் ரூ.98 திட்டம்

வோடபோனின் டாப் 10 சிறந்த திட்டங்களில் இறுதியான திட்டம் இந்த ரூ.98 திட்டம் தான், இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 6 ஜிபி அளவிலான டேட்டாவை 28 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்குகிறது. இத்திட்டமும் முன்பு கூறப்பட்ட 2 திட்டங்களைப் போல் ஒரு டேட்டா டாப் அப் ஆகும். இதில் பயனர்களுக்கு டேட்டா நன்மையைத் தவிர வேற எந்த நன்மையையும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Top 10 Best Vodafone Prepaid Plans That Available Now : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X