62.1 லட்சம் மொபைல்களில் தயாரிக்கப்பட்ட பதக்கங்கள்: "ஒலிம்பிக் பதக்கத்தின் ரகசியம்"- சாமானிய மக்களின் பங்கு!

|

இரண்டாம் உலகப் போரில் உருக்குலைந்து தங்கள் உழைப்பு மற்றும் புதிய சிந்தனைகளால் உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உருவாகியிருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களையும் ஜப்பான் வியக்கவைக்கும் முறையில் தயாரித்து உள்ளது. ஐவர்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒலிம்பிக் பதக்கங்கள் தயாரிக்க 5.7 டன் உலோகம்

ஒலிம்பிக் பதக்கங்கள் தயாரிக்க 5.7 டன் உலோகம்

ஒலிம்பிக் பதக்கங்கள் தயாரிக்க 5.7 டன் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு கிராம் உலோகம் கூட சுரங்கத்தில் இருந்து எடுக்கப்படவில்லை. அதேபோல் ஒலிம்பிக் பதக்க தயாரிப்பில் சாமானிய மக்களின் பங்களிப்பும் இருக்கச் செய்துள்ளது ஜப்பான் நாடு. ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஜப்பான் தங்கம், வெள்ளி, வெண்கலம் என தலா 5000 பதக்கங்களை தயாரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தங்க பதக்கத்தின் எடை 556 கிராம்

தங்க பதக்கத்தின் எடை 556 கிராம்

தங்க பதக்கத்தின் எடை 556 கிராம் ஆகும். இதில் ஆறு கிராம் மட்டும் தங்கம். அதேபோல் வெள்ளி பதக்க எடை 550 கிராம், வெண்கல பதக்க எடை 450 கிராம் ஆகும். ஒலிம்பிக் பதக்கங்களை ஜுனிச்சி கவானிஷி என்பவர் வடிவமைத்தார். தற்போது டோக்கியோவில் நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிக்கு ஏப்ரல் 2017 முதல் 2019 வரையிலான காலக்கட்டம் வரை 78985 டன் எலெக்ட்ரானிக் சாதனங்களை ஜப்பான் அதிகாரிகள் திரட்டி இருக்கின்றனர். இதில் ஜப்பானில் உள்ள அனைத்து பகுதிகளும் பங்கேற்றுள்ளது.

திரட்டப்பட்ட 78,985 டன் எலெக்ட்ரானிக் சாதனங்கள்

திரட்டப்பட்ட 78,985 டன் எலெக்ட்ரானிக் சாதனங்கள்

திரட்டப்பட்ட 78985 டன் எலெக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து உலோகம் பிரிக்கப்பட்டு மெடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் 62.1 லட்சம் மொபைல் போன்களும் அடக்கம். பதக்கம் தயாரிக்க தேவையான 5.7 டன் உலோகத்தில் ஒரு கிராம் கூட சுரங்கத்தில் இருந்து எடுக்கவில்லை என்ற தகவல் பலரையும் வியக்கவைத்ததோடு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும் பாராட்டுப் பெற்றுள்ளது.

டோக்கியோவில் 2020 ஒலிம்பிக்

டோக்கியோவில் 2020 ஒலிம்பிக்

கொரோனா தொற்று காரணமாக டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் இந்தாண்டு ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு வழிமுறைகளுடன் முக்கிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் மாறிமாறி முன்னிலை வகித்து வருகின்றன.

ஒலிம்பிக் போட்டியில் சீனா முதலிடம்

ஒலிம்பிக் போட்டியில் சீனா முதலிடம்

ஒலிம்பிக் போட்டியில் சீனா 29 தங்கம், 17 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா 22 தங்கம், 25 வெள்ளி, 17 வெண்கலத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஜப்பான் 17 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கலத்துடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இதில் இந்தியா ஒரே ஒரு வெள்ளியுடன் 62-வது இடத்தில் இருக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
Tokyo Olympics 2020 Medals Manufactured by 78,385 Electronic Devices Include 62.1 Lakhs Mobiles

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X