Home
News

நாள் ஒன்றிற்கு 7ஜிபி; ஒரே பிளானில் ஏர்டெல் - ஜியோவை ஓரங்கட்டிய ஐடியா.!

இந்த ரூ.998/- ஆனது நிறுவனத்தின் மேஜிக் ஆபர் ரூ.3,300/- கேஷ்பேக் வாய்ப்பின் கீழும் அணுக கிடைக்கமென்பதும் குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பாணியை பின்பற்றி மேல் எழும்பும் (பார்தி ஏர்டெல் உட்பட) பல இந்திய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஐடியா செல்லுலார், ஜியோவிற்கு எதிரான அதன் ரூ.998/- என்கிற புதிய ப்ரீபெய்டு அன்லிமிடெட் திட்டமொன்றை அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள ஐடியா செல்லுலார் ரூ.998/- ப்ரீபெய்ட் பேக் ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.799/- உடன் நேரடியாக போட்டியிடுவது மட்டுமின்றி அதே விலையில் கிடைக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.799/- உடனும் போட்டியிடுகிறது. இந்த மூன்று திட்டங்களின் நன்மைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் என்ன.? இதில் எந்த திட்டம் சிறப்பான டேட்டா நன்மையை வழங்குகிறது.? எது நீடித்த செல்லுபடியை கொண்டுள்ளது என்பதை பற்றி விரிவாக காண்போம்.!

நாள் ஒன்றிற்கு 5ஜிபி.!

நாள் ஒன்றிற்கு 5ஜிபி.!

அறிவிக்கப்பட்டுள்ள ரூ.998/- ஆனது நாள் ஒன்றிற்கு 5ஜிபி அளவிலான 4ஜி/2ஜி டேட்டாவை வழங்குகிறது.உடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிது. மொத்தம் 35 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, ஐடியா பயன்பாடு மற்றும் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தின் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்குமென்பதும், உடன் இந்த ரூ.998/- ஆனது நிறுவனத்தின் மேஜிக் ஆபர் ரூ.3,300/- கேஷ்பேக் வாய்ப்பின் கீழும் அணுக கிடைக்கமென்பதும் குறிப்பிடத்தக்கது.

அழைப்பு நன்மைகளுக்கான வரம்பு.!

அழைப்பு நன்மைகளுக்கான வரம்பு.!

இந்த புதிய பேக் ஆனது நிறுவனத்தின் 4ஜி வோல்ட் சோதனைகளை மையமாக கொண்டு வெளியாகியுள்ளதென்பது வெளிப்படை. அழைப்பு நன்மைகளை பொறுத்தமட்டில், வாரத்திற்கு 100 தனிப்பட்ட எண்கள் மட்டுமே என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு சேர்த்து, வாரத்திற்கு 1000 நிமிடங்கள் மற்றும் நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் என்றும் அழைப்புகள் மட்டுமே என்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ள வரம்புகளை மீறினால், 1 நொடிக்கு 1 பைசா என்கிற விகிதத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஜியோவின் ரூ.799/-ன் நன்மைகள்.!

ஜியோவின் ரூ.799/-ன் நன்மைகள்.!

மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.799/- ஆனது நாள் ஒன்றிற்கு 5ஜிபி அளவிலான அதிவேக 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கி வருகிறது.

பார்தி ஏர்டெல் ரூ.799/-ன் நன்மைகள்.!

பார்தி ஏர்டெல் ரூ.799/-ன் நன்மைகள்.!

இறுதியாக, 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ,799/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில், நாள் ஒன்றிற்கு 3.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகள் அணுக கிடைக்கும். இந்த திட்டத்தின் டேட்டா நன்மைகளானது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய இரு திட்டங்களை விடவும் குறைவாகும்.

ஓவர் டேக்கிங் ஜியோ, ஏர்டெல்.!

ஓவர் டேக்கிங் ஜியோ, ஏர்டெல்.!

தவிர, அறிமுகமாகியுள்ள ஐடியா ரூ,998/- ஆனது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் திட்டங்களை விட நீண்ட காலம் செல்லுபடியாகும் தன்மை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் விலையிலான ஐடியா செல்லுலார் திட்டங்களை பொறுத்தமட்டில், ரூ.199/- என்கிற சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

7ஜிபி/நாள் வழங்கும் ஐடியா ரூ.1,298/- பேக்.!

7ஜிபி/நாள் வழங்கும் ஐடியா ரூ.1,298/- பேக்.!

ஐடியாவின் ரூ.998/- பேக் உடன் சேர்த்து நாள் ஒன்றிற்கு 7 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ரூ.1,298/- திட்டமும் அறிமுகமாகியுள்ளதாக டெலிகாம்டால்க்.இன்ஃபோ மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 35 நாட்களுக்கு செல்லுப்படியாகும் இந்த ரூ.1,298/- பேக் ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
ஐடியா ரூ.199/-ன் நன்மைகள்.!

ஐடியா ரூ.199/-ன் நன்மைகள்.!

ஐடியா ரூ.199/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில், இது நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி தரவு, 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 தினங்களுக்கும் தினசரி மற்றும் வாராந்திர வரம்பு கொண்ட குரல் நன்மைகள் ஆகியவற்றை வழங்குகிறது. உடன் ரூ.309, ரூ.357, ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.509/- போன்ற சிறந்த திட்டங்களும் அணுக கிடைக்கிறது. மேலும் பல தொலைத்தொடர்பு துறை சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைதளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
To Take on Jio, Idea Launches Rs. 998 Pack With 5GB Data Per Day for 35 Days. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X