Home
News

EPFO கணக்கு இருக்கா? இன்று உடனே இந்த வேலையை செய்து முடியுங்கள்.. வழிமுறைகள் இதோ..

இந்தியாவில் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாக உள்ளது. அதுவும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் என்றே தனித்தனி PF கணக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த PF கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் பி.எப் பயனர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் வங்கி கணக்குகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடு 2025 பிப்ரவரி 15-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது இந்த கட்டாய செயல்முறை முடிக்க ஊழியர்களுக்கு இன்று வரை மட்டுமே அவகாசம் உள்ளது. இதற்கான காலக்கெடு முன்பு ஜனவரி 15 என நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின்பு இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. கடைசியாகப் பிப்ரவரி 15ம் தேதிக்குள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் வங்கி கணக்குகளை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

EPFO கணக்கு இருக்கா? இன்று உடனே  இந்த வேலையைசெய்து முடியுங்கள்..

குறிப்பாக யுனிவர்சல் கணக்கு எண் (UAN) என்பது ஒரு EPFO இன் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தனித்துவமான மற்றும் நிரந்தர 12 இலக்க எண்ணாகும். குறிப்பாக இந்த யுனிவர்சல் கணக்கு எண் ஒரு பணியாளரின் வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் பல்வேறு EPFO ​​சேவைகளை அணுக UAN ஐ செயல்படுத்துவது மிக முக்கியம் ஆகும்.

இந்த UAN செயல்படுத்தப்பட்டதும் ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளை ஆன்லைனில் எளிதாக நிர்வகிக்க முடியும். அதன்படி ஆன்லைனில் PF பாஸ்புக்கைப் பார்க்கவும் பதிவிறக்கவும் செய்யலாம். அதேபோல் ஆன்லைனில் பிஎஃப் முன்பணத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் உங்கள் கோரிக்கையின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம். இதுபோன்ற பல நன்மைகள் இதில் உள்ளன.

இதுதவிர வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை - ஈஎல்ஐ (Employment Linked Incentive- ELI) திட்டத்தை பெறுவதற்கு யுஏஎன் ஆக்டிவேட் (UAN Activate) செய்ய வேண்டும். குறிப்பாக ஈபிஎப்ஓ தொழிலாளர்களுக்கு யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் - யுஏஎன்(Universal Account Number - UAN) மூலம் மட்டுமே திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது . எனவே நடப்பாண்டில் பணிக்கு சேர்ந்த் தொழிலாளர்கள் அவர்களின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை பெறுவதற்கு அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். சரி இப்போது யுஏஎன் ஆக்டிவேட் செய்ய வழிமுறைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஸ்டெப்-1: unifiedportal-mem.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ EPFO இணையதளத்தைப் பார்வையிடவும். இந்த தளத்தில் லிங்குகள் (Important Links) பக்கத்தின் கீழ் இருக்கும் ஆக்டிவேட் யுஏஎன் (Activate UAN) எனும் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

ஸ்டெப்-2: அடுத்து உங்களது ஈபிஎப்ஓ விவரங்கள் கேட்கப்படும். அதில் யுஏஎன் நம்பர், ஆதார் நம்பர், உங்களது பெயர் மற்றும் பிறந்த தேதி கொடுக்கப்பட வேண்டும். இதுதவிர உங்களது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரும் கொடுக்க வேண்டும்.

EPFO கணக்கு இருக்கா? இன்று உடனே  இந்த வேலையைசெய்து முடியுங்கள்..

ஸ்டெப்-3: நீங்கள் அனைத்து விவரங்களையும் நிரப்பிய பின்னர்'Get Authorization PIN' என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெறுவீர்கள். OTP ஐ உள்ளிட்டு அதைச் சரிபார்க்கவும்.

ஸ்டெப்-4: குறிப்பாக அனைத்தும் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் UAN எண் ஆக்டிவேட் செய்யப்படும். அதன்பின்பு EPFO ​​சேவைகளை அணுக பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லையும் (பாஸ்வேர்டு) பெறுவீர்கள். ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்குகள் அல்லது பிற EPFO ​​சேவைகளை அணுகுவதில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க இந்த செயல்முறையை உடனே முடிக்க வேண்டும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Today is the Last Date to Activate UAN for EPFO's ELI Scheme: How to Activate UAN to Get ELI Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X