வங்கி மோசடிகளை தடுக்க பிளாக்செயின் நெட்வொர்க்கை உருவாக்கிய இன்போசிஸ்.!

இன்போசிஸ் நிறுவனம் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 7 தனியார்த்துறை வங்கிகளுக்கான வர்த்தக நிதி வலையமைப்பை(நெட்வொர்க்) வடிவமைத்துள்ளது.

|

இன்போசிஸ் நிறுவனம் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 7 தனியார்த்துறை வங்கிகளுக்கான வர்த்தக நிதி வலையமைப்பை(நெட்வொர்க்) வடிவமைத்துள்ளது. இதன் மூலம் வங்கித்துறையில் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும்.மேலும் வங்கிகள் வழங்கும் சேவைகள் விரிவாக்கப்படும்.

பணத்தாசை காட்டி 8000 பேரிடம் ரூ.2000 கோடி அடித்த அமித் பரத்வாஜ்; எப்படி.?பணத்தாசை காட்டி 8000 பேரிடம் ரூ.2000 கோடி அடித்த அமித் பரத்வாஜ்; எப்படி.?

இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான இன்போஸிஸ் நிறுவனத்தின் பினாக்கில்(Finacle) மென்பொருள், பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்களின் மூல செயல்பாடுகளை அளிக்கிறது. இந்நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகள் இந்த வலையமைப்பில் இணைய பேச்சுவார்த்தை நடப்பதாக கூறுகிறார் நிறுவனத்தின் உயரதிகாரி.

வங்கி மோசடிகளை தடுக்க பிளாக்செயின் நெட்வொர்க்கை உருவாக்கிய இன்போசிஸ்.!

ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் பணபரிமாற்றத்தின் அனைத்து படிநிலைகளையும் வலையமைப்பின் உறுபினர்களுடன் பகிரமுடியும் என்பதால், வங்கிகள் தனித்தனியாக செயல்படும்போது ஏற்படும் அதிக செலவு மற்றும் பிழைகளை தவிர்க்கமுடியும்.

எச்.எஸ்.பி.சி ஹோல்டிங் நிறுவனம் கூறும் போது, உலகின் முதல் வர்த்தக பணபரிவர்த்தனையை இந்த ப்ளாக்செயின் தளத்தில் செய்ததாகவும், இது மல்டி-டிரில்லியன்-டாலர் வர்த்தக பிரிவின் செயல்திறனை கூட்டியுள்ளதாகவும் கூறியுள்ளது.

வங்கி மோசடிகளை தடுக்க பிளாக்செயின் நெட்வொர்க்கை உருவாக்கிய இன்போசிஸ்.!

பஞ்சாப் நேசனல் வங்கியில் நடந்த 2பில்லியன் டாலர் மோசடிக்கு பிறகு, இன்போசிஸ் நிறுவனம் வங்கித்துறையில் இந்த வர்த்தக நிதி வலையமைப்பை வடிவமைத்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த வலையமைப்பில், "விற்பவர்கள், வாங்குபவர்கள், இருசாராரின் வங்கிகள் மற்றும் வலையமைப்பில் உள்ள ஒழுங்குமுறையாளர்" க்கு பணபரிவர்த்தனைகள் வெளிப்படை தன்மையுடன் இருக்கும் என்கிறார் ஃபினாக்கல் தலைவர் ராஜசேகர மய்யா.

வங்கி மோசடிகளை தடுக்க பிளாக்செயின் நெட்வொர்க்கை உருவாக்கிய இன்போசிஸ்.!

"இத்தகைய மேம்படுத்தப்பட்ட திறன்களுடன், இந்த தொழில்நுட்பம் பஞ்சாப் நேசனல் வங்கியில் நடந்தது போன்ற அனைத்து மோசடிகளையும் தடுக்கும் " என மேலும் கூறினார்.

பஞ்சாப் நேசனல் வங்கியில் நடந்த மோசடிக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் அனைத்து கடன்வழங்குபவர்களும் உத்திரவாத கடிதம் வழங்கக்கூடாது என ரிசர்வ் வங்கி தடைவிதித்தது.ஆனாலும் வங்கி உத்திரவாத பத்திரங்களுக்கு தடையில்லை. இவை இறக்குமதியாளர்கள் வெளிநாட்டு வியாபாரத்திற்காக பயன்படுத்தும் வர்த்தக பத்திரங்கள் ஆகும்.

வங்கி மோசடிகளை தடுக்க பிளாக்செயின் நெட்வொர்க்கை உருவாக்கிய இன்போசிஸ்.!

இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த ப்ளாக்செயின் தொழில்நுட்ப வர்த்தக வலையமைப்பில் , ஐசிஐசிஐ, ஆக்சிஸ், கோடாக் மகேந்திரா, யெஸ் பேங்க், இண்டஸ்லேண்ட், ஆர்.பி.எல் மற்றும் சவுத் இண்டியன் பேங்க் போன்ற வங்கிகள் இணைந்துள்ளன. மேலும் ஆஸ்திரேலியா உள்பட பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளது இன்போசிஸ்.
Best Mobiles in India

English summary
To avoid PNB-like fraud, Infosys sets up blockchain-based network with banks; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X