Happy Birthday MS Dhoni.. நம்ம தல எதிரணிகளை கதறவிட்ட கதை தெரியும்.. ChatGPT-ஐ திணறவிட்ட கதை தெரியுமா?
எம்எஸ் தோனியை (MS Dhoni) பார்க்கும் போதெல்லாம், அவரை பற்றி பேசும் போதெல்லாம்.. "இனிமேல் இப்படி ஒருவன் பிறக்கப்போவதில்லை" என்கிற எண்ணம் உள்ளூற ஏற்பாட்டால்.. நீங்களும் ஒரு தோனி ரசிகரே! தனது செயல்களால் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒன்றாக உருமாறியுள்ள தோனிக்கு இன்று (ஜூலை 7) பிறந்தநாள்!
42வது பிறந்தநாளை கொண்டாடும் தோனியின் "பழைய" சாதனைகளை பற்றி பேசினால் உங்களில் சிலருக்கு கண்டிப்பாக சலிப்பாகவே இருக்கும். ஏனென்றால் அவரின் பெரும்பாலான சாதனைகளை நம் பலருக்கும் அத்துப்படி. எனவே நம்ம தல எதிரணிகளை கதற விட்ட கதைகளை ஓரங்கட்டிவிட்டு, சாட்ஜிபிடி-ஐ திணறவிட்ட கதை ஒன்றைப்பற்றி பேசுவோம்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஒய்வு பெற்றுவிட்ட தோனி தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வந்தாலும் கூட, ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் "ஒய்வு" குறித்து ஏதாவது ஒரு கேள்வி கேட்கப்படத்தான் செய்கிறது; அதற்கு தோனி "இப்போதைக்கு இல்லை" என்கிற பதிலை சிரித்திக்கொண்டே சொல்லத்தான் செய்கிறார்.
இந்த கேள்வியால் சலிப்படைந்து ஒரு ரசிகர் "தோனி ஒய்வு பெறத்தான் வேண்டுமா?" என்கிற கேள்வியை ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-யிடம் கேட்டுள்ளார். அதற்கு சாட்ஜிபிடி சொன்ன பதில் என்ன என்பதை படிக்கும் எவருமே.. "நம்ம தலைவன் தோனி" ஏஐ சாட்பாட்-ஐ கூட திணறவிட்டு இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
"இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களில் எம்எஸ் தோனியும் ஒருவர். கடந்த 2008 ஆம் ஆண்டு லீக் தொடங்கியதில் இருந்து சிஎஸ்கே என்று சுருக்கமாக அழைப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.
இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில், ஐபிஎல் போட்டிகளில் தோனியின் ஃபார்ம், சில ரசிகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. 2020 ஐபிஎல் சீசனில், அவர் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 200 ரன்கள் மட்டுமே எடுத்து இட்டுண்டஹார். பின்னர் 2021 சீசனில் 7 போட்டிகளில் விளையாடி வெறும் 84 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
அவரது ஃபார்மில் குறைகள் இருந்தபோதிலும் கூட, அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் ஒரு நல்ல தலைவராகவும், சிறப்பான விக்கெட் கீப்பராகவும் இருக்கிறார். அவரின் அனுபவமும், தந்திரோபாய புத்திசாலித்தனமும் தான் சிஎஸ்கே அணிக்கான மிகப்பெரிய செல்வமாகும். குறியோராக அழுத்தத்தின் போது அமைதியாகவும் இருக்கும் அவருடைய திறன்!
எனவே, தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவாரா இல்லையா என்பது அவரது உடற்தகுதி, ஃபார்ம், அணியின் தேவைகள் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் தான் அமைய வேண்டும். தோனி தான் உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அணியின் வெற்றிக்கு தொடர்ந்து பங்களிக்க முடியும் என்றும் நம்பினால் அவர் ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாட வேண்டும்.
இருப்பினும், அவர் தனது நேரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தாலோ, அல்லது இனி அவரால் தேவையான அளவில் செயல்பட முடியாது என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் நம்பினாலோ, அவர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிக்கலாம். இருப்பினும் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை தோனி தான் முடிவு செய்ய வேண்டும்!" என்று சாட்ஜிபிடி பதில் அளித்துள்ளது.
அதாவது - நீங்களோ, நானோ அல்லது தோனியை வெறுப்பவர்களோ அல்லது தோனியை நேசிப்பவர்களோ அல்லது சிஎஸ்கே நிர்வாகமோ அல்லது வேறு ஏதாவது ஒரு ஐபில் அணியோ அல்லது முன்னாள் கிரிக்கெட் வீரர்களோ நினைப்பதால், எதிர்பார்ப்பதால் இங்கே எதுவும் நடக்கப்போவதில்லை. எப்போது என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுக்கும் சக்தி இன்னமும் தோனியின் கிளவுஸ்களுக்குள் தான் இருக்கிறது என்பதை சாட்ஜிபிடியே ஒப்புக்கொண்டுள்ளது!


Click it and Unblock the Notifications








