இன்று 'ரிங் ஆஃப் ஃபயர்' சூரிய கிரகணம்: எந்தெந்தப் பகுதிகளில் பார்க்க முடியும்? நாசா தகவல்.!

|

கடந்த மே 26-ம் தேதி சந்திரகிரகணம் நிகழ்ந்த நிலையில் அடுத்த சில நாள்களில் முதல் சூரிய கிரகணம் இன்று (ஜூன் 10) நிகழ்கிறது. குறிப்பாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும் நிகழ்வு தான் சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது. மேலும் இன்று நிகழவிருக்கும்
கிரகணத்தின் போது சூரியனை முழுமையாக மறைக்கும் தூரத்தில் நிலவு இருக்காது என்பதால் சூரியன் நிலவை மறைக்கு போது சூரியன் நெருப்பு வளையம் போன்று தெரியும் என்று கூறப்படுகிறது.

நேரப்படி மதியம் 1.42 மணிக்கும்

சரியாக இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு இந்த சூரிய கிரகணம் தொடங்கும் என்றும், பின்பு மாலை 6.41 வரை சூரிய கிரகணம் நிகழும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் இந்த சூரிய கிரகணத்தை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்கள்.

து இந்தியாவில் பெரும்பாலானோர் இந்

அதாவது இந்தியாவில் பெரும்பாலானோர் இந்த சூரிய கிரணகணத்தை பார்க்க முடியாது என்றும், லடாக், அருணாச்சல பிரதேசத்தில் உள்ளவர்கள் மட்டும் சில நிமிடங்கள் இந்த சூரிய கிரணத்தை பார்க்க முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பேசும் டைனோசர், கொசு, கிளி- டுவிட்டரை கைப்பற்றும் ஒன்றிய உயிரனங்கள்: வேறலெவல் டிரெண்ட்!தமிழில் பேசும் டைனோசர், கொசு, கிளி- டுவிட்டரை கைப்பற்றும் ஒன்றிய உயிரனங்கள்: வேறலெவல் டிரெண்ட்!

 கிரீன்லாந்து ஆகிய ப

நாசா இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, கனடாவின் சில பகுதிகள், வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் இந்தச் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி கம்மி விலை KaiOS பீச்சர் போன்களிலும் வாட்ஸ்அப் அழைப்பு சேவை: ஜியோபோன் பயனர்களுக்கு குஷி தான்..இனி கம்மி விலை KaiOS பீச்சர் போன்களிலும் வாட்ஸ்அப் அழைப்பு சேவை: ஜியோபோன் பயனர்களுக்கு குஷி தான்..

வடக்கு அலாஸ்கா, கனடா, கிழக்கு அமெரிக்கா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா,

அதேபோல் வடக்கு அலாஸ்கா, கனடா, கிழக்கு அமெரிக்கா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில்இந்த கிரகணத்தை பார்க்க முடியும் நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா? புத்திசாலித்தனமான பூனை செய்த காரியம் இதுதான்.!எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா? புத்திசாலித்தனமான பூனை செய்த காரியம் இதுதான்.!

இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் சில இடங்களில் காணப்படாது, ஆனால் நீங்கள் இந்த நிகழ்வை ஆன்லைனில் துல்லியமாகப் பார்க்கலாம். Timeanddate.com ஏற்கனவே சூரிய கிரகணத்தின் நேரடி ஸ்ட்ரீம் இணைப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிகழ்வை நீங்கள் ஜூன் 10 அன்று ஆன்லைனில் காணலாம். சூரிய கிரகணம் 2021 லைவ் ஸ்ட்ரீம் இணைப்பை நாங்கள் கீழே லிங்க் செய்துள்ளோம்.

நேரடியாக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் புகார் அளிக்க புதிய இணையதளம்..நேரடியாக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் புகார் அளிக்க புதிய இணையதளம்..

ஆண்டின் இரண்டாவது சூரிய

இந்த 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தை நாம் டிசம்பர் 4 ஆம் தேதி காண இயலும். இந்த அடுத்த சூரிய கிரகண நிகழ்வு இந்தியாவில் காணப்படாது என்பது வேதனை. தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள் மற்றும்
அண்டார்டிக்காவைச் சேர்ந்தவர்கள் 2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தைக் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Today solar eclipse: In what areas can you see? NASA information: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X