சத்தமில்லமால் பிராட்பேண்ட் சேவையை துவங்கிய டாடா ஸ்கை.!
மேலும் ஜியோ நிறுவனத்தின் ஃபைபருக்க போட்டியாக தான் டாடா ஸ்கை நிறுவனம் இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது டாடா ஸ்கை நிறுவனம், தற்சமயம் இந்நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் உள்ள 12 நகரங்களில் துவங்கியுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் 100எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவையை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஜியோ நிறுவனத்தின் ஃபைபருக்க போட்டியாக தான் டாடா ஸ்கை நிறுவனம் இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, பின்ப ஜிகா ஃபைபருக்கான முன்பதிவு தொடங்கிய போதும் டாடா ஸ்கை உள்ளிட்ட மற்ற
நிறுவனங்கள் வேகமாக தங்கள் சேவையை தற்சமயம் தொடங்கி வருகின்றன.
சென்னை, மும்பை, டெல்லி,குர்கான், காசியாபாத், நொய்டா, தானே, புனே, போபால், அகமதாபாத், மிரா பயந்தர் மற்றம் பெங்களூரு போன்ற பகுதிகளில் இந்த டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டாடா ஸ்கை நிறுவனம் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களையும் வெளியிட்டள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி ஒரு மாதத்திற்கு 5,10,30,50,100எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவை முறையே ரூ.999, ரூ.1150, ரூ.1500, ரூ.1800 மற்றும் ரூ.2500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
3மாதங்களுக்கு 5,10,30,50,100எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவை முறையே ரூ.2997, ரூ.3450, ரூ.4500, ரூ.5400 மற்றும் ரூ.7500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
5மாதங்களுக்கு 5,10,30,50,100எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவை முறையே ரூ.4995, ரூ.5750, ரூ.7500, ரூ.9000 மற்றும் ரூ.12500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
9மாதங்களுக்கு 5,10,30,50,100எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவை முறையே ரூ.8991, ரூ.10350, ரூ.13500, ரூ.16200 மற்றும் ரூ.22500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

12மாதங்களுக்கு 5,10,30,50,100எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவை முறையே ரூ.11988, ரூ.13800, ரூ.18000, ரூ.21600 மற்றும் ரூ.30000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications