Subscribe to Gizbot

அடிக்கடி அச்சுறுத்தும் உலகின் டாப் ஹேக்கர்கள்..!!

Written By:

வேண்டாத விஷயத்தை செய்வதில் அனைவருக்கும் தனி ஆர்வம் மற்றும் திறமை இருக்க தான் செய்கின்றது. தடை செய்யப்பட்ட காரியத்தை செய்யும் போது இருக்கும் மகிழ்ச்சியை வேறு எதுவும் ஈடு செய்ய முடியாது.

நிலைமை இப்படி இருக்க சிறு வயதில் விளையாட்டாக கணினி பயின்று இன்று உலகமே வியக்கும் பல செயல்களில் ஈடுப்பட்டு வரும் உலகின் தலை சிறந்த ஹேக்கர்களை தெரியுமா உங்களுக்கு..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கேரி மெக்கினான்

10. கேரி மெக்கினான்

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் தான் கேரி மெக்கினான். இவர் சுமார் 97 அமெரிக்க ராணுவம் மற்றும் நாசா சார்ந்த தளங்களை ஹேக் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

ஆல்பர்ட் கோன்சலெஸ்

09. ஆல்பர்ட் கோன்சலெஸ்

இண்டர்நெட் வங்கி சேவை சார்ந்த ஹேக்கிங் செய்த ஆல்பர்ட் பயனர்களின் க்ரெடிட் கார்டுகளில் இருந்து பணத்தை திருடியதோடு இதனை யாரும் கண்டுபிடிக்காத படி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆல்பர்ட் மீது குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட பின் ஃபெடரல் சிறையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஜொனாதன் ஜேம்ஸ்

08. ஜொனாதன் ஜேம்ஸ்

15 வயதில் இருக்கும் போதே பெல்சவுத் மற்றும் மியாமி-டேட் பள்ளி நெட்வர்க்களை ஹேக் செய்த ஜேம்ஸ் 16 வயதில் ஹேக் செய்த குற்றத்திற்காக சிறை சென்றதோடு இவர் நாசா கணினிகளில் பல முறை சேதப்படுத்தியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்ட்ரா

07. ஆஸ்ட்ரா

ஆஸ்ட்ரா எனும் பெயர் மூலம் பிரபலமான இந்த ஹேக்கர் சட்ட விரோதமாக போர் ஆயுத வியாபாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். கணித பாடத்தில் தேர்ச்சி பெற்ற இவர் ஃபிரான்ஸ் டசால்ட் குழுவில் இருந்து தொழில்நுட்ப தகவல்களை திருடி அதனினை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

கெவின் மின்நிக்

06. கெவின் மின்நிக்

தற்சமயம் வரை மிகவும் பயங்கரமான சைபர் குற்றவாளியாக கெவின் இருக்கின்றார். இரு முறை சிறை சென்ற ஹேக்கர் இவர் என்பதோடு நோக்கியா மற்றும் டிஈசி சிஸ்டம்களின் மூல குறியீடுகளை ஹேக் செய்திருக்கின்றார். தான் செய்வது குற்றமில்லை என வாதாடும் இவர் தனது வேலையை சமூக பொறியியல் என்று குறிப்பிடுவதோடு சில புத்தகங்களையும் எழுதியிருக்கின்றார்.

அனானமஸ்

05. அனானமஸ்

ஹேக்கிங் உலகில் மிகவும் பிரபலமான மற்றொரு ஹேக்கர் தான் அனானமஸ். இவர்கள் ஒரு குழுவாக இயங்குவதோடு இவர்கள் பொதுவாக 'டிஜிட்டல் ராபின் ஹூட்' என்றும் கூறப்படுகின்றனர். தற்சமயம் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் ஹேக்கர்களும் இவர்களே.

அட்ரியான் லாமோ

04. அட்ரியான் லாமோ

மைக்ரோசாப்ட், யாஹூ, தி நியூ யார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல சிஸ்டம்களை ஹேக் செய்து பிரபலமானவர் தான் அட்ரியான்.

கெவின் பால்சன்

03. கெவின் பால்சன்

எளிமையாக சொல்ல வேண்டும் எனில் ரேடியோ போட்டிகளில் வெற்றி பெறவே ஹேக் செய்து பிரபலம் ஆனவர் தான் கெவின் பால்சன்.

மாத்யூ பெவன் மற்றும் ரிச்சார்டு ப்ரைஸ்

02. மாத்யூ பெவன் மற்றும் ரிச்சார்டு ப்ரைஸ்

அமெரிக்கா ராணுவ சிஸ்டம்களை ஹேக் செய்து இதன் மூலம் மற்ற நாடுகளின் சிஸ்டம்களை கையாள முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லுல்செக்

01. லுல்செக்

சிஐஏ, எஃப்பிஐ மற்றும் பல பெரிய நிறுவனங்களின் சிஸ்டம்களை ஹேக் செய்து பிரபலம் அடைந்த இவர் தற்சமயம் உயிரோடு இல்லை என கூறப்படுகின்றது.

பாதிப்பு

பாதிப்பு

இவர்கள் செய்யும் விஷயங்கள் கேட்கவும், படிக்கவும் நன்றாக இருந்தாலும் இவர்கள் செய்வது மிக பெரிய குற்றம் என்பதே உண்மை. இது போன்ற திறமைகள் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தப்பட்டால் அனைவருக்கும் நன்மையே..

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Top 10 BEST HACKERS IN THE WORLD 2015. Read more in Tamil. 

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot