எந்திரன் ரஜினியை மிஞ்சிய ரோபோட்கள்..!!

Written By:

தொழில்நுட்ப வளர்ச்சி நமது வாழ்க்கையை எளிமையாக்கியதில் அதிக பங்கு ரோபோட்களுக்கு அதிகம் என்றே கூறலாம். முன்பு இயந்திரம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள சிறிய மோட்டார் கொண்ட ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் பணிகளை எளிமையாகவும், வேகமாகவும் செய்து முடிக்க முடிந்தது.

இன்று மனிதனை போன்ற ரோபோட்கள், மனிதனால் செய்ய முடியாதவைகளை கண் இமைக்கும் நேரத்தில் செய்து அசத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட்களின் தயாரிப்பு பணிகள் சுமார் 1960 ஆம் ஆண்டுகளிலேயே துவங்கி விட்டது.

இனி வரும் ஆண்டுகளில் ரோபோட் சந்தை மதிப்பு யாரும் அறிந்திராத வகையில் இருக்கும் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள். 2017 ஆம் ஆண்டு வாக்கில் ரோபோட் சந்தை மதிப்பு அதிகபட்சம் சுமார் $1.3 பில்லியன் வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிஆர் 2

10 பிஆர் 2

வில்லோ கரேஜ் நிறுவனம் தயாரித்த ரோபோட் பிஆர் 2 வீட்டு வேலைகளை செய்து முடிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரோபோ

09 கிரோபோ

டோக்யோ பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் மூலம் தயாரான இந்த ரோபோட் விண்வெளியில் பேசிய முதல் பேசும் ரோபோட் என்ற பெருமையை பெற்றுள்ளது.

பெர்டோல்ட் மெயர்

08 பெர்டோல்ட் மெயர்

மனித உடலில் இருக்கும் அனைத்து பாகங்களையும் செயற்கையாக கொண்ட இந்த ஆறு அடி ரோபோட் தயாரிக்க சுமார் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவானதாக கூறப்படுகின்றது. இந்த ரோபோட் கொண்டிருக்கும் 17 செயற்கை பாகங்களை உலகில் இருக்கும் சுமார் 17 நிறுவனங்கள் வழங்கின. மனிதனை போன்று சுவாசிப்பது, நடப்பது, பேசுவது என அனைத்தையும் செய்யும் உலகின் முதல் ரோபோட் இது தான்.

கம்ப்ரெஸ்ஸர்ஹெட்

07 கம்ப்ரெஸ்ஸர்ஹெட்

இந்த ரோபோட் இசை குழுவில் மொத்தம் மூன்று ரோபோட்கள் இருக்கின்றன. ட்ரம் வாசிக்கும் ரோபோட் நான்கு கைகளையும், கிட்டார் வாசிக்கும் ரோபோட் 78 விரல்களையும் கொண்டிருக்கின்றது.

ரோபோட் ஜாக்கீ

06 ரோபோட் ஜாக்கீ

ஷாக் அபஸர்பர் மற்றும் ஜிபிஎஸ் டிராக்கிங் வசதி கொண்ட ரோபோட்கள் ஒட்டகம் செல்லும் பாதையை ட்ராக் செய்ய வழி செய்கின்றது. இந்த ஒட்டகங்களின் மதிப்பு சுமார் 10 லட்சம் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போர்டான் மேன்

05 போர்டான் மேன்

ராணுவ வீர்ரால் செய்ய கூடிய அனைத்தையும் செய்யும் திறன் கொண்ட ரோபோட்கள் ப்ரிட்டனில் இரசாயன தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஆடைகளை சோதனை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரோபோ தெஸ்பியன்

04 ரோபோ தெஸ்பியன்

ப்ரிட்டனை சேர்ந்த ரோபோ தெஸ்பியன் புகைப்படங்களை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆக்ட்ராய்டு எஃப்

03 ஆக்ட்ராய்டு எஃப்

உலகின் அழகிய ரோபோட் என கருத்தப்படும் இந்த ரோபோட் கண் பார்வையை கொண்டு மனிதர்களுடன் இயல்பாக பேச முடியும்.

வாக்ரெய்

02 வாக்ரெய்

மனிதர்களை ஆபத்து நேரத்தில் காப்பாற்ற பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோட் நாசா ஆய்வாளர்களால் சுமார் ஒன்பது மாதத்தில் முடிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது, தற்சமயம் இந்த ரோபோட்கள் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

ரோபோட்டிக் போல் டான்ஸர்ஸ்

01 ரோபோட்டிக் போல் டான்ஸர்ஸ்

இந்த ரோபோட் ஜோடி இசையை கேட்டால் உடனே ஆட துவங்கி விடும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படங்கள் : சைனாடெய்லி.காம்

Read more about:
English summary
Top 10 amazing robots in the world. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot