இந்தியாவில் வாங்க சிறந்த 10 பவர் பேங்க்ஸ்..!
இன்னைய தேதிக்கு, நம்மில் பலருக்கு தண்ணீர் பிரச்சனையை விட ஸ்மார்ட்போனில் குறைந்து கொண்டே போகும் பேட்டரி தான் பெரிய பிரச்சனை..!
அப்பாக்களுக்கு கொடுக்க வேண்டிய தந்தையர் தின பரிசுகள் !
ஸ்மார்ட்போன் பேட்டரி பிரச்னைசயால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கும் பலருக்கும் பவர் பேங்க் ஒண்ணு வாங்கணும்னு பிளான் இருந்துட்டே தான் இருக்கும். ஆனால், எந்த பவர் பேங்க் வாங்கலாம் என்ற குழப்பத்தில் இருப்போம். அந்த குழப்பத்திற்க்கான தீர்வை தான் நாம் இங்கே காண இருக்கிறோம்..!
இந்தியாவில் வாங்க சிறந்த 10 பவர் பேங்க் கருவிகளை பின் வரும் ஸ்லைடர்களில் காணலாம்..

சியோமி 10400எம்ஏஎச் பவர் பேங்க் :
தண்ணீர் மற்றும் அரிப்பை தடுக்கும் முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், உங்கள் ஐபோன்களை 4.5 முறை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

சீரோ 12000எம்ஏஎச் பேட்டரி பேங்க் :
பெரிய பவர் பேங்க் அதிக சார்ஜ் செய்யும் என்பதை தகர்த்து எறிந்த இது வேகமாக சார்ஜ் செய்ய நினைப்பவர்களுக்கு சரியான பவர் பேங்க்..!

டிவைஎல்டி(TYLT) பவர் பிளான்ட் :
முழுவதாக சார்ஜ் ஏற 6 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் இது அளவில் மிக சிறியதாகும்.

அம்ப்ரான் பி1040 :
டிஜிட்டல் டிஸ்ப்ளே உடைய இது 10400 எம்ஏஎச் கொண்ட பவர் பேங்க் ஆகும்.

லேனோவோ பி10400 :
ஒரே நேரத்தில் இரண்டு போன்களை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட இது முழுவதாக சார்ஜ் ஏற 5 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

டிபிலின்க் (TPLINK) 10400எம்ஏஎச் பவர் பேங்க் :
டார்ச் வசதி மற்றும் 2 சார்ஜிங் போர்ட் கொண்ட இது ஓவர் வால்டேஜ், அதிக உஷ்ணம் போன்றவைகளைத் தாங்கும்படி கட்டமைக்கப்பட்டது.

ரோமோஸ் 10000எம்ஏஎச் பவர் பேங்க் :
தரமான பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட இது முழுவதாக சார்ஜ் ஏற 6 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். இதற்கு 2 சார்ஜிங் போர்ட் உண்டு

லேனோவோ பவர் பேங்க் பிபி(PB)410 5000எம்ஏஎச் :
தரமான மெட்டாலிக் டிசைன் கொண்ட இது 2 முதல் 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

போர்ட்ரோனீக்ஸ் பிஓஆர் 310 5200எம்ஏஎச் பவர் பேங்க் :
ரப்பர் மூலம் மேல் அடுக்கு டிசைன் கொண்ட இது மிகவும் ஸ்டைல் ஆன மற்றும் எடை குறைவான பவர் பேங்க் ஆகும்.

கார்போன் பாலிமர் 10 பவர் பேங்க் :
புது வரவான இது 10000எம்ஏஎச் கொண்டது. 2 சார்ஜிங் போர்ட்களை கொண்டது.


Click it and Unblock the Notifications