உங்க பேஸ்புக்கில் குற்றம் இருக்கு: ஒப்புக் கொண்டு மதுரை மாணவருக்கு 1000 டாலர் பரிசு!

|

பேஸ்புக் ரைட்ஸ் மேனேஜரில் உள்ள குறையை கண்டறிந்து சுட்டிக்காட்டிய மதுரை மாணவருக்கு பேஸ்புக் நிறுவனம் 1000 டாலர் பரிசு வழங்கியுள்ளது.

சமூகவலைத்தளத்தில் பிரதான ஒன்று

சமூகவலைத்தளத்தில் பிரதான ஒன்று

சமூகவலைதளம் என்பது இந்த காலக்கட்டத்தில் பிரதான ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் பேஸ்புக், வாட்ஸ் ஆப் என்பதில் அதிகப்படியானோர் அக்கவுண்ட் வைத்துள்ளனர். இதில் அவ்வப்போது குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படுவதோடு அதை சரி செய்யும் பணியும் நடந்து வருகிறது.

பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை

பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை

அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை சமூகவலைதளப் பக்கத்தில் செலவிட்டு வருகின்றனர். இதில் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் கிஷோர் என்ற ஒருவர் தனது நேரத்தை பயனுள்ளதாக செலவிட்டு சமூகவலைதளமான பேஸ்புக் பக்கத்தின் ரைட்ஸ் மேனேஜர் பிரிவில் உள்ள குற்றத்தை கண்டறிந்துள்ளார்.

பேஸ்புக் ரைட்ஸ் மேனேஜர்

பேஸ்புக் ரைட்ஸ் மேனேஜர்

பேஸ்புக் ரைட்ஸ் மேனேஜர் என்ற பிரிவில் உள்ள தவறுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். பேஸ்புக் மூலமாக தனியார் ஊடக நிறுவனங்கள் செய்திகள், ஆடியோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றன.

ரைட்ஸ் மேனேஜர் என்கிற வசதி

ரைட்ஸ் மேனேஜர் என்கிற வசதி

இதுபோன்ற நிறுவனங்களுக்கு ரைட்ஸ் மேனேஜர் என்கிற வசதியை பேஸ்புக் வழங்குகிறது. இதை ஆக்டிவேட் செய்து நிறுவனங்கள் தங்களது வீடியோ, ஆடியோ, செய்திகளை பகிரலாம். அப்படி பேஸ்புக்கில் பதிவேற்றும் வீடியோ, ஆடியோக்களுக்கு தனியார் நிறுவனங்கள் காப்புரிமை கோரலாம்.

தனியார் நிறுவனங்களால் காப்புரிமை பெற்ற வீடியோ, ஆடியோ

தனியார் நிறுவனங்களால் காப்புரிமை பெற்ற வீடியோ, ஆடியோ

தனியார் நிறுவனங்களால் காப்புரிமை பெற்ற வீடியோ, ஆடியோக்களை வேறு நபர்கள் தங்களது பேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றும் செய்யலாம். அப்படி பதிவேற்றம் செய்யும் போது பிரைவேட், பப்ளிக் என்கிற இரண்டு பிரிவில் பதிவேற்றலாம். இருப்பினும் பிரைவேட் பிரிவில் பதிவேற்றம் செய்யும்போது அந்த நபரின் விவரங்கள் காண்பிக்கக் கூடாது. இது காப்புரிமை பெற்றதால் கிரியேட்டரின் பேஸ்புக்கில் காண்பிக்கக் கூடாது. இதை தவறு என்று உயர்ந்த மதுரையை சேர்ந்த மாணவர் கிஷோர் பேஸ்புக்கிற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

1000 டாலர் பரிசு

1000 டாலர் பரிசு

இதையடுத்து மதுரை மாணவர் சுட்டிக்காட்டிய தவறுகளை சரி செய்ததோடு அந்த மாணவருக்கு 1000 டாலர் பரிசாக அளித்துள்ளது. இது இந்திய மதிப்பின்படி ரூ.77 ஆயிரம் ஆகும். அதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் இது போன்று மேலும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கும்படி பேஸ்புக் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Tn young get reward 1000 dollar from facebook

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X