Home
News

தீக்குச்சி பட்டாசா 2023ல் தெறிக்கவிட்ட டாப் 10 கேமிங் போன்கள்.. எது சூப்பர் கூல் ஸ்மார்ட்போன் தெரியுமா?

உலகத்திலேயே இப்போது டாப் மோஸ்ட் ட்ரெண்டிங்கில் இருக்கும் மிரட்டலான கேமிங் ஸ்மார்ட்போன் (Top best gaming smartphones) மாடல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். எந்த கேமிங் மொபைல் என்னென்ன அட்டகாசமான அம்சத்துடன் வந்துள்ளது. எது அதிகமாக விற்பனையாகியுள்ளதென்று பார்க்கலாமா?

கேமிங் ஸ்மார்ட்போன் சந்தை இப்போது வேகமாக வளர்ந்து வரும் ஒரு வியாபார சந்தையாக மாறி வருகிறது. கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கும், சாதாரணமான ஸ்மார்ட்போன்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம் உள்ளதென்று இன்னும் சிலருக்கு குழப்பமாக இருக்கிறது. அதை முதலில் தெளிவுபடுத்திவிட்டு நேரடியாக டாப் 10 பெஸ்ட் கேமிங் மொபைல் (Top 10 best gaming mobile phone list 2023) பட்டியலிற்குள் செல்லலாம்.

தீக்குச்சி பட்டாசா 2023ல் தெறிக்கவிட்ட டாப் 10 கேமிங் போன்கள்..

கேமிங் ஸ்மார்ட்போன் மற்றும் நார்மல் ஸ்மார்ட்போனுக்கு இடையில் உள்ள வேறுபாடு என்ன?

கேமிங் ஸ்மார்ட்போன்கள் பிரத்தியேகமான சிறப்பம்சங்களுடன் உயர்திறன் கொண்ட கேமிங் அனுபவத்திற்காக உருவாக்கப்படுகிறது. இதனால், இதில் உயர் திறன் கொண்ட சிப்செட்கள் (chipset), அதிக ரெஃப்ரஷ் ரேட் கொண்ட பெரிய டிஸ்பிளேக்கள் (high refresh rate display), சிறந்த கூலிங் சிஸ்டம் (cooling systems), சிறப்பு LED விளக்குகள் (LED lights) மற்றும் கேமிங் பட்டன்கள் போன்ற சிறப்பு அம்சங்களுடன் இந்த சாதனங்கள் வெளியிடப்படுகின்றன.

சாதாரண ஸ்மார்ட்போன்களில் இவை நார்மல் அம்சங்களுடன் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது சந்தையில் அறிமுகமாகும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் கேமிங் போன்களுக்கு நிகரான அம்சங்களை நம்மால் பெற முடிகிறது என்பதே மற்றொரு தரப்பு உண்மையாகும். சரி, இப்போது இந்த ஆண்டில் வெளியான கேமிங் போன்களில் எது டாப் மாடல் கேமிங் போன் என்ற விபரத்தை இப்போது பார்க்கலாம்.

1. ஆசஸ் ராஃக் போன் 7 அல்டிமேட் (Asus ROG Phone 7 Ultimate)
165Hz டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
16ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ்
வேப்பர் கூலிங் சிஸ்டம்

2. நுபியா ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ பிளஸ் (Nubia Reg Magic 8s Pro+)
அண்டர் டிஸ்பிளே செல்பி கேமரா
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
24ஜிபி ரேம், 1TB ஸ்டோரேஜ்
பில்ட்-இன் கூலிங் ஃபேன்

3. சியோமி 14 ப்ரோ (Xiaomi 14 Pro)
120Hz டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்
16ஜிபி ரேம், 1TB ஸ்டோரேஜ்

4. ரெட்மி கே50 கேமிங் (Redmi K50 Gaming)
120Hz டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்
12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ்

5. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max)
120Hz டிஸ்பிளே
ஆப்பிள் A17 ப்ரோ சிப்செட்
8ஜிபி ரேம், 1TB ஸ்டோரேஜ்

6. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra)
120Hz டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
12ஜிபி ரேம், 1TB ஸ்டோரேஜ்

7. ஐகியூஓஓ 12 ப்ரோ (iQOO 12 Pro)
144Hz டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்
16ஜிபி ரேம், 1TB ஸ்டோரேஜ்

8. ஒன்பிளஸ் 11 (OnePlus 11)
120Hz டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
16ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ்

9. ஐகியூஓஓ நியோ 7 ப்ரோ 5ஜி (iQOO Neo 7 Pro 5G)
120Hz டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்
12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ்

10. இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro)
120Hz டிஸ்பிளே
மீடியாடெக் டைமென்சிட்டி 8050 சிப்செட்
8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ்

இந்த 10 மாடல்களும் பெஸ்ட் கேமிங் ஸ்மார்ட்போன் சாதனமாக திகழ்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 10 Best Gaming Smartphones In The World Got Released in 2023 List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X