எஸ்கேப்.. Jio விலை உயர்வில் இருந்து 13 மாசத்துக்கு தப்பிக்க செம்ம வழி இருக்கு.. அதுவும் மாசம் ரூ.369 செலவுல!
ஜூலை 3 ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பல ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகள் 12% முதல் 25% வரை அதிகரிக்க உள்ளன. இவ்வளவு விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக.. போஸ்ட்பெயிட் சேவையில் இணைந்து விடலாம் போலயே என்கிற எண்ணம் அல்லது முடிவு உங்களிடம் இருந்தால்.. ஜியோ பைபர் சேவையின்கீழ் கிடைக்கும் இந்த 13 மாத வேலிடிட்டி திட்டம் உங்களுக்கானதாக இருக்கலாம். அதென்ன திட்டம்? இதன்கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன ரிலையன்ஸ் ஜியோவின் எப்டிடிஎச் (பைபர்-டு-தி-ஹோம்) பிரிவான ஜியோ பைபர் சேவையின் கீழ் 390 நாட்களுக்கான (அதாவது 13 மாதங்களுக்கான) பைபர் கனெக்ஷனை வழங்கும் ஒரு திட்டம் உள்ளது. வழக்கமாக, அதிகபட்சமாக 12 மாதங்களுக்கு தானே ஜியோ பைபர் கனெக்ஷன் கிடைக்கும் என்கிற சந்தகேம் உங்களுக்கு எழலாம். அறியதோர்களுக்கு, ஜியோ பைபர் அதன் அனைத்து வருடாந்திர திட்டங்களுடன் 30 நாட்களுக்கு கூடுதலாக (இலவசமாக) சேவையை வழங்குகிறது.

நீங்கள் எந்த வகையான இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும் திட்டத்தை தேர்வுசெய்தாலும், ஜியோ பைபர் சேவையின்கீழ் கிடைக்கும் திட்டத்தை 1 ஆண்டுக்கு / 12 மாதங்களுக்கு தேர்வு செய்தால்.. எந்த கட்டணமும் இல்லாமல் 30 நாட்களுக்கு கூடுதல் சேவையை முற்றிலும் இலவசமாக பெறுவீர்கள். அந்த அடிப்படையில் தான் இந்த திட்டம் 13 மாதங்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.
அதென்ன திட்டம்? நாம் இங்கே பேசுவது ரூ.4,788 மதிப்புள்ள ஜியோ பைபர் திட்டத்தை பற்றித்தான். மாதந்தோறும் ரூ.369 என்கிற செலவின் கீழ் இந்த திட்டம் 390 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு 30எம்பிபிஎஸ் என்கிற அளவிலான அப்லோட் மற்றும் டவுன்லோட் பதிவிறக்கம் இன்டர்நெட் ஸ்பீட் கிடைக்கும்.
டேட்டா நன்மையை பொறுத்தவரை, இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 3.3டிபி அல்லது 3300 ஜேபி அளவிலான மாதாந்திர டேட்டா கிடைக்கும். இது ஜியோ பைபர் சேவையின் மிகவும் மலிவான 1 ஆண்டு திட்டம் என்பதால், இதன்கீழ் எந்த விதமான ஓடிடி நன்மைகளும் கிடைக்காது. ஜியோ பைபர் சேவையின் கீழ் 150 எம்பிபிஎஸ் ஸ்பீட் அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்பீடை வழங்கும் திட்டங்களுடன் தான் ஓடிடி நன்மைகள் வழங்கப்படுகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தனது ஜியோ பைபர் சேவையை விரிவுபடுத்தியுள்ளது. ஜியோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் இந்த ஜியோ திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். புதிய ஜியோ பைபர் சேவையை பெற விரும்புபவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஜியோ ஸ்டோரை அணுகலாம் அல்லது ஜியோ வலைத்தளம் வழியாக ரிஜிஸ்டர் செய்யலாம்
ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை, ரூ.179 ரீசார்ஜ் ரூ.199 ஆகவும், ரூ.455 ரீசார்ஜ் ரூ.509 ஆகவும், ரூ.1799 ரீசார்ஜ் ரூ.1999 ஆகவும், ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.29 ரீசார்ஜ் ரூ.33 ஆகவும், ரூ.65 ரீசார்ஜ் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வோடாபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை, ரூ.179 ரீசார்ஜ் ரூ.199 ஆகவும், ரூ.459 ரீசார்ஜ் ரூ.599 ஆகவும், ரூ.1799 ரீசார்ஜ் ரூ.1999 ஆகவும், ரூ.269 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.319 ரீசார்ஜ் ரூ.379 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல ரூ.479 ரீசார்ஜ் ரூ.579 ஆகவும், ரூ.539 ரீசார்ஜ் ரூ.649 ஆகவும், ரூ.719 ரீசார்ஜ் ரூ.859 ஆகவும், ரூ.839 ரீசார்ஜ் ரூ.979 ஆகவும், ரூ.2899 ரீசார்ஜ் ரூ.3499 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.39 ரீசார்ஜ் ரூ.48 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பார்தி ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ் ரூ.449 ஆகவும், ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ்ரூ.449 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து ரூ.479 ரீசார்ஜ் ரூ.579 ஆகவும், ரூ.549 ரீசார்ஜ் ரூ.649 ஆகவும், ரூ.719 ரீசார்ஜ் ரூ.859 ஆகவும், ரூ.839 ரீசார்ஜ் ரூ.979 ஆகவும், ரூ.2999 ரீசார்ஜ் ரூ.3599 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.29 ரீசார்ஜ் ரூ.33 ஆகவும், கடைசியாக ரூ.65 ரீசார்ஜ் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








