இனி இதற்கும் ஆதார் கட்டாயம் ஆகிறது.. கல்வி, திருமணம், மகப்பேறு உதவி.. முதியோர் ஓய்வூதியமும் கூட!
தமிழ்நாடு அரசு ஆனது சீர்மரபினர் சமூக நல வாரியத்தால் (Denotified Communities Welfare Board) செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு ஆதார் அங்கீகாரத்தை (Aadhaar authentication) கட்டாயமாக்கி உள்ளது. தகுதியான நபர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் நன்மைகள் சரியாக சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தின் கீழ் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
விபத்து உதவி, இயற்கை மரணம் மற்றும் இறுதிச் சடங்கு செலவுகள், கல்வி உதவி, திருமணம் மற்றும் மகப்பேறு உதவி, கண்ணாடிகளுக்கான திருப்பி செலுத்துதல் (Reimbursement for spectacles) மற்றும் முதியோர் ஓய்வூதியம் (Old age pension) ஆகிய நன்மைகள் இதில் அடங்கும்.

இதன்கீழ் - தடையற்ற அணுகலை உறுதி செய்வதற்காக, துறை மற்றும் அதை செயல்படுத்தும் நிறுவனங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் கிரேட்டர் சென்னை மாநகராட்சி ஆகியவைகள் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான ஏற்பாடுகளை செய்யும்.
தெளிவில்லாத அல்லது மோசமான பயோமெட்ரிக்ஸ் (Poor biometrics) அல்லது பிற சிக்கல்கள் காரணமாக ஆதார் சரிபார்ப்பு தோல்வியுற்றால், முக அங்கீகாரம் (Face authentication) அல்லது ஒடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு (OTP-based verification) போன்ற மாற்று முறைகள் வழங்கப்படும்.
இந்த விருப்பங்கள் எதுவும் வேலை செய்யவில்லை என்றால், க்யூஆர் குறியீடு மூலம் சரிபார்க்கப்பட்ட பிஸிக்கல் ஆதார் லெட்டரின் (Physical Aadhaar letter verified through its QR code) அடிப்படையில் நன்மைகள் வழங்கப்படலாம். இது - இதற்காகநியமிக்கப்பட்ட மையங்களில் ஸ்கேனர்கள் கிடைக்கும்.
இதேபோல ஆதார் தொடர்பான மற்ற முக்கியமான செய்திகளை பொறுத்தவரை, ஐஆர்சிடிசி (IRCTC) வழியாக தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஆதார் (Aadhaar) அடிப்படையிலான ஒடிபி (OTP) சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேவை அனைத்து முன்பதிவு முறைகளுக்கும் பொருந்தும்.
அதாவது நீங்கள் ஐஆர்சிடிசி போர்டல் (IRCTC Portal) வழியாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தாலும், பிஆர்எஸ் (PRS) எனப்படும் பயணிகள் முன்பதிவு அமைப்பு கவுண்டர்களில், ஆஃப்லைன் வழியாக முன்பதிவு செய்தலும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலமாக செய்தாலும் சரி இனி ஆதார் ஒடிபி அவசியம்!
ஐஆர்சிடிசி ஆனது முன்பதிவில் அமல்படுத்தியுள்ள இந்த மாற்றம் வெளிப்படைத்தன்மையை கொண்டுவருதல், பயணிகள் அங்கீகாரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி.. பல முகவர்கள் மொத்தமாக முன்பதிவு செய்வதன் மூலம் தட்கல் ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்துவதும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
இனிமேல் ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி அனுமதிக்கும். சரிபார்ப்புக்கான ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) உங்கள் ஆதாருடன் தொடர்புடைய மொபைல் எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும். குறுகிய தட்கல் முன்பதிவு காலக்கெடுவின் போது, ஒரு சுமூகமான அனுபவத்தை உறுதிசெய்யவும், கடைசி நேர சிக்கல்களைத் தவிர்க்கவும், உங்கள் ஆதார் அங்கீகாரத்தை முன்கூட்டியே முடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
இதேபோல முன்னதாக போஸ்ட் ஆபிஸ்ங்களில் இனிமேல் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் இ-கேஒய்சி செயல்முறையை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டி (RD) எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் (Recurring deposit) மற்றும் பிபிஎப் (PPF) எப்படி பப்ளிக் ப்ரொவிடென்ட் ஃபண்ட (Public provident fund) அக்கவுண்ட்களை திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய செயல்முறை ஆனது ஆர்டி மற்றும் பிபிஎப் அக்கவுண்ட் ஓப்பனிங்கை விரைவாகவும் காகிதமில்லாமலும் செய்ய வழிவகுக்கிறது. ஏற்கனவே இந்த வசதி - மாதாந்திர வருமான திட்டம் (Monthly Income Scheme), டைம் வைப்புத்தொகை (Time Deposit), கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate) ஆகியவற்றுக்கு கிடைத்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








