விட்றாதீங்க.. நாளை கடைசி.. Aadhaar திருத்தம் பண்ணிடுங்க.. இல்லன்னா வீண் செலவு..
ஆன்லைனில் இலவசமாக ஆதார் (aadhaar) புதுப்பிக்க இன்னும் ஒரு நாள் உள்ளது. அதாவது வரும் ஜூன் 14, 2024 வரை உங்கள் ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்கலாம். குறிப்பாக இந்த தேதிக்கு பிறகு, அதார் அட்டையில் எந்த விவரங்கள் ஆன்லைனில் புதுப்பித்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, மின்னஞ்சல் போன்ற தகவல்களை UIDAI இணையதளம் மூலம் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். குறிப்பாக ஆதார் வைத்திருக்கும் மக்கள் தங்கள் தகவல்களை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளத் தான் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.

அதுவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை வைத்திருப்பவர்கள், தங்களின் தகவல்களைக் கண்டிப்பாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆதார் சேவை மையம் சென்றால் அடையாளச் சான்று ஆவணங்களை சமர்பிக்க வேண்டியிருக்கும், பின்பு அங்கு இதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது இணையதளம் வழியாக நீங்கள் இலவசமாகவே இந்த ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து செய்து உங்கள் தகவல்களை எளிதாகப் புதுப்பிக்க முடியும்.
நாமே இணையதளம் மூலம் இதை விரைவாக செய்துவிடவும் முடியும். குறிப்பாக. ஜூன் 14 வரை (நாளை) மட்டுமே ஆதார் தகவல்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும். அதன்பிறகு நீங்கள் ஆதாரில் திருத்தம் செய்யும் எந்த ஒரு செயல்முறைக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது இணையதளம் மூலம் ஆதார் தகவல்களை எவ்வாறு புதுப்பிப்பது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ஸ்டெப் 1: முதலில் ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த தளத்தில் மை ஆதார் (my aadhaar) என்பதை கிளிக் செய்த பின்பு கீழே தோன்றும் மெனுவில் இருந்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் (அப்டேட் செய்யவும்) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: அதன்பின்னர் ஆதார் எண் மற்றும் கேப்சாக சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பிறகு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பிவைக்கப்படும். இந்த ஓடிபி உதவியுடன் உள்நுழைய முடியும். அடுத்து அந்த தளத்தில் முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்க்கவும்.
ஸ்டெப் 3: குறிப்பாக இந்த சுயவிவரங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக இருந்தால் என்னுடைய விவரங்கள் சரியாக இருக்கின்றன என்பதை கிளிக் செய்யவும். ஒருவேளை தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். இதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 4: அடுத்து உங்களது அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள், அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் கண்டிப்பாக 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும்.
ஸ்டெப் 5: அடையாள அட்டையும் முகவரி ஆவணமும் JPEG, PNG or PDF ஃபார்மட்டில் இருத்தல் வேண்டும். இதை தொடர்ந்து சப்மிட் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். மேலும் ஒரு யுனிக் அப்டேட் ரெஃபரன்ஸ் நம்பர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும். இதை வைத்து உங்களது விவரங்கள் அப்டேட் ஆனதைக் எளிமையாகக் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications