சைலன்ட் ஆக Google பார்த்த வேலை! Search பக்கத்தில் "இதை" கவனிச்சீங்களா?

|

எப்படியும் 2022 சுதந்திர தின செய்திகள், வாழ்த்துக்கள், புகைப்படங்கள், வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை தேடுவதற்காக, அல்லது வேறு எதை பற்றியாவது அறிந்து கொள்வதற்காக.. கண்டிப்பாக கூகுள் Search Page-க்கு செல்வீர்கள். அப்படி போகும் போது, கூகுளின் சேர்ச் பேஜில் "பளபளக்கும்" Google Doodle-ஐ கவனிக்க தவறாதீர்கள்!

அதென்ன Doodle?

அதென்ன Doodle?

அது - இந்தியாவின் 76 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகுள் டூடுல் ஆகும். இந்திய சுதந்திர தினத்தை பெருமைப்படுத்தும் நோக்கத்தின் கீழ், உலகின் மாபெரும் தேடுபொறி நிறுவனமான கூகுள், தனது Search (தேடல்) பக்கத்தில் ஒரு ஸ்பெஷல் டூடுலை காட்சிபடுத்துகிறது.

இந்த டூடுலை கேரளாவை சேர்ந்த 'கெஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' ஆன நீதி (Neethi) உருவாக்கி உள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!

காத்தாடிகளை சுற்றிய கலாச்சாரம்!

காத்தாடிகளை சுற்றிய கலாச்சாரம்!

ஓவிய கலைஞர் நீதி வரைந்துள்ள இந்த கூகுள் டூடுல் ஆனது, காத்தாடிகளைச் சுற்றியுள்ள (இந்திய) கலாச்சாரத்தை சித்தரிக்கிறது.

இந்த டூடுல், பிரகாசமான மற்றும் அழகான காத்தாடிகளை உருவாக்கும் கைவினை கலையில் தொடங்கி, ஒரு சமூகம் ஒன்றிணைவதன் மகிழ்ச்சியான அனுபவம் வரை அனைத்தையும் பிரதிபலிக்கிறது.

இந்த டூடுல், "பரந்த விரிந்த வானத்தில் உயர்ந்து நிற்கும் காத்தாடிகள் ஆனது, நாம் அடைந்திருக்கும் பெரிய உயரங்களின் வண்ணமயமான அடையாளமாகும்" என்றும் கூகுள் குறிப்பிட்டுள்ளது.

காத்தாடிகள் -  இனிமையான நினைவுகளில் ஒன்றாகும்!

காத்தாடிகள் - இனிமையான நினைவுகளில் ஒன்றாகும்!

இந்த டூடுலுக்கு பின்னால் உள்ள எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் போது, ஓவிய ​​கலைஞர் நீதி, "எங்கள் இனிமையான நினைவுகளில் ஒன்றான காத்தாடிகள், பழமையான மற்றும் பாரம்பரியமான இந்திய சுதந்திர தின விழாக்களின் ஒரு பகுதி ஆகும்" என்று கூறி உள்ளார்.

மேலும் "காத்தாடிகள் கலை வெளிப்பாட்டிற்கான ஒரு 'அவுட்லெட்' ஆகும். அவற்றில் பல வகையான நவநாகரீக கருப்பொருள்கள் அல்லது சமூக செய்திகள் இருக்கும். இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், நமது தேசிய நிறங்களை, அன்பை சித்தரிக்கும் காத்தாடிகளை நான் வரைந்துள்ளேன்!" என்றும் நீதி குறிப்பிட்டுள்ளார்!

Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே "இதை" செய்யுங்க!

பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி!

செங்கோட்டையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றினார். அதை தொடர்ந்து அவர் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையானது தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பிரதமரின் இந்த உரையை பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (பிஐபி) யூடியூப் சேனல் மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு!

ஜனாதிபதி திரௌபதி முர்மு!

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்முவும், ஆகஸ்ட் 14, ஞாயிற்றுக்கிழமை அன்று, நாட்டு மக்களிடம் உரையாற்றினார். நினைவூட்டும் வண்ணம், கடந்த மாதம் திரௌபதி முர்மு இந்தியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது தவிர்த்து, நாடு முழுவதும் உள்ள இந்திய மக்கள் தத்தம் வீடுகளில் மூவர்ண கொடிகளை ஏற்றி, தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். உங்கள் வீட்டில் தேசிய கொடி ஏற்றி விட்டீர்களா?

Most Read Articles
Best Mobiles in India

English summary
Today's Google Doodle Celebrates 2022 Independence Day of India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X