பிஎஸ்என்எல் அதிரடி : ரூ.339/-க்கு ஜியோவை விட 2 மடங்கு அதிக டேட்டா.!
டேட்டா மட்டுமின்றி இன்னும் பல நன்மைகளை இத்திட்டம் வழங்குகிறது.!
இந்திய அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனமானது ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கத்தில் அதன் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரைம் ஆண்டு சந்தாவிற்கு ரூ.99/- மற்றும் மாதாந்திர சேவைக்கட்டணமாக ரூ.303/- என்றும் அதன் கட்டண சேவையை வகுத்துள்ள நிலையில் ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் போட்டி முனைப்பு கட்டண திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.
இப்போது அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மிகவும் மலிவான விலையில் ரிலையன்ஸ் ஜியோவை விட இரண்டு ,மடங்கு அதிக டேட்டா தருவதுடன், இரண்டு மடங்கு தினசரி பயன்பாடு எல்லையையும் வழங்கும் அதிரடி திட்டமொன்றை அறிவித்துள்ளது. கடந்த வாரமே வெளியான இந்த தகவல் இப்போது அதிகாரப்பூர்வமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.!

ரூ.339/-
நேற்று (செவ்வாய்க்கிழமை) அரசு நடத்தும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் அதன் புதிய திட்டமான ரூ.339/- பிளானை அறிமுகம் செய்தது.

56ஜிபி
28 நாட்கள் செல்லுப்படியாகும் இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான தரவை பெறுவர். அதாவது ரூ.339/-க்கு மொத்தம் 56ஜிபி டேட்டா பெறுவர்.

தினசரி 2ஜிபி தரவு
முன்பு 28 நாட்களுக்கு 1ஜிபி அளவிலான தரவு உடன் எந்த நெட்வொர்க் உடன் வரம்பற்ற அழைப்புகளை வழங்கிய ரூ.339/- திட்டம் இப்போது, ஒரு தினசரி 2ஜிபி தரவு எல்லை பயன்பாடு தொப்பி கொண்ட 28 நாட்கள் செல்லுபடியாகும் தரவுடன் எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற அழைப்புகளை வழங்கும்.

25 நிமிடங்கள்
எனினும், இந்த ரூ.339/- திட்டமானது பிஎஸ்என்எல் பிணையத்தில் பயனர்களுக்கு மட்டுமே, நாள் ஒன்றிற்கு 25 நிமிடங்கள் என்ற எல்லைக்கோடு கொண்டு வரம்பற்ற அழைப்புகளை செய்ய அனுமதிக்கும். ஒவ்வொரு நாளின் 25 நிமிடங்களுக்கு பிறகு, ஒவ்வொரு பயனர் நிமிடத்திற்கு 25 பைசா வசூலிக்கப்படும் என்று அறிக்கை கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாத இறுதிக்குள்
மேலும் வெளிப்படையாக ஜியோவுடன் போட்டிபோடும் முனைப்பில் மார்ச் மாத இறுதிக்குள் திட்டத்தை பெற்றால் ஒரு ஆண்டு நாள் ஒன்றுக்கு 1ஜிபி என்ற எல்லை கொண்ட தரவும், வரம்பற்ற அழைப்பையும் அனுபவிக்கலாம் என்றும் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளதாக முன்பு வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. மற்றும் இந்த புதிய திட்டமான ரூ.339/- ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.!

நாள் ஒன்றுக்கு 2ஜிபி
"ஜியோ மற்றும் பிற தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் நோக்கில் நாங்கள் மாதம் ரூ.339/- என்ற மலிவான திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், நுகர்வோர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஜிபி கிடைக்கும்" என சஞ்சீவ் தியாகி, பொது மேலாளர், பிஎஸ்என்எல் அறிவித்துள்ளார். அதாவது ஜியோவை விட 2 மடங்கு அதிக டேட்டா வரம்பு.!

ரூ.345/-
ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியில், ஏர்டெல் அதன் வரம்பற்ற அழைப்புகள் சேர்ந்த நாள் ஒன்றுக்கு 1 ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் ரூ.345/- என்ற புதிய சீரமைக்கப்பட்ட திட்டத்தை கொண்டு வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த ஏர்டெல் திட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் குரல் அழைப்புகளுடன் இரவில் 500எம்பி மற்றும் பகலில் 500 எம்பி என மொத்தம் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

மேலும் படிக்க
ஏர்டெல், ஜியோவிற்கு நெருக்கடி : கூட்டணி அமைக்கிறது ஐடியா - வோடாபோன்.!


Click it and Unblock the Notifications