உலகளவில் ஜூன் மாத பெஸ்ட் மாடலாக தேர்வு செய்யப்பட்ட டாப் 10 போன்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்!
இந்த 2023 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த மொபைல் போன்களைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது. இந்த ஜூன் மாதத்தில் உலகளவில் பிரபலமடைந்த ஸ்மார்ட்போன் மாடல்களை தான் இந்த பதிவுடன் இணைத்துள்ளோம்.
சிறந்த ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்யும் போது, நாம் சந்திக்க கூடிய விஷயம் என்னவென்றால், நபருக்கு நபர் விருப்பம் முற்றிலுமாக மாறுகிறது. சிலருக்கு One UI அம்சம் கொண்ட சாம்சங் மாடலை விரும்புகிறார்கள். மறுபுறம், MIUI இல் இயங்கும் மலிவான விலை கொண்ட, டன் கணக்கில் கஸ்டமைஸ் விருப்பத்தை வழங்கும் Xioami போன்களை சிலர் விரும்புகிறார்கள்.

இன்னும் சிலர், ஆண்ட்ராய்டு போன்களே வேண்டாம். வாங்கினால் iOS இல் சிறப்பாக இயங்கும் ஒரு ஐபோனை தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ளனர். இப்படி ஒவ்வொரு நபருக்கும், வெவ்வேறு விதமான விருப்பங்கள் இருக்கிறது. அப்படி, பலரின் விருப்பத்தை பெற்ற வெவ்வேறு விதமான டாப் 10 பெஸ்ட் ஸ்மார்ட்போன் பட்டியலை தான் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
1. ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 14 Pro Max)
2. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra)
3. விவோ எக்ஸ்90 ப்ரோ (Vivo X90 Pro)
4. சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 4 (Samsung Galaxy Z Fold 4)
5. ஒப்போ பைண்ட் என்2 பிலிப் (OPPO Find N2 Flip)

6. கூகுள் பிக்சல் 7 ப்ரோ (Google Pixel 7 Pro)
7. சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G)
8. சாம்சங் கேலக்ஸி Z பிலிப் 4 (Samsung Galaxy Z Flip 4)
9. ஒன்பிளஸ் 11 (OnePlus 11)
10. மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 30 பியூஷன் (Motorola Moto Edge 30 Fusion)

இந்த 10 ஸ்மார்ட்போன் மாடல்களும் இந்த மாதத்தில் உலகளவில் மிக சிறந்த மொபைல் (Mobile) போன் மாடல்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்மார்ட்போனும், ஒவ்வொரு விலை பிரிவில் பல விதமான புதிய தொழில்நுட்பம் மற்றும் அம்சங்களுடன் பேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு போனை நீங்கள் வாங்க விரும்பினால், உங்கள் சாய்ஸ் 100% முற்றிலும் நம்பகமானது என்று கூறலாம்.
காரணம், உலகளவில் தலைசிறந்து விளங்கும் முன்னணி பிராண்டுகளில் இருந்து தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வாங்க கிடைக்கும் டாப் 10 மாடல்களை இங்கு உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். இந்த டாப் 10 ஜூன் 2023 பெஸ்ட் ஸ்மார்ட்போன் பட்டியலில் உள்ள எந்த ஸ்மார்ட்போன் மாடலை உங்களுக்கு பிடித்துள்ளது என்று கமெண்டில் உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








